தீபாவளி பாராயணம்!
பவாநிகுரு (இமயமலை) சாரத்தில் பராசக்தியின் அருந்தவம்!
''பவாநிகுரு' என்பதைப் பொதுவாய் இமயமலைப் பகுதி அனைத்தையும் குறிப்பதாயும் கொள்வர்.
பவாநிகுரு மலைச்சாரலில் ஆற்றும் சக்தி தவம், சக்தி வழிபாடானது வாழ்வில் சக்தி உபாசனைக்கு மிகவும் உறுதுணையாகும். சித்தர்கள் சாக்த உபாசனையில் (சக்தி வழிபாடு) தலை சிறந்தவர்கள். ஸ்ரீவித்யா உபாசனையில் கரை கண்டவர்கள். முக்தி, மோட்சத்தை அடைதற்கு சக்தி வழிபாடு மிகவும் அத்யாவசியமானது என்று சித்தர்கள் புகட்டும் மூல முதல் பாடத்தை இனியேனும் அறியவும். இதனைப் புகட்டத்தான் இவ்வளவு விஸ்தாரமான, அபூர்வமான விளக்கங்கள் அளிக்கப் பெறுகின்றன, அத்தனையும் அம்பிகையின் மஹிமையைப் போற்றும் குருவாய்மொழி இவ்வாறு பொக்கிஷங்கள். அம்பிகையின் மகத்துவத்தைப் படிப்பதும் சக்தி வழிபாட்டின் அங்கமே.
- பூவுலகில் அம்பிகை மற்றும் சர்வ தெய்வங்களும் ஏற்று வரும் அவதாரங்களும், ஆற்றும் தவங்களும் எல்லாமே உலக மக்களாகிய நம்மைக்கடைத் தேற்றிடுவதற்காய் இறைவன் ஆற்றும் லீலைகளாய், அற்புதங்களாய் மலர்ந்து கனிவன.
- ஒரு ஆதியுகக் காலத்தில் இமயமலையில் ஆழ்ந்த தவத்தில் அம்பிகை ஆழ்ந்தனள். பல யுகங்களாய்த் தொடர்ந்த தவத்தால் பராசக்தியின் மீது பனிக் கட்டிகள் பாறையாய் மூடிட ... பனிப் பாறைகளின் இடையே கடுங் குளிரிலும் கௌரீ தேவி அருந்தவத் தீக்கனல் ஜில்லென்ற பனிப் பாறைகளின் ஊடே விண்ணளாவ எழும்பிடத் தவம் புரிந்த கேதாரமலைப் பாறையின் விளிம்பைக் கூட எவராலும் தரிசிக்க இயலவில்லை.
உலக அன்னை இவ்வாறாய் நீண்ட நெடுங்காலத் தவத்தில் ஆழ்ந்தமையால், எல்லா பூலோக ஆலயங்களிலும் அம்பாளின் உருவங்கள் மறைந்தன. தவக் கனலுக்குள் மறைந்து கிடந்த பிரகதாம்பிகையை - எங்குமே எவராலும் தரிசிக்க இயலாது, சர்வ அண்டமுமே, ஜீவ சமுதாயமுமே ஸ்தம்பித்துப் போனது.
- பூமிச் சமுதாயத்தின் வருத்தமான சூழ்நிலையைக் கண்டு இளகிய சர்வேஸ்வரன், தானே உலக மாதாவைத் தேடியவராய், பவாநிகுரு எனும் இமயமலை வளாகத்திற்கு (உ)வந்து, பெரியநாயகியாம் உமையவளை ஆட்கொண்டு அருளினார். ஈஸ்வரியை கௌரியாய் வரித்து மணந்த திருக்கோலத்தையும் நமக்காய் அருளிச் செய்தார்.
இவ்வாறாய் தெய்வத் திருமணங்கள் பூமியில் நிகழும் போதெல்லாம், பூவுலகில் அருட் பயிர் நன்கு செழித்து வளரும்.
எனவே, ஒவ்வொருவரும் தம் ஊர்க் கோயில்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் ராதாகல்யாணம், பார்வதி கல்யாணம், சீதாகல்யாணம், ருக்மிணி கல்யாணம், சரஸ்வதி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம் போன்ற தெய்வத் திருமண வைபவங்களை நிகழ்த்தி வந்திடில், சமுதாயத்தில் சாந்தம் அமைதி நிலவும். நீர்வளம், நிலவளத்தோடு மக்கட் சமுதாயத்தின் நல்ஒழுக்கமும், நற்குணவளமும் விருத்தியாகும். இவ்வாறாக ஆன்மீக ரீதியாகத் தான் உலக சமுதாயத்தைப் பரிபூரணமாகத் திருத்தி நல்வாழ்க்கையில் செலுத்த முடியும்.
- இதற்கு முதல் படியாய் உத்தமர்களை மதிக்கும் ஆன்மீக மாண்பு செறிவு பெற வேண்டும்.உத்தமர்களை இகழ்ந்தால் இயற்கையும் சீற்றம் கொண்டு வெள்ளம், பஞ்சம், வன்முறை, பயங்கரவாதமே பெருகும்.
அகஸ்தியர் வழிபட்ட த்ரியுகி நாராயணன் மலை
ஆதியில் சர்வேஸ்வரீ சர்வேஸ்வரனை மணந்த புனிதத் தலங்கள் பற்பல. இவற்றுள் தமிழ்நாட்டின் (மாயூரம் திருமணஞ்சேரி அருகில் உள்ள) திருமங்கலம் ஸ்ரீபூலோகநாதர் சிவத்தலம், திருவாரூர் அருகே கல்யாண மஹாதேவி, சுவாமிமலை அருகே நாககுடி ஸ்ரீகல்யாண சுந்தரீ ஆலய பூமி போன்று - கேதார்நாத் அருகில் உள்ள த்ரியுகி நாராயணன் மலையும் ஒன்று.
- கேதார்நாத் தலத்திற்கான அடிவாரமான கௌரீகுண்ட் எனும் மலைத்தாழ்வாரப் பகுதியில் இருந்து பத்து மைல் தொலைவில், ருத்ரப்ரயாக் கேதார்நாத் செல்லும் வழியில் இடையில் இந்த த்ரியுகி நாராயணன் மலை மற்றும் அகஸ்தியமுனி மலைப் பகுதிகள் வரும். 'அகஸ்தியமுனி' மலைத் தலப் புராணச் சிறப்புகளைப் பற்றி முன்னரேயே விளக்கி வந்துள்ளோம்.
