சித்திரையன்
ஓஃம் மகா கணபதி போற்றி!
ஸ்ரீஅகஸ்திய விஜய விநாயகர் நாமங்கள்
ஓம் ஸ்ரீவிநாயக நதி- விக்நேஸ்வர விரிவிரி கணபதி பூரணம்!
Note:- நாம தொகுப்புகள் from Sri Agasthia Vijayam books
ஓஃம் உத்தாலகாய நம:
ஸ்ரீஜேஷ்டா தேவியின் 108 போற்றிகள்
❋❋❋❋❋❋❋❋❋❋
-உடனடி பலன் தரும் பாராயண துதிகள்!*
பூமிபாலா
★ ஓஃம் கம் கணபதயே நமஹ
சற்குரு வேங்கடராம சுவாமிகள் அருளிச் செய்த
100 வாஸ்து மந்திரங்கள்
பூமி புத்ராய தீமஹி
தந்நோ மகாதேவ ப்ரசோதயாத்
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ஈஸ்வரப் ப்ரசோதயாத்
அஷ்ட ப்ரதீபாய தீமஹி
தந்நோ ஆதி வாஸ்து ப்ரம்ம ஸ்ரீப்ரசோதயாத்
ஓஃம் ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர மூர்த்தி போற்றி
ஓஃம் ஸ்ரீபூமா தேவி போற்றி
ஓஃம் ஸ்ரீசெவ்வாய் பகவான் போற்றி
ஓஃம் ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரமே போற்றி
★ ஓஃம் குஜ துதிக்கை திதியில் உத்தமர் கை கொடு!
★ பாலும் தேனும் காட்டி பாங்காய் தினம் படைப்பாய்!
ஓஃம் தத் புருஷாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ மகாதேவ ப்ரசோதயாத்
★ இரண்டு, ஐந்து, ஆறு வட்ட அக்ஷர உரு ஏற தாழ் திற!
★ இம்மந்திரங்களை அருளிச் செய்த சத்குரு ஸ்ரீவேங்கடராம சித்தர் போற்றி
★ மகாசத்குரு இடியாப்ப ஈச சித்தர் போற்றி போற்றி
ஓஃம். ஸ்ரீவாத்தியார் அருளிச் செய்த 100 வாஸ்து மந்திரங்கள் பூரணம்.
English Version – agasthiar.org/aum/vaasthu-mantras
சற்குரு வேங்கடராம சித்தர் அருளிச் செய்த "ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரம்" முன்னும் "ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான்" திருஉருவப் படம் முன்னும் அமர்ந்து இம்மந்திரங்களை ஓதுவது சாலச் சிறந்தது. தினசரி செவ்வாய் ஹோரைகளிலும், செவ்வாய்க் கிழமைகளிலும், 8 வாஸ்து நாட்களிலும் ஓதுவது வெகு சிறப்பு.
- Sri Agasthia Vijayam - ஃபிப்ரவரி2025
தம்புல் நடனபதி
அஷ்டோத்திர நாமாவளி
சித்ஸபேசானந்த தாண்டவாய நம :
ஓஃம் நமசிவாய.
ஓஃம் ரத்ன சபாயாய வித்மஹே
கனகசபாயாய தீமஹி
தந்நோ சபேச ப்ரசோதயாத்.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னியதில்லை
தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாக கொண்டு பாலித்து நட்டம்
பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
ஸ்ரீ சிவபெருமான் அர்ச்சனை :
ஓஃம் சிவாய நம :
ஓஃம் சம்பவே நம :
ஓஃம் பிநாகிநே நம :
ஓஃம் சசிசேகராய நம :
ஓஃம் வாமதேவாய நம :
ஓஃம் சங்கராய நம :
ஓஃம் சூலபாணயே நம :
ஓஃம் கங்காதராய நம :
ஓஃம் பரசுஹஸ்தாய நம :
ஓஃம் ஜடாதராய நம :
ஓஃம் ஸாம ப்ரியாய நம :
ஓஃம் பரமாத்மனே நம :
ஓஃம் ஸதாசிவாய நம :
ஓஃம் வீரபத்ராய நம :
ஓஃம் ருத்ராய நம :
ஓஃம் மஹாதேவாய நம :
ஸ்ரீ பரமேஸ்வராய நம : பில்வார்ச்சனம் சமர்ப்பயாமி.
ஓம் ஸ்ரீபசுபதி புண்யகால திருநடன தாண்டவாய நமோ நமஹ!
அசாத்ய சாதகர்
108 போற்றிகள்!
