அவரவருக்கான தசா,புத்தி, அந்தரங்கள் அறிய ... ⊞ காண்க..!
கோச்சார கிரக நிலை (ராசி கட்டம்)
ஜாதக ரீதியாக, தசை, புக்தி, அந்தரம் என உட்பிரிவுகள் போல, நான்கு நட்சத்திரப் பாதங்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு. இவை யாவும், தொன்மையான ஜோதிட கிரந்தங்களில், நமக்கு இதுவரையில் கிட்டா தேவாரப் பாக்கள் போலப் பதிந்து மறைந்துள்ளன. தக்க சமயத்தில் இவை வெளி வரும்.
ஒவ்வொரு கிரகத்திற்குமான சக்கரங்களும் உண்டு. அதனைப் பெறும் வரையில் அந்தந்த கிரகத்திற்குரிய தானியம், உலோகம், வண்ணத் துணி போன்றவற்றுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், அவரவருக்கு என்னென்ன தசை, புக்தி, அந்தரம் நடக்கின்றது என்பதை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டு, உதாரணமாக குரு தசை, சுக்கிர புக்தி, சந்திர அந்தரக் காலம் எனில்,
தசாநாத குருமூர்த்தியே!
புக்திநாதச் சுக்கிர மூர்த்தியே போற்றி
சந்திர அந்தரக் கால மூர்த்தியே போற்றி!
என்று தினமும் 1008 முறையாவது ஓதி வந்தால்தான், தசா, புக்தி, அந்தரக் கால உணர்வுகளுடன் நன்முறையில் வாழ முடியும். கஷ்டங்கள் வந்தால்தான் ஜோதிடத்தை நாடுதல் என்றல்லாது, தினமுமே இவ்வாறு பக்திப் பூர்வமாக வழிபட்டு வந்தால் அந்தந்த கிரக தேவதைகளே மனமுவந்து அருள்வர்.
தசா – புக்தி – அந்தர விவரங்கள்
பிறந்த நட்சத்திரத்தின்படி தொடங்கும் தசையைத் தேர்ந்தெடுங்கள். முதலில் அந்தத் தசையின் ஒன்பது புக்திகளின் காலம் தெரியும்; பிறகு ஒரு புக்தியைத் தொட்டால் அதன் ஒன்பது அந்தரங்களின் காலம் (மாதம் – நாள் – நாழிகை) தெரியும்.
1 வருடம் = 12 மாதம் = 360 நாள் · 1 மாதம் = 30 நாள் · 1 நாள் = 60 நாழிகை
பிறந்த நேரத்தை ஒட்டி அமைகின்ற ஜாதகக் கட்டத்தின் படி, உடலில் கிரகப் பூர்வ அம்சங்கள் அமைவதற்குப் ‘‘பட்டக் கோளம்’’ என்று பெயர். அந்தந்த நாளில் வானில் அமையும் கிரக நிலைகளுக்கு ஏற்ப, உடலில் கோள அம்சங்கள் அமையும் பாங்கிற்குச் ‘‘பரிதக் கோளம்’’ என்று பெயர்.
தினமும் கிரகங்களின் அமைப்பை ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரைந்து அவற்றை நன்கு கவனித்துத் தியானித்து, கோளறு பதிகம், நவகிரகத் தோத்திரங்களை ஓதி வாருங்கள். வானியலில் உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் வரைந்து பூஜித்த கோள் வரைபடங்களிலும் சில தருணங்களில் தாமாகவே மாற்றங்கள் ஏற்படுவதான ஆனந்தமான அதிசய அனுபூதிகளும் இதனால் கிட்டும். இவ்வாறு பிற கோள்களில் நிலவும் நற்சக்திகளை, இல்லத்திற்கு, பூவுலகிற்குக் கொணர்தலும் அன்புக் கிரணங்களை நிலைப்படுத்தும். கண்ணாடிக் கோள ரீதியான தியான முறை (Meditation through crystal globe) மிகவும் சிறப்புடையதாகச் சித்தர்களால் அளிக்கப்படுகின்றது.