- ஒவ்வொரு யுகத்திலும் இந்த த்ரியுகி நாராயணன் மலையில் அகிலாண்டேஸ்வரியின் கல்யாண வைபவம் நிகழும்.
- ஆதியுகத்தில் த்ரியுகி நாராயண் மலை வளாகத்தில் அகஸ்த்யமுனிமலை நிகழ்ந்த சிவன்-சக்தி தெய்வத் திருமணத்தின் தூம்ராக்னி போது, மஹாமுனி என்ற மஹாதபஸ்வி அம்சக் கோலத்தில் அகஸ்திய மஹரிஷி இங்கு தோன்றினார். சிவா-சிவை எனும் சிவ பார்வதீ தெய்வத் திருமணத்திற்கான உத்தராங்கச் சடங்குகளுக்காய் மகத்தான வேள்விகளை ஆற்றினார்.
- வேள்விக் குண்டத்தைச் சுற்றிலும் சாம்பிராணி தூபத்தை இட்டுக் கொண்டே ஆற்றும் இரட்டை அக்னி யாகவகை தூம்ராக்னி யக்ஞம் என்பது.
விண்ணையும், மண்ணையும், நீர், நிலம், நெருப்பு, ஆகாசத்தையும் துரிதமாய்ப் பவித்திரமாக்க வல்ல இந்த தூம்ராக்னி எனும் இரட்டை அக்னிவாரி யக்ஞத்தை ஆற்றுதல் மிகவும் கடினம். சுற்றிலும் மேலும், கீழும் கூட சாம்பிராணி, குங்கிலிய நறுமணப் புகை மண்டலம் சூழ்ந்திருக்க .. சாம்பிராணி தூப மண்டலத்தில் அமிழ்ந்தவராய், அகஸ்தியர், தூம்ராக்னி மஹாத்தவ மஹா முனிவருக்கான தவாக்னி அம்சங்களுடன் ஜ்வலித்து விண்ணளாவிய சாம்பிராணி தூபத்தின் ஊடே யாகத்தைப் பன்னெடுங் காலம் ஆற்றினார். இதனால் பவாநிகுரு (இமயமலை) மண்டலமே நறுமணப் புகையால் சூழ்ந்தது. இது பிரபஞ்சத்தையே சுத்திகரிக்க வல்லது.
- பர்வதகுமாரி சிவேஸ்வரனின் - திருமணத்தின் போது, அகஸ்தியர் ஆற்றிய இந்த பிரும்மாண்டமான வேள்வித் தீயானது, இன்றும் இந்தத் த்ரியுகி நாராயண் மலை உச்சியில் உள்ள சிவாலயத்தில் பல லட்சம் ஆண்டுகளாகப் பராமரிக்கப் பெற்று வருகின்றது.
கௌரீ தேவியானவள் பாகம்பிரியாள் அன்னையாய், கேதார கௌரீயாய்க் காட்சி தந்தவுடன் - சர்வேச்வரனின் ஆணைப்படி, சப்த மாதாக்கள் (7), சப்த கன்னியர் (7), சப்தரிஷி பத்நீயர்கள் (7) - ஆகிய இருபத்தோரு மாதாக்களும் கௌஷேத தேயர் எனும் கஹோள மாமுனியின் தலைமையில் ஷடமர்ஷண மஹரிஷி, கவிஜாத முனிவர், ஜதுகர்ணர், யோகமித்ரர், கேதார மாமுனி, ஆகிய பஞ்ச (5) மஹரிஷிகளைக் கொண்டு ஸ்ரீகேதாரேஸ்வரரைப் பூஜித்தனர்.
இவ்வாறு இருபத்தொன்மர் சர்வேஸ்வரனை வழிபட்ட திருநாளே, ஐப்பசி மாதத்தின் தீபாவளிப் பண்டிகையை அடுத்து வரும் கேதார கௌரீ விரதத் திருநாள்.
- தீபாவளித் திருநாளன்று, இந்த கேதார்நாத் புராணத்தை பக்தி மெழுகிடப் படித்தல் ஸ்ரீகௌரீ தேவிக்கான சஹஸ்ரநாமத் துதிகளை ஓதிப் பூசித்த பலாபலன்களை வார்க்க வல்லதாம். தீபாவளித் திருநாளிலேனும் நிச்சயமாய் இதனை விசேஷமாய்க் கடைபிடித்திடவும்.
- கௌரீ அம்மனின் பனிமலை இடையே படர்ந்த பரந்த நெருப்பு ஜ்வாலைகளுடன் ஆன தவத்தைக் கண்ட இறைவனும், இறைவி வேண்டியபடி இனி எக்காலத்தும் தன்னைப் பிரியாது இருக்கும் பொருட்டு இவ்வாறான நலவரத்தை அருளினார். இதனால் கிட்டும் பலாபலன்களோ பூலோக ஜீவன்களுக்குத் தானே!
'என்னுள்ளேயே ஒளிர்ந்து துலங்கும் பாகம்பிரியாளாய் என்னுள் என்றென்றும் பிரியாது இருப்பாயாக!' என்று உலக மாதாவிற்கு (பிருஹதீஸ்வரீ) அருளியவாறு நல்வரந் தந்தார். இது நமக்காய் அருள வந்து வாய்த்த அருளார்ந்த வரமே, அம்பிகைக்காய் அல்ல, ஆனால் அம்மனின் தவத்தைக் காரணமாய்க் கொண்டு உலக ஜீவன்களாகிய நமக்கருளவே இவ்வகையில் கனிந்து (உ) வந்தது.
- இதன்படித்தான், பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான கேதார்நாத் ஆலய பூமியில், கேதாரேஸ்வரச் சுயம்புச் சிவலிங்க வடிவின் இடப் புறப் பகுதியை அம்பிகையாய் பாவனை கொண்டு வணங்கி வருகின்றனர். இதில் ஆதி பராசக்தியானவள் திருஅண்ணாமலையின் சிவசக்தி ஐக்ய மலை தரிசனம் போன்று, பாகம்பிரியாளாய் சிவலிங்கத்திலேயே உடன் உறைந்து இருப்பதாய்க் கருதி, சிவசக்தி ஐக்ய பாவனத்துடன் கேதார்நாத்தில் கேதாரேஸ்வரச் சுயம்பு லிங்கத்தைப் போற்றி வழிபடுகின்றனர்.