சரபேஸ்வர கவசம்
கவசஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த, ஸ்ரீசரபேஸ்வரத்துதி, பிரதோஷ நேரத்தில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையன்று அந்திநேரத்தில், பிரதோஷ நேரமும் ராகு காலமும் கூடுகின்ற மாலை 4.30 மணி முதல் 6-00 மணிக்குள்ளான சாயங்காலப் புனித நேரத்தில் ஓதுதல், இத்துதியின் பீஜாட்சர சக்திகளைப் அதிகமாக்கி பல்கிப் பெருகி நல்வரங்களை வர்ஷிக்கின்றன! எப்போதும் இதனை ஓதி வந்திடலாம். அச்சம், பீதி ஏற்படுகையில் அருகிலிருந்து அருளைத் தந்தருளும் திருமந்திரம்; தடைகளால் தடையுற்றிருக்கும் திருமணத்தை, இடர்களைக் களைந்து இனிதே நடத்தித்தரும் நல்மந்திரம்; பெண்களின் குடும்பச் சுமைகளைத் தீர்க்கும் பெருமந்திரம்!
“நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே சரபேசா வாழியே! வாழியே!!”
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரிஓஃம் ஸ்ரீ சாலுவேசாய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரபேஸ்வர பிரசோதயாத்:
தமிழில் ஸ்ரீ சரபேஸ்வர காயத்ரி துதிஓஃம் வா! வா! ஐயா! வரம் தரும் மெய்யா! வரம்தரும்
உள்ளம்அளித்து திறம்பட வாழ அருள்வாயே!
ஓம் ஸ்ரீஅதிதிடரங்க சரபேஸ்வரா சரணம்!
அஷ்டோத்திர சத நாமாவளி
108 சிவமய போற்றித் துதிகள்
இவற்றைத் தினந்தோறும் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அஷ்டோத்திர நாமாவளியாகவோ, இஷ்ட நாம ஜப மந்திரமாகவோ, எண் சக்திகளை விருத்தி செய்து கொள்ளும் பூஜையாகவோ ஆற்றி அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டுகிறோம்.
முன்னோர்கள் முக்தாவளி
பித்ரு மூர்த்திகளுக்கான 108 நாமாவளிகள்
ஓம் ஜீவநாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி
தன்னோ பித்ரு தேவ ப்ரசோதயாத்
ஸ்ரீ சுந்தர மகாலெட்சுமி
ஓஃம் ஸ்ரீ அக்ஷய பாத்திர விநாயக கணேசாய நம :
ஓஃம் ஸ்ரீ நாகசக்தி விஷ நிவர்த்தி வைத்ய
வீரப்ப கருட மூர்த்தியே நம :
ஓஃம் ஸ்ரீ ஆபத்சகாய ஆஞ்சநேயாய நம :
ஸ்ரீ சுந்தர மகாலெட்சுமியின் நாமாவளிகள்
ஓஃம் ஸ்ரீ சுந்தர மஹாலெட்சுமி ஸமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
போற்றி! போற்றி!
சிவபுராணம்
தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கிஅல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை -மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்திருவாசகம் என்னும் தேன்
திருவாசகம் - சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் னீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற நிமல னடிபோற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றிசீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றிசிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னைமுந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்திஎண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சிவிண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்றமெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலாபொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளிமெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரேஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானேமாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்றுபிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்தமறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளைஅறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடிமலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலைமலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிநிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டிநாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனேமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேதேசனே! தேனா ரமுதே சிவபுரனேபாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேநேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேஆரா அமுதே அளவிலாப் பெம்மானேஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானேநீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானேஇன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனேஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானேகூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வேபோக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனேகாக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியேஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்றதோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்ஊற்றான உண்ணா ரமுதே உடையானேவேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்பஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமேகள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானேநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனேதில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்றுசொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.”
- திருவருட் பிரகாச வள்ளலார் சுவாமிகள்
தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி !!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெணுரு ஆனாய் போற்றி!
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி!
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளுந் தானும் உடனே காண்க!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!
கனபாடி
மூளையின் யோக, தியானத் திறனையும் அறிவுத் திறனையும், நினைவாற்றலையும், மேம்படுத்த வல்லதே மாமறை கனபாட ஓதுமுறையாகும். தேவமொழி மறைகளில் இது உண்டு. உதாரணத்திற்குத் தமிழ் மாமறை கனபாட முறையைக் காண்போம்.
“நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!”
என்பதைத் தமிழ் மறை கனபாடமாக, “நமசிவாய வாழ்க, வாழ்க நாதன்தாள், நாதன்தாள் வாழ்க, வாழ்க இமைப் பொழுதும், பொழுதும் என் நெஞ்சில், நெஞ்சில் நீங்காதான், நீங்காதான் தாள் வாழ்க .......” என்று வரும் என்று முன் தொடர் வார்த்தைக் கூட்டுத் துதி நல்ல நினைவாற்றலையும், யோக சக்திகளையும் பெற்றுத் தரும். இதில் இருதுறை ஓதல், முத்துறை ஓதுதல் என்பதாக, மூன்று, மூன்று வார்த்தைகளை முன்னும், பின்னும் இணைத்து ஓதும் வகையும் உண்டு. இவை வனத்தவம் போல் கடினமானவை எனினும் அரிய யோகப் புலப் பலாபலன்களைத் தருவிக்க வல்லவையாம்.