சூரியன் - ஆட்சி வீடு (சொந்த வீடு) : சிம்மம்உச்ச ராசி : மேஷம் , நீச்ச ராசி : துலாம்
சந்திரன் - ஆட்சி வீடு (சொந்த வீடு) : கடகம்உச்ச ராசி : ரிஷபம் , நீச்ச ராசி : விருச்சிகம்
செவ்வாய் - ஆட்சி வீடு (சொந்த வீடு) : மேஷம், விருச்சிகம்உச்ச ராசி : மகரம் , நீச்ச ராசி : கடகம்
புதன் - ஆட்சி வீடு (சொந்த வீடு) : மிதுனம், கன்னிஉச்ச ராசி : கன்னி , நீச்ச ராசி : மீனம்
குரு - ஆட்சி வீடு (சொந்த வீடு) : தனுசு, மீனம்உச்ச ராசி : கடகம் , நீச்ச ராசி : மகரம்
சுக்கிரன் - ஆட்சி வீடு (சொந்த வீடு) : ரிஷபம், துலாம்உச்ச ராசி : மீனம் , நீச்ச ராசி : கன்னி
சனி - ஆட்சி வீடு (சொந்த வீடு) : மகரம், கும்பம்உச்ச ராசி : துலாம் , நீச்ச ராசி : மேஷம்
ராசி மண்டலம்
உச்சம்ஆட்சிநட்புசமம்பகைநீசம்
ஒவ்வொரு ராசியிலும் நவகிரகங்கள் பெறும் நிலை
மேஷம்
அசுவினி 1,2,3,4, பரணி 1,2,3,4, கிருத்திகை 1 பாதங்கள்
| சூரியன் | உச்சம் |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | ஆட்சி |
| புதன் | சமம் |
| குரு | நட்பு |
| சுக்கிரன் | சமம் |
| சனி | நீசம் |
| ராகு | பகை |
| கேது | பகை |
ரிஷபம்
கிருத்திகை 2,3,4, ரோகிணி 1,2,3,4, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்
| சூரியன் | பகை |
| சந்திரன் | உச்சம் |
| செவ்வாய் | சமம் |
| புதன் | நட்பு |
| குரு | பகை |
| சுக்கிரன் | ஆட்சி |
| சனி | நட்பு |
| ராகு | உச்சம் |
| கேது | நீசம் |
மிதுனம்
மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை 1,2,3,4, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
| சூரியன் | சமம் |
| சந்திரன் | நட்பு |
| செவ்வாய் | பகை |
| புதன் | ஆட்சி |
| குரு | பகை |
| சுக்கிரன் | நட்பு |
| சனி | நட்பு |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
கடகம்
புனர்பூசம் 4, பூசம் 1,2,3,4, ஆயில்யம் 1,2,3,4 பாதங்கள்
| சூரியன் | நட்பு |
| சந்திரன் | ஆட்சி |
| செவ்வாய் | நீசம் |
| புதன் | பகை |
| குரு | உச்சம் |
| சுக்கிரன் | பகை |
| சனி | பகை |
| ராகு | பகை |
| கேது | பகை |
சிம்மம்
மகம் 1,2,3,4, பூரம் 1,2,3,4, உத்திரம் 1 பாதங்கள்
| சூரியன் | ஆட்சி |
| சந்திரன் | நட்பு |
| செவ்வாய் | நட்பு |
| புதன் | நட்பு |
| குரு | நட்பு |
| சுக்கிரன் | பகை |
| சனி | பகை |
| ராகு | பகை |
| கேது | நீசம் |
கன்னி
உத்திரம் 2,3,4, அஸ்தம் 1,2,3,4, சித்திரை 1,2 பாதங்கள்
| சூரியன் | சமம் |
| சந்திரன் | நட்பு |
| செவ்வாய் | பகை |
| புதன் | உச்சம் |
| குரு | நட்பு |
| சுக்கிரன் | நீசம் |
| சனி | நட்பு |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
துலாம்
சித்திரை 3,4, சுவாதி 1,2,3,4, விசாகம் 1,2,3 பாதங்கள்
| சூரியன் | நீசம் |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | சமம் |
| புதன் | நட்பு |
| குரு | பகை |
| சுக்கிரன் | ஆட்சி |
| சனி | உச்சம் |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
விருச்சிகம்
விசாகம் 4, அனுஷம் 1,2,3,4, கேட்டை 1,2,3,4 பாதங்கள்
| சூரியன் | நட்பு |
| சந்திரன் | நீசம் |
| செவ்வாய் | ஆட்சி |
| புதன் | சமம் |
| குரு | நட்பு |
| சுக்கிரன் | சமம் |
| சனி | பகை |
| ராகு | நீசம் |
| கேது | உச்சம் |
தனுசு
மூலம் 1,2,3,4, பூராடம் 1,2,3,4, உத்திராடம் 1 பாதங்கள்
| சூரியன் | நட்பு |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | நட்பு |
| புதன் | சமம் |
| குரு | ஆட்சி |
| சுக்கிரன் | நட்பு |
| சனி | சமம் |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