எனவே பாகம்பிரியாள் எனும் பெயருடன் எங்கெல்லாம் அம்பிகை காட்சி தருகின்றாளோ, அங்கெல்லாம் அம்பிகையை தரிசிக்கையில், சக்தியையும், சிவனையும் சேர்ந்து தரிசிப்பதான பலன்கள் கிட்டும் என்று இந்தக் கேதாரேஸ்வரப் புராணத்தின் மூலம் அறியவும். திருசெங்கோடு, திருவாடானை அருகே திருவொற்றியூர் தலங்களில் பாகம்பிரியாளாய் அம்பாள் அருள்கின்றாள். இத்தகைய அதியற்புத சிவசக்தி ஐக்கிய பாவன தரிசன ஐதீக விளக்கங்களை, அகஸ்தியர் பூவுலகிற்குப் புலப்படுத்தியது பவாநிகுரு எனும் இமயமலையின் அகஸ்தியமுனி மலைத் தலத்தில்.,
கேதார்நாத் சிவாலயத்தில் கேதாரேஸ்வரச் சிவலிங்கத்தின் இடப்புறப் பகுதியானது சற்றே விநாயகரின் வடிவத்தில் இருக்கும். அன்னை அகிலாண்டேஸ்வரி, உலக மக்களுக்கு எக்காலத்தும் எந்த வகையிலான பிரிவுத் துயரமும் அண்டலாகாது என்பதற்காய் ஒரு யுகத்தில் விசேஷமான முறையில் அருளிட விரும்பினாள்.
இதற்காய் மிக எளிமையான முறையில் அருளக் கூடிய தெய்வமாய் விநாயக வடிவத்தைத் தோற்றுவிக்கும் சித்தத்துடன் அம்பிகை கொண்ட கோலமுமே பாகம்பிரியாள் அவதாரம் ஆகும். இவ்வாறு சக்தி விநாயகருக்கான ஆனை முக வடிவமும், பவாநிகுரு மண்டலத்தில் அதாவது இமயமலையில் நிர்ணயம் ஆனதுதான் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
முருகனுக்கு மூத்தவனாம் கணபதியின் வடிவம் எப்படி அமைந்து விநாயக அவதாரம் அன்பு கொழிக்கும் வண்ணம் தோன்ற வேண்டும் என்பதை சாட்சாத் சர்வேஸ்வரிக்கே உணர்த்துவதாயும் கேதார்நாத் சிவலிங்கத்தின் இடப் பகுதி சற்றே விநாயகரின் வடிவத்தில் அமைந்துள்ளதும் வியத்தக்க அற்புதமாகும்.
திரியுகி நாராயணாக்னியால் கேதாரத்நாத் கோயிலில் விளக்கேற்றுவதும் மஹாதபோபல நல்வரத்தால் தான்!
திரியுகி நாராயண் மலைச் சிவாலயத்தின் தொன்மையான அக்னிக் குண்டத்தில் இருந்து அக்னியை எவ்வகையிலேனும் - தீவட்டியாகவோ, மற்றொரு விளக்கிலோ ஏற்றிக் கொண்டு கேதார மலைக்குப் பாத யாத்திரையாய் எடுத்துச் செல்வதும், அங்கு ஸ்ரீகேதாரேஸ்வரர் கோயிலில் இந்தத் த்ரியுகி நாராயண ஆலய அக்னியைக் கொண்டு விளக்குகளை ஏற்றுதலும் சிறப்பான தவச் சாதனம். ஆற்றுதற்கு அரிய - யோகவழிபாடு இது. பல லட்சம் மக்களில் ஓரிருவரே த்ரியுகி நாராயண மலையின் அக்னியை பக்திப் பூர்வமாய் எடுத்துச் சென்று, கேதார்நாத் சிவாலயத்தில் விளக்கேற்றும் வழிபாட்டினை ஆழ்ந்த யோக மார்த்தாண்ட சக்தியுடன் ஆற்றிட இயலும். இவ்வரிய அக்னி யோக வழிபாட்டை ஆதி யுகங்களிலேயே அகஸ்தியர் சாதித்தமையால் தான், தூம்ராக்னி மாமுனி அம்சம் உடையாராயும் அகஸ்தியர் போற்றப் பெறுகின்றார்.
ஒவ்வொரு ஜடப் சக்தியாய் இறைவன் உறைகின்றான் என்பதை மலைத்தல வழிபாடு உணர வைக்கும். கிரிவலமாய் மாத அருணாசல சிவராத்திரி கிரிவலத்தில் பவாநிகுரு சித்தரின் குருவருளை வேண்டியவாறு,
- ஓம் தத்சிவாய வித்மஹே தத்பராதத்பர சிவபராய தீமஹி தந்நோ ஹிமகிரி அருணாசல பரங்கிரி ப்ரசோதயாத்
- இமயத்திமைய உமையத் துமையாள் சமயக்குயமா சர்வஞ் சிவமயச் சிவமயமே சிவமயமே சிவமயமே!
- என்று ஓதியவாறு, சாம்பிராணி தூபம் இட்டவாறும், ஊதுபர்த்திகளை ஏந்தியவாறும் அக்னிச் சூழலுடன் கிரிவலம் ஆற்றுதல் சிறப்பானதாம். முடிந்த வரை, ஒரு ஐம்பது, நூறு அடி தூரமேனும் நடந்திடவும்.
'பவாநிகுரு' எனப்படும் இமயமலையில் அன்னபூரணா சிகரத்தின் குறித்த தவயோக வனத்தைச் சித்தர்கள் 'பவாநிகுரு பவன மண்டலம்' என்றழைப்பர். இப்பகுதியில் நவநாத சித்தர்கள் தவம் பூண்டிருக்கும் 'தம்புல்' எனும் மஹாருத்ர குகையில், மஹாசத்குரு இடியாப்ப ஈச சித்தர் தவயோகத்தில் வீற்றிருக்கின்றார்! (தம்புல் குகை மகாத்மியம் மே2001 ஶ்ரீஅகஸ்திய விஜயம் இதழில்!)
தீபாவளி.. தீபங்கள்..!
தீபாவளியன்று அதிகாலையில் ஸ்ரீகிருஷ்ண நாமசக்தியுடன் தீபங்களை ஏற்றி, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!” என்ற சக்தி வாய்ந்த ஸ்ரீகிருஷ்ண நாமாவளியைக் குடும்ப சகிதமாக ஓதி, தீபங்களை ஏற்றுதல் வேண்டும். இன்று தீபாவளி நாளில் ஏற்றப்படும் தீபங்கள் யாவற்றிற்கும் கிருஷ்ணாங்காரக தீபம் என்று பெயர்.
குறைந்தது 12 அகல் தீபங்களை காவிரி ஆற்றிலோ அல்லது திருத்தல பிரகாரத்திலோ ஆல இலை அல்லது வாழை மட்டை தட்டிலோ ஏற்றி வழிபடுவதால் இதை கிருஷ்ண அங்காரக தீப ஜோதியாக ஏற்று சாட்சாத் கிருஷ்ண பகவானே இந்த ஜோதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இத்தகைய வழிபாட்டை தக்கோலம் திருத்தலத்தில் நிகழ்த்துவதும் அல்லது மறுநாள் விடியற்காலை அவரவர் இல்லங்களில் இவ்வாறு 12 தீபங்களை ஏற்றி வழிபடுவதும் அற்புத கிருஷ்ணாமிர்த சக்திகளைத் தோற்றுவிக்கும். இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபாடுகளை இயற்றும் முறையை இங்குள்ள படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நிறைய விளக்குகளை இல்லத்தில் ஏற்றுவதால் பெறப்படும் சுந்தரபல தீப சக்திகள் கிட்டும் அரிய நிலை, ஆலயத்தில் தூல, சூக்கும, காரண சரீரங்களில் தேவர்கள் ஏற்றும் விளக்கோடு கூடுதல் தீபங்களை ஏற்றுதலால் கிட்டும் தேவசுந்தர தீபசக்திப் பெரு நிலை பட்டாசுகளில் ஏற்படுகின்ற அபூர்வமான மின்புழி ஒளி, மேலும் விண்ணில் உயரமாகச் சென்று வெடித்து, ஒளிர்ந்து பட்டாசுகள் ஏற்படுத்துகின்ற உத்தமச் சோபன தீர்க தீப ஒளி, பட்டாசுகளையும் வான வேடிக்கைகளையும் கண்டு குழந்தைகள் குதூகலத்துடன் எழுப்புகின்ற ஆனந்த ஒலியொளி,
இவ்வாறு பலவகை ஒளிப் பிரகாசங்களும் சேருகின்ற திருநாளே தீபாவளியாகும். இவை எல்லாம் நரக சதுர்த்தசி மகத்துவமாக, மனிதர்களுக்குப் புகட்டப் பெறும் ஆத்மவிசாரத் தெளிவுகளாகும்.
அதாவது பல வகை ஒளிப் பிரகாசச் சக்திகள் பூலோகமெங்கும் ஒளி, ஒலி வடிவில் தோன்றுகின்ற திருநாள். ஒலி வடிவிலும் கூட, ஒளிப் பிரகாசம் ஏற்படும். இதனையும் அளிப்பதே தீபாவளி.
இவ்வாறாக தீபாவளியின் எண்ணற்ற ஒளி மகாத்மியங்கள் உள்ளன. பராசக்தி, இறைவனின் திருக்கண்களைப் பொத்திய போது ஏற்படுத்திய கண் இமைக்கும் நேர இருளுக்குப் பலத்த பிராயச் சித்தமாக, கோடிக் கணக்கான தீபங்களை உலகெங்கும் ஏற்றி, அகண்டகார தேவாதி தேவ மார்த்தாண்ட தீபப் பிரகாச சக்தி அளித்த ஒரு யுகத்தின் திருநாளுமே தீபாவளி ஆகும்.
உண்மையில் மூன்று மஹா சிவராத்திரிகளுக்கு இடையே வருகின்ற, நான்கு வகையான மாத சிவராத்திரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றுள் ஒன்றாக, ஐப்பசி மாத நரகச் சதுர்த்தசி விளங்குகின்றது.
இந்நாளில் ஸ்ரீநரமுக விநாயகர் (சிதம்பரம், திருச்சி) என்பதாக மனித முகத்துடன் உள்ள பிள்ளையார் மூர்த்திக்கு அனைத்து விதமான இனிப்பு பண்டங்களையும் (குறைந்தது 36 வகை) படைத்து, 3 முதல் 76 வயது வரை உள்ள அனைத்து வயதினருக்கும் அளித்தல் என்பது அதிரத சுய தர்ம துவாபர யுக பூஜை ஆகும். ஸ்ரீகிருஷ்ணரால் அதிரதனாகிய கர்ணனுக்கு அளித்த உபதேசமாகும்.
இது நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் ஸ்வயதர்ம சுபதாரக தீபாவளிப் பண்டிகை என்பதாகும். எனவே தீபாவளி அன்று மேற்கண்ட வகையில் நன்கு ஆத்ம விசாரம் செய்து உள்ஒளி பெற்று மன பூமியிலும், தீபாவளிப் பண்டிகையை ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் கொண்டாடிடுங்கள்.
பூவரசு, வாழை, தாமரை இலைகளில் தேங்காய் எண்ணெய், பசு நெய், நல்ல எண்ணெய் தீபங்களை ஒரு விளக்கில் இரண்டு திரிகளை வைத்து தீபமேற்றி காவிரி, கங்கை, பல்குனி நதிகளில் ஆடி 18, ஐப்பசி மாதங்களில் மிதக்க விடுவதே இணையடி சுக்ர தீப வழிபாடாகும். மனித உடலில் இரண்டாக உள்ள அனைத்து அவயவங்களின் குறைபாடுகளைத் தீர்க்கும் அற்புத தீப வழிபாடு இது. தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளி தினம், தீபாவளிக்கு அடுத்த நாள் என மூன்று தினங்களில் நிறைவேற்றும் இத்தகைய தீப வழிபாடு அற்புத பலன்களை அளிக்க வல்லதாகும். இங்கு நாம் விவரிக்கும் வழிபாடுகள் அனைத்துமே கிரக சங்கமங்களாலும் வேறு பல காரணங்களாலும் இந்த உலகில் சூழும் இருட்டையும், மனித உள்ளங்களில் சூழும் இருட்டையும் களையும் என்பதை அடிக்கடி நினைவுறுத்திக் கொள்ளவும். இறை வழிபாட்டில் உன்னதம் அடைந்தோர் எத்தனையோ கோடி உண்டு. அவர்கள் அனைவரும் நாயன்மார்களே. ஆனால் இவர்களில் 63 நாயன்மார்களின் தத்துவங்களை மட்டும் நாம் திருத்தலங்களில் கொண்டாடுகிறோம் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம் ஆகும். காவிரி போன்ற புனித நதிகளின் அருகே வாசம் கொள்ளாதோர் இத்தகைய நாயன்மார்களுக்கு புத்தாடை அணிவித்து அவர்கள் முன் பச்சரிசி மாக்கோலங்களை இட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுவதும் ஓர் அற்புத வழிபாட்டு முறையாகும். நாயன்மார்களின் வரலாறுகளை ஊன்றிப் படித்து அவர்கள் வாழ்க்கை கூறும் தத்துவங்களை மனதில் நிலைத்து அந்தந்த நாயன்மார்களுக்கு தீபம் ஏற்றி வணங்குவதும் தங்கள் உடல், மனக் குறைபாடுகளை நீக்கும் ஓர் உபாயமாகும்.