மகரம்
உத்திராடம் 2,3,4, திருவோணம் 1,2,3,4, அவிட்டம் 1,2 பாதங்கள்
| சூரியன் | பகை |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | உச்சம் |
| புதன் | சமம் |
| குரு | நீசம் |
| சுக்கிரன் | நட்பு |
| சனி | ஆட்சி |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
கும்பம்
அவிட்டம் 3,4, சதயம் 1,2,3,4, பூரட்டாதி 1,2,3 பாதங்கள்
| சூரியன் | பகை |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | சமம் |
| புதன் | சமம் |
| குரு | சமம் |
| சுக்கிரன் | நட்பு |
| சனி | ஆட்சி |
| ராகு | சமம் |
| கேது | உச்சம் |
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1,2,3,4, ரேவதி 1,2,3,4 பாதங்கள்
| சூரியன் | நட்பு |
| சந்திரன் | சமம் |
| செவ்வாய் | நட்பு |
| புதன் | நீசம் |
| குரு | ஆட்சி |
| சுக்கிரன் | உச்சம் |
| சனி | சமம் |
| ராகு | நட்பு |
| கேது | நட்பு |
ஒவ்வொருவரும் தினமும், மிகவும் எளிமையான வகையில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால சக்திகளுக்கான வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும். மூன்று காலமும் நடப்பது ஸ்ரீகாலபைரவரின் காலசக்திகளால்தாம். இதற்காகவே பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்கம் ஆகிய மூன்று லிங்கங்கள் சேர்ந்து அருளும் தலங்கள் (திருப்புகலூர்) அமைந்துள்ளன. இவை மூன்று காலங்களையும் உணர்த்துவதால், அனைவரும், குறிப்பாக ஜோதிடர்கள் இவற்றைக் காலசக்தி வித்யைக் காலங்களான ஸ்ரீகாலபைரவருக்குரிய குளிகை நேரம், புதன் நவமி, அஷ்டமி, புனர்பூச நட்சத்திர நாட்களில் முந்திரி மாலை, பாதாம் பருப்பு மாலை, பிஸ்தாப் பருப்பு மாலை சார்த்தி வழிபட்டு இவற்றால் அர்ச்சித்தும் வழிபட்டு வருதல் வேண்டும். சனிக்கிழமை தோறும் சனீஸ்வரரே மூன்று கால லிங்க வடிவுகளையும் பூஜிக்கின்றார்.
காலச் சக்கர தசை என்ற கணித முறை ஒன்று உண்டு என்று நம்முள் பலரும் அறிவதில்லை! இதில் மூன்று காலக் கணித நியதிகள் துல்லியமாக இருக்கும். இதில் ராகு, கேது அம்சங்கள் இடம் பெறா! பூஜைப் பூர்வமாக இவ்விரண்டும் கூடுதலாக அமைதல் வேண்டும். எனவே தக்க சத்குரு ஜோதிடப் பெரியோர்கள் மூலம் இதனை அறிந்து, மேற்கண்ட பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்கம் ஆகிய மூன்று லிங்க வழிபாடுகளை ஆற்றி வந்தால், ஜோதிடத்தில் வளம் பெறலாம். மரண பயம் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம்.
சாதாரணமானவர்கள் எவ்வாறு இதனைக் கடைபிடிப்பது?
ஒரு நோட்டுப் புத்தகத்தையோ, பழைய டயரியோ எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் உங்கள் ஜாதகத்தின்
- ராசிச் சக்கரம்
- நவாம்சச் சக்கரம்
- அன்றைய தினத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையான கோசார கிரகச் சக்கரம் (இதனைப் பஞ்சாங்கத்திலிருந்து அறியலாம் - சில பஞ்சாங்கங்களில் 365 நாளுக்குமான தினசரி கோசார கிரக நிலைகளை உணர்த்தும் படங்களை அளித்துள்ளனர்)
இந்த மூன்றையும் தினமுமே நோட்டுப் புத்தகத்தில் தன் கைப்படத் தினமுமே வரைந்து, எழுதி, தினமுமே மஞ்சள் குங்குமம் இட்டு, நவகிரகத் துதிகள், வேயுறு தோளி பங்கன் துதிகளை ஓதி வழிபட்டு வருதல் வேண்டும். நாளடைவில் இவை நன்கு மனப்பாடமாகி விடும். மூன்றாவது சக்கரத்தில் கிரக நிலைகளை அவ்வப்போது பஞ்சாங்கத்தைப் பார்த்தும் தெரிந்து கொள்ள வேண்டும். நன்கு மனப்பாடம் ஆனபின் வலது கை மோதிர விரலால் வானில், காற்றில், தளத்தில் எழுதுதலும் ஒரு வகைச் சூக்கும நவகிரகச் சக்கர வழிபாடே!