தீபாவளி தானங்கள்!
தீபாவளித் திருநாள்
தீபாவளியன்று ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு ஏழையின் வீட்டில் விளக்கேற்றி வைப்பதற்கு வைராக்கியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். வீட்டில் விளக்கேற்றுதல் என்றால் அந்த வீட்டில் அனைவருக்கும் உண்ண வயிறார உணவளித்து நம்மைப்போல் தீபாவளி கொண்டாடிட சிறிது கங்காஜலம், தகுந்த அளவில் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் ஆகியவற்றைத் தானமாக அளிக்க வேண்டும். இவற்றோடு இனிப்புகள், உணவுப் பண்டங்கள் அளித்து அவர்களை ஆனந்தப்படுத்த வேண்டும். இவ்வாறாக எவ்வளவு ஏழைகளை உண்மையான முறையில் நம்மைப்போல் தீபாவளி கொண்டாச் செய்கிறோமோ அந்த அளவிற்குத் தீபாவளியால் நாம் ஆனந்தப்படுகிறோம்.
இனியாவது நாம், நம் குடும்பம் என்ற அளவோடு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், தீபம் ஏற்றுதல், இனிப்புகள், தின்பண்டங்கள் உண்ணுதல் என்ற சுயநல நிலை மாறிப் பலருக்கும் தீபாவளி தரும் ஆனந்தத்தைப் பரிமாறுவோமாக!
நரகாசுரன் பெற்ற வரங்களில் ஒன்று தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து நீராடும் அனைவரும் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர் என்பது. இந்த நீராடல் பலனை எப்போதும் எந்நாளும் பெற வழி வகுப்பதே இத்தகைய ரேபான் கருப்புக் கண்ணாடிகள் அணிந்து மற்றவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யும் நற்பண்பாகும். இந்த நற்பண்பைப் பெறுவது அனைவருக்கும் கடினம் என்றாலும் குறைந்த பட்சம் ரேபான் கருப்புக் கண்ணாடிகளை வாங்கி தீபாவளி வைபவத்தில் தானம் அளித்தல் என்பது அனைவரும் நிறைவேற்றக் கூடிய தான முறைதானே ? இதனால் அவர்கள் அனைவரும் தீப ஓளியை வறியவர் வாழ்வில், இல்லத்தில் ஏற்றிய உத்தமர்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அசுரர்கள் என்பவர்கள் கருப்பு நிறமுடையவர்கள் என்பது மக்களின் கணிப்பு. இங்கு கருப்பு என்பது தீய சக்திகளின், தவறான எண்ணங்களின் தாக்கத்தையே குறிக்கும். நரகாசுரன் பெற்ற தீய புண்ணிய சக்திகள் அனைத்துமே கிருஷ்ண பரமாத்மாவினால் மக்களுக்கு பயன்படும் புண்ணிய சக்திகளாக மாற்றப்பட்டு இன்று வரை பூலோக ஜீவன்களுக்கு பலன் அளித்து வருகின்றன என்றால் நரகாசுரன் எந்த அளவு தவ சக்திகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவேதான் சற்குருவின் காலடியில் அகப்பட்ட கரப்பான் பூச்சியின் நிலையும். இவ்வாறு தீய சக்திகளை ஈர்த்து நம்மைக் காக்க இறைவனால் அளிக்கப்பட்டதே கருப்புத் தலை முடியாகும். இதன் மனித முயற்சியே கருப்புக் கண்ணாடி ஆகும்.
தீபாவளி என்பது பித்ரு தீப ஒளி மலரும் நன்னாளாகவும் அமைவதால் தீபாவளி தினத்தில் இருண்ட லோகம், மத்திம லோகத்தைச் சேர்ந்த நம் மூதாதையர்கள் ஒளி லோகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்குத் தேவையான புண்ணிய சக்திகளை தாரை வார்த்து அளிக்கும் பெருந்தகையே நம் சற்குரு வெங்கடராம மூர்த்தி ஆவார். சற்குரு அருளும் ஒளிப் பாதை அலாதியான சிறப்பு வாய்ந்தது. தீபாவளி சமயத்தின்போது ஒரு வெள்ளி அல்லது எவர்சில்வர் டம்ளரில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு அதில் நல்லெண்ணெயை ஊற்றி அத்துடன் சீயக்காய், இனிப்பு, பலகாரங்கள், புத்தாடைகளை அவரவர் சக்திக்கு இயன்றவரையில் தானமாக அளிக்கும்படி நம் சற்குரு கூறுவார்கள். இந்த ஒரு ரூபாய் நாணயம், நல்லெண்ணெய், கங்கா தீர்த்தம் இவையே இருண்ட, மத்திம லோகத்திலிருந்து ஒளி லோகத்தில் நம் பித்ருக்கள் சஞ்சரிக்க உதவும் விசா, அனுமதி. இதற்கு உதவி செய்வதே வருடம் ஒரே ஒரு முறையே நம் உடலில் தோன்றும் சுவேதாக்னி பித்ரு சக்திகளாகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
லாலீலாய தீமஹி தந்நோ சுவேதாக்னி தேவ ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதி மேற்கண்ட தான முறையை நிறைவேற்றுதல் நலம்.
தீபாவளியன்று எண்ணெய், புனிதமான கங்கை நீர், சீயக்காய், இனிப்புகள், ஆடைகளை விசேஷ தீபாவளி பாக்கெட்டாக வைத்து இயன்ற அளவில் கடவுள் கருணையால் உங்களுடைய பகுதியில் பலரும் ஒன்றாக, சத்சங்கமாகச் சேர்ந்து பல ஏழைக் குடும்பங்களுக்கும் தீபாவளியன்று தீப ஒளி பொங்குவதற்கான தெய்வீக வாய்ப்பினை அளித்திட வேண்டுகின்றோம். காஞ்சீபுரம் ஸ்ரீ தீபப் பிரகாசர் கோயில், கஞ்சனூர் ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர் ஆலயம், திருஅண்ணாமலை அக்னிலிங்கம் போன்ற தலங்களில் இன்று 108 தீபங்களாவது (அகல் விளக்குகள்) ஏற்றிட யமவாதை எனப்படும் அடிக்கடி நோய் வாய்ப்படும் பிணி தோஷம் நீங்கும்.
யம தீபம்
ஐப்பசி தீபாவளி என்பது ஒரு மாத சிவராத்திரித் திதித் திருநாள் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றார்கள். ஆம், நரகாசுரனுக்கு கிருஷ்ண பகவான் சிவ பூஜைக்குரிய மாத சிவராத்திரியில்தாம் நன்னிலை தந்தார்.
துவாதசி என்பது லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத் தர வல்ல திதி என்பதை நாமறிவோம். திருமகளே ஈஸ்வரனை வில்வத்தால் அர்ச்சித்துப் பெருமாளின் மார்பில் உறையும் பாக்யத்தைப் பெற்றமையால்தாம் சிவாலயங்களில் திருமகள் சன்னதி தனிச் சிறப்பிடம் பெறுகின்றது.
திரயோதசியில் பெறுகின்ற தன கடாட்சம் நிலைத்து நிற்க, தன திரயோதசித் திதிப் பூஜைகள் துணை புரிகின்றன. தனத் திரயோதசித் திதிக்கு ஸ்ரீபுரப் பிரதோஷம் என்ற பெயரும் உண்டு. பொதுவாக, ஸ்ரீதர், ஸ்ரீஹரி, திருப்பதி, திருவாபரணன் போன்ற ஸ்ரீ மற்றும் திரு பெயரை உடையவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் ஸ்ரீபுரந்தான் கிராம ஆலயமாகும். தற்போது சிதிலமடைந்த, பூஜைகளற்ற நிலையில் உள்ள இந்த ஸ்ரீபுரந்தான் தலம் அரியலூர் அருகே உள்ளது.
தன திரயோதசித் திதிப் பிரதோஷ பூஜையைத் திருமகள் சன்னதி இருக்கும் தலங்களில் நிகழ்த்துவதும் மகாசக்தி வாய்ந்ததாகும். பொதுவாக மஹா தன திரயோதசிப் பூஜைக்கு வரும் செல்வம், இருக்கின்ற முறையான செல்வ வளத்தை நன்கு நிலை நிறுத்தவும், விருத்தியடையச் செய்வதற்குமான நல்வரங்களைத் தருகின்றன.
மிகவும் வறுமையில் வாடுவோரும், வாழ்நாள் முழுதும் பணம் சம்பாதிப்பதற்காகப் போராடுபவர்களும் துவாதசிப் பூஜையைக் கைக் கொண்டு வந்தால் மகத்தான மாற்றங்களைக் காணலாம். பணம் சம்பாதிப்பது மட்டும் போதுமா?
லட்சுமி கடாட்சம் என்பது பணத்தை முறையாகச் சம்பாதிப்பது மட்டுமல்லாது, முறையாகப் பணத்தைச் செலவழிப்பது, முறையாகச் சேமிப்பது, நல்லவழிகளில் பணத்தை நிலை நிறுத்துவது, தேவையான போது பணத்தைப் பெறுவது, பணத்தை நிலையான சொத்துக்களாக ஆக்குவது போன்ற பல்வகைப் பணத்துறை வழிமுறைகளையும் அடைதலும் லட்சுமி கடாட்சமே!
இவ்வாறு பல்வகைப் பணத்துறை வழிகளை அடைய உதவுவதும் தன திரயோதசித் திதி பூஜைகளின் மகத்துவமும் ஆகும் . எவ்வாறு துவிதியைத் துதியானது எமபயத்தைப் போக்க வல்ல தர்மராஜா பூஜைகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றதோ, இதை போல, தன திரயோதசி என்பது செல்வத்தை முறையான வழிகளில் தக்க வைத்துக் கொள்ளும் சக்திகளையும் கொண்டதாகும்.
மிக, மிக அபூர்வமாக அமையும் இத்தகைய தினங்களை நன்கு குறித்து வைத்துக் கொண்டு வரும் சந்ததிகளுக்கும் நன்கு உணர்த்திட வேண்டும்.
நரக சதுர்த்தசியாகிய தீபாவளிக்கு முன் வரும் திரயோதசிப் பிரதோஷ பூஜைக்கு ஜ்வாலா தீபப் பிரதோஷம் என்று பெயர். ஜ்வாலா முகம் எனில் நன்கு ஆழமாக உள்ள பெரிய மண் அகலின் வடிவாகும். இன்று சிவாலயங்களில் நன்கு பெரிய ஜ்வாலா முக அகல் தீபங்கள் (குறைந்தது) 12 ஏற்றுதல் விசேஷமானது.
கைகளுக்கு மருதாணி இட்டு விளக்கேற்றுவது மென்மேலும் சிறப்பைத் தரும்.
எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிடுக! மகத்தான சமுதாய இறைப் பூஜையே எம தீப வழிபாடாகும்.
யமதீப தானம்!
பஞ்சாங்கத்தில் ‘தனிஷ்டா பஞ்சமி – இறந்தால் வீடு மூடப்பட வேண்டிய நக்ஷத்திரங்கள்’ என்று குறிக்கப்பட்டிருக்கும். அதாவது குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் ஒருவர் இறந்தால் அவ்வீடு எவ்வளவு காலத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இது பழங்கால முறையாகும்.. ஆனால் இதன் பின் பொதிந்துள்ள ஆன்மீகப் பின்னணி இன்றும் உலகெங்கும் நடக்கின்ற நிதர்சன உண்மையாகும்.