சனிக்கிழமை அன்று ஒரு தாம்பாளத்தில், நறுமணப் பூக்களால் அந்தந்த நாளுக்கான கோசார கிரகச் சக்கரத்தை அமைத்து, அந்தந்தக் கிரகம் உள்ள கட்டத்தில், அந்தந்த கிரகத்திற்குரிய தானியம், உலோகம், வண்ணத் துணி போன்றவற்றை வைத்து வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ஈஸ்வரப் பட்டம் பெற்ற நவகிரக மூர்த்தி ஆதலின், சனிக் கிழமை அன்று அனைத்துக் கோள மூர்த்திகளும் சனீஸ்வரரைப் பூஜிக்கின்றனர்.
ஒவ்வொரு கிரகத்திற்குமான சக்கரங்களும் உண்டு. அதனைப் பெறும் வரையில் அந்தந்த கிரகத்திற்குரிய தானியம், உலோகம், வண்ணத் துணி போன்றவற்றுடன் வழிபட்டு வருதல் வேண்டும். இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், அவரவருக்கு என்னென்ன தசை, புக்தி, அந்தரம் நடக்கின்றது என்பதை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டு, உதாரணமாக குரு தசை, சுக்கிர புக்தி, சந்திர அந்தரக் காலம் எனில்,
தசாநாத குருமூர்த்தியே!
புக்திநாதச் சுக்கிர மூர்த்தியே போற்றி
சந்திர அந்தரக் கால மூர்த்தியே போற்றி!
என்று தினமும் 1008 முறையாவது ஓதி வந்தால்தான், தசா, புக்தி, அந்தரக் கால உணர்வுகளுடன் நன்முறையில் வாழ முடியும். கஷ்டங்கள் வந்தால்தான் ஜோதிடத்தை நாடுதல் என்றல்லாது, தினமுமே இவ்வாறு பக்திப் பூர்வமாக வழிபட்டு வந்தால் அந்தந்த கிரக தேவதைகளே மனமுவந்து அருள்வர்.
ஒருவருக்கு எந்த கிரகத்தின் மகா திசை நடக்கிறதோ அந்த கிரகத்தின் சக்கரத்தை வைத்து வழிபடுவதால் கண்கூடான பலன்களைக் காணலாம். இந்தச் சக்கரத்திற்குத் தினமும் திருநீறு, மஞ்சள், குங்குமம், சந்தனம், சிந்தூரம் இட்டுத் தினமும் வழிபட வேண்டும். சிலருக்குச் சுக்கிர தசை நடந்தாலும் கடனாளியாக இருப்பதைக் காணலாம். காரணம் புக்தி, அந்தரக் கிரகங்களின் வலுவும் ஆகும். மேலும் சுக்ர தசை நடந்தும் செழிப்பும், வனப்பும், வளமையும் வரவில்லை என்றால், பூதலிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்க வழிபாடுகளைச் சனிக் கிழமை தோறும் ஆற்றி, நவகிரகச் சக்கரத்தைத் தினமும் வில்வம், மற்றும் துளசி, வன்னி தளங்களின் வைத்து வழிபட்டால், சக்கரத்திலுள்ள அட்சரங்களின் பலன்களால் துர்வினை அழுத்தங்கள் குறைந்து நல்அனுகிரகமும் கிட்டும்.
தினமும், நவகிரகத் துதிகளை ஓதாது ஒரு போதும் வாழ்க்கையை ஓட்டக் கூடாது. உலகில் எல்லாருமா தினமும் ஓதி வருகின்றார்கள் என்று எண்ணாதீர்கள்! இதுவும் துர்எண்ணமே! தினமும் ஓதாதவர்களுக்கும், நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சேர்த்து ஓதுதலே தன் கடன்! என எண்ணி இவ்வாறு தினமும் நவகிரக வழிபாட்டினை ஆற்றுதலே, புனிதமான பாரத இறைத் தமிழ்ப் பகுத்தறிவுப் பண்பாடாகும்.
நவகிரக வழிபாடு இல்லாமல் நம் தினசரி வாழ்க்கை இல்லை என்று ஆக்கிக் கொள்ளுங்கள். நம்மையும் அறியாமல் தினமும் எவ்வகையிலேனும் நவகிரக வழிபாட்டினை ஆற்றித் தான் வருகின்றோம். அரிசி, நிலக்கடலை மற்றும் தான்ய வகை உணவை உண்ணுதல், வண்ண ஆடைகளைத் தரித்தல், புனிதமான தல மரங்களின் தரிசனம் போன்ற பல்வகை நவகிரக வழிபாடாகின்றது.
உதாரணமாக, உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சந்திராஷ்டமம் இரண்டே கால் நாளைக்குத்தான் இருக்கும். ஆனால் சந்திராஷ்டமத்தின் (மனோ)வேகம் மூன்று நாட்களுக்கு இருக்கும். ஆனால் சந்திராஷ்டம விளைவுகளாக, அந்த மூன்று நாட்களுக்குள், 30 நாட்களின் பிரச்னைகளும் சேர்ந்தே வந்திடலாம், 300 நாட்களுக்குக் கூட சேர்ந்து வரலாம். அதே சமயம், நீங்கள் சந்திர மூர்த்தியை முறையாக இந்நாட்களில் பக்தியுடன் வழிபட்டு வந்தால், சந்திர மூர்த்தியின் கருணையால், அந்த பிரச்னையைக் குறைத்து, மூன்று மணி நேரத்திற்கான, ஏன் மூன்று நிமிடத்திற்கானதாகக் கூடக் குறைத்துத் தந்திடலாம். பிரச்னைகளே வரக் கூடாதென எண்ணுவது பேராசையே! செய்ததற்கு அனுபவித்தல்தானே தர்மமாகிறது!
சனிக் கிழமைகளில் அனைவரும் சத்சங்கமாக ஆலய வளாகங்களில் அன்றைய நாளின் கிரக சஞ்சாரச் சக்கரத்தைப் பூக்களால், பச்சரிசி மாவால் பெரிதாக வரைந்து, அந்தந்த கிரகக் கட்டத்தில் அந்தந்த கிரகத் தானியங்களை நிரப்பிப் பக்தர்களைக் கிரகச் சக்கரத்தை வலம் வரச் செய்தல் அரிய, அற்புதமான வழிபாடு அன்றோ!
சந்திராஷ்டம நாளில் சந்திரச் சக்கரத்தைப் பச்சரிசி மாவால் வரைந்தும், சந்திரச் சக்கரம் வைத்தும், ரோஹிணிச் சந்திரச் சக்கரம் வைத்தும், சூரிய உதயத்திலிருந்து பூஜைகள் செய்தால் சந்திராஷ்டம விளைவுகள் பெரிதும் தணியும்.
எனவே, அவரவருக்கு நடக்கும் மகா தசை, புக்தி, அந்தரத்தை அறிந்து கொண்டு, அதற்கு உரித்தான நவகிரக சக்கரத்தை வைத்து வழிபடுவதால் மிகவும் விசேஷமான பலன்கள் கிட்டும். சந்திர கிரக சக்திகள் வளர் பிறையில் சுப பலன்களையும், தேய் பிறையில் வினைகளின் விளைவாக வரும் அசுப பலன்களையும் தருவது இயல்பு. தேய்பிறையில் வினைகளின் தீய விளைவுகள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், சந்திரச் சக்கரத்தைத் தேய்பிறையில் நன்கு வழிபட வேண்டும்.
எல்லாவற்றையும் சேர்த்து, சனிக் கிழமை அன்று சனீஸ்வரரே வழிபடும் சிவலிங்கத்தை (கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ளது) சனிக்கிழமை தோறும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல், தசா, புக்தி, அந்தர கிரகப் பூஜா பலன்களை ஒரு சேர அளிக்கின்றன. இங்கு மேற்கண்ட வகையில் சனிக் கிழமைதோறும் ஆலய வளாகத்தில் அன்றைய நாளின் கிரக சஞ்சாரச் சக்கரத்தைப் பூக்களால், பச்சரிசி மாவால் பெரிதாக வரைந்து அந்தந்த கிரகக் கட்டத்தில் அந்தந்த கிரகத் தானியங்களை நிரப்பிப் பக்தர்களைக் கிரகச் சக்கரத்தை வலம் வரச் செய்தல் அரிய, அற்புதமான வழிபாடு அன்றோ!
தெய்வீக ஜாதகங்கள்
நவகிரகப் பெயர்ச்சி காலநேரங்கள்
⚝ சந்திரன்: இரண்டே கால் நாட்கள் (2.25 நாட்கள்) ⚝ சூரியன்: 1 மாதம் (சரியாக 30 நாட்கள்) ⚝ புதன்: 21 முதல் 27 நாட்கள் (approx) ⚝ சுக்கிரன்: 28 நாட்கள் (approx) ⚝ செவ்வாய்: 45 நாட்கள் (approx) ⚝ குரு (வியாழன்): 1 வருடம் ⚝ ராகு மற்றும் கேது: ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள் / 18 மாதங்கள்) ⚝ சனி: இரண்டரை ஆண்டுகள் (2.5 ஆண்டுகள்)