இறந்தவர்கள் தங்களின் சில பணிகள் நிறைவேறும் வரை அவ்வீட்டிற்கு அருவமாக அடிக்கடி விஜயம் செய்வர். ஆனால் இது அச்சத்திற்குரிய விஷயமன்ற . அந்த ஆவிக்குச் சகாயம் செய்யும் பொருட்டே தினமும் விளக்கிட்டு வீட்டை குறித்த காலத்திற்கு மூடுகின்றனர்.
தேகத்தை விட்டபின் எந்த ஆவியும் எந்த ரூபத்திலும் எங்கும் செல்லலாமல்லவா? குறிப்பிட்ட வீட்டிற்கு ஏன் செல்ல வேண்டும்? பெரும்பாலும் இறந்தவருடைய ஏக்கங்கள், ஆசைகள் தாம் வாழ்ந்த வீட்டின் சூழ்நிலையில் தான் அமைந்திருக்கும். அந்த ஆவியும் தன் காரியங்களை நிறைவேற்ற பூவுலகில் தான் வசித்த அதே பகுதியைத்தான் நாடுகின்றது. இதற்கு நம் மூதாதையர்களான வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் உதவுகின்றனர்.
பொதுவாக ஆவிகள் ஜோதியைவிட்டு விலகிச் செல்கின்றன. விளக்கு ஜோதியில் ஆவாஹனமாகும் தேவதையைத் துதித்து அவர்கள் ஒதுங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே இறந்தவரின் ஸ்தூல தேகம் கிடந்த இடத்தில் துர் ஆவிகள் அனுகாமலிருக்க 10 நாட்களுக்கு விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு.. ஆனால் தற்காலத்தில் பல இடங்களில் மண்ணெண்ணெய், பெட்ரோமாக்ஸ் விளக்குகளே பெரும்பாலும் ஏற்றப்படுகின்றன. இது தவறாகும். நல்லெண்ணெய், தேங்காய்யெண்ணெய் போன்ற தாவர மூலிகை எண்ணெய் விளக்கு ஜோதி விளக்குகள் தாம் ஆவிகளே போற்றி வணங்கும் ஆன்மீக சக்தியைப் பெற்றுள்ளன. துர் ஆவிகள் இத்தகைய தீபங்களிடம் வருவதில்லை. ஒருவர் இறந்த ஒருவருட காலத்திற்குள் அவருடைய பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் செய்ய வேண்டிய பூஜையே எம தீப தானமாகும். ஸ்ரீஎமதர்மராஜா எழுந்தருளியுள்ள கோயில்கள், பாடல் பெற்ற கோயில்கல் ஆகியவற்றில் பசுநெய் தீபம் ஏற்றி இறந்தோரின் ஆன்மா ஒளி உலகம் சென்றடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் ஆகியவற்றில் ஒரு தாமரை இலையில் பசுநெய் தீபம் ஏற்றி மிதக்க விடுதலும் எமதீப தானத்தைச் சார்ந்ததாகும். இறந்தால் வீட்டை மூடுவது என்பதி கலியுகத்தில் இயலுமா என்று கேட்கலாம். இதற்குப் பரிகாரமாகவே மேற்கண்ட எமதீப தானம் சித்த புருஷர்களால் அருளப்பட்டுள்ளது.
பசுநெய் தீபத்தின் மஹிமை
பசுநெய் தீபத்தின் ஜோதியானது புகையாக மாறி பல விண்ணுலகங்களையும் அடையும் ஆன்மீக சக்தி பெற்றதாகும். ஆன்ம சாந்திக்காக நாம் எழுப்பும் பிரார்த்தனை, பசுநெய் ஜோதியின் மூலம் ஆன்மாவைப் புனிதமான ஒளிப் பகுதிக்கு அனுப்புமாறு வேண்டிட அறக்கடவுள் அத் தீபத்தின் மஹிமையால் ஆனந்தித்து சந்ததியினரின் தான தருமங்களின் பலனுக்கேற்ப அவர்தம் ஆன்ம நிலையை நிர்ணயம் செய்கிறார். எவரும் இறந்தவர்கள் சார்பாகத் தானே அனைத்துக் கோயில்களிலும் நதிதீரங்களிலும் எமதீபம் ஏற்றுவது இயலாதல்லவா? எனவே ஆயிரமாயிரம் வெண்கல, அகல் விளக்குகளை, பசுநெய், நல்லெண்ணையுடன் தானம் செய்திட இதனால் பல்லாயிரக்கணக்கான தீபங்களைப் பல கோயில்களில் ஏற்றும் வாய்ப்புப் பெருகிறதல்லவா? இது இறந்தோரின் ஆன்ம ச்ரேயஸிற்குப் பேருதவியாகி நிற்கும். ஆனால் விளக்கு தானம் ஏற்பவர்கள் உண்மையாகவே தீபத்தைக் கோயிலில் ஏற்றுதல் வேண்டும்.. இவற்றுடன் கரும்புச்சாறு, எள்ளுருண்டை, எள் கலந்த தட்டை, முறுக்கு போன்றவை, எள்ளுப் பொடிச் சாதம், நல்லெண்ணையினால் ஆன ஆகார வகைகள் ஆகியவற்றைத் தானம் செய்திட, அறக் கடவுளுக்குப் ப்ரீதி அளிக்கும். இறந்தோரின் ஆன்ம சாந்திக்கு இது வழிவகுக்கும்.
இத்திருநாளே எமதர்ப்பண பூஜைநாளாகும். இந்நாளில் மூன்று வேளை சந்தியாவந்தனத்துடன் எமதர்ப்பணம் செய்திட சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் அறக்கடவுள் மீண்டும் அவதாரம் பெற்றுத் தனி தண்டத்தையும் பெற்றார். இந்நாளில் ஸ்ரீஎமதர்மராஜா எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் எமதர்ப்பணம், எம வந்தனம் செய்திட.. 1. எம பயம் அகலும் 2. பாயில் படுத்து நோயில் வாடாது சுகமான இறைநாம ஸ்மரணத்துடன் கூடிய மரணம் கிட்டும் 3. இறப்பை பற்றிய தீர்க்க தரிசனம் ஏற்படுதலால் இறப்பு, பிறப்பு பற்றிய ஞானம் ஏற்றப்படும்.
தர்மராஜ தீபம்!
மிருத்யு தோஷங்களை அகற்றி நல்ஆயுளைத் தரும் தர்மராஜ தீபம்
- தர்மராஜ தீபம் என்பது தொன்மையான விசேஷமான தீபஜோதி.
- தர்மலோகத்தில் இருந்து பூமிக்கு வந்த கண்டங்கத்திரி எனும் மூலிகையால் ஆகும் தீபமிது.
- எவ்வித விஷத்தையும் முறிக்க வல்ல சஞ்சீவினி வகை மூலிகை கண்டங்கத்தரி. தொண்டை நோய்கள், பல்நோய்கள், சிறுநீரகக் கல் நோய்களுக்கு நல்ல நிவாரணி.
- யமமூர்த்திக்கு உரிய நீல வண்ணத்தில் உள்ள சிறு புது பருத்தித் துணியின் நடுவில் காய்ந்த கண்டங்கத்திரி, அதிமதுரம், வசம்பு, சுக்குத் துண்டுகளை வைத்து, சனீஸ்வரருக்கான எள்தீப முடிச்சுப் போல் முடிவது தர்மராஜத் திரி.
- நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்த கூட்டுத் தைலத்தில் 'இம்முடிச்சை இட்டு தீபம்' ஏற்றுவது தர்மராஜ தீபம் .
- விளக்கெண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- மரணபய நிவர்த்தி, நோய் நிவர்த்தி, தோஷ நிவர்த்தி, கண்திருஷ்டி நிவர்த்திக்கு உதவுவதோடு, மனதை வெருட்டும் மனபீதிகளையும் அகற்றுவது தர்மராஜ தீபஜோதி வழிபாடு.
- தர்மராஜாவாய் யமபகவான் ஆண்ட தர்மதேசமான நரிக்குடியில் தர்மராஜ தீபத்தை ஏற்றுவது சிறப்பான பலன்களை அளிக்கும்.
- எமதீபம் என்பது எமலோகத்தில் மட்டும் காணப்படுகின்ற அற்புத ஒளியைக் குறிப்பதாகும் மரணத்திற்கு ஆட்படுகின்ற அனைத்து ஜீவன்களுமே எமலோகத்தின் வழியாகவே கண்டிப்பாகச் செல்ல வேண்டும். ஆனால் அது இறப்பிற்குப் பின் உடனே நிகழ்கின்றதா, அல்லது சில காலம் கழித்து நடைபெறுகின்றதா என்பது அந்தந்த ஜீவன்களுடைய கர்ம வினைகளின் அம்சங்களைப் பொறுத்து அமைவதாகும். பல உத்தம இறைப்பணிகளைச் செய்த ஒருவர் இறப்பிற்குப் பின் ஒளிமயமான உலகிற்கு செல்ல முதலில் எமஜோதி லோகத்திற்குச் சென்றிட அங்கு அவருடைய உத்தம காரியங்களுக்கான பரிசாக ஸ்ரீஎமபகவானே நேரில் பிரசன்னமாகி வரவேற்று அவரை உபசரித்து ஒளி பொருந்திய தேவ ஊர்தியை அளித்து அங்கிருந்து பல மகரிஷிகளின் துணையுடன் உத்தம லோகங்கட்கான அருள்வழி கூ(கா)ட்டி அனுப்புகின்றார் எனில் எமலோகம் என்பது, ஒளிப்பகுதியை சார்ந்தது என்பது நன்கு விளங்குகின்றதல்லவா!
சூரியபகவானின் பிள்ளையே ஸ்ரீசனீஸ்வர பகவானும், ஸ்ரீஎம பகவானும் ஆவர் என்பது பலரும் அறிந்ததே, தர்ம ஒளிப் பாதையிலிருந்து நாம் சற்றும் பிறழாதிருக்க அனுகிரஹம் செய்பவரே ஸ்ரீஎம தர்மமூர்த்தி ஆவார். ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய சந்தியா வந்தன பூஜையில், எம வழிபாடு எனும் ஒரு பகுதியும் உண்டு.
யமமுர்த்திகான எளிய சந்தியா வந்தனத் துதி
யமாய போற்றி போற்றி
சர்வத்தை ஆண்டாய் போற்றி
தர்மராஜ பதமே போற்றி
அழிகுண னானாய் போற்றி
நிறைவழி மூர்த்தி போற்றி
விவஸ்வா புத்திரம் போற்றி
காலமா சகுணா போற்றி
சர்வ மாஜீவழி போற்றி
சக்திமா வடிவே போற்றி
தத்னகிரி மாகுணே போற்றி
சர்வமா பூஜனே போற்றி
அண்டமா வுதராய் போற்றி
வல்லவி சித்திர மாவடி போற்றி
தெய்வமா நிதராய் போற்றி
சித்ரகுப் தாரணா போற்றி போற்றி
ஒம் நம யமவான் போற்றி போற்றி
தெற்க்கு நோக்கி நின்று யமமூர்த்தியை வணங்கும் இந்த யமவந்தனத் துதியை தினமும் ஒதி வருதல் வேண்டும் ., சுவாச சக்தியும் பிராண சக்தியாய் மிளிர்வதும் புனலாகும் . நரிக்குடித் தலத்தில் இந்த யமவந்தனத் துதியை ஓதுவது சிறப்புடையதாகும்!
சுமை தீர்ப்பீர், எமநாமம் ஓதி!
எமவந்தனம்
ஸ்ரீயமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்தகாயச|
வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாய வை நம:|
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி||
என்ற இந்த எம வந்தனத்தை சிறு பிராயம் தொட்டே ஆயுள் முடியும் வரை தினந்தோறும் மூன்று வேளையிலும் ஓதி வழிபட வேண்டும் என்பது நம் மூதாதையர்களால் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீஎம மூர்த்தி வழிபாடு என்பதால் நம் வாழ்க்கையில் எமவழிபாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் நன்கு அறியலாம். தினமும் தெற்கு நோக்கி அஞ்சலி செய்து ஸ்ரீதர்மராஜ மூர்த்தியை வணங்கித் துதிக்க வேண்டிய சுலோகம் இது!
நோய்பயம், மனபீதி, மரணபயத்தை அகற்றும் மஹாமிருத்யுஞ்ஜய மந்திரம்
(தக்க உத்தமர்களிடம் நல்ல நேரத்தில் கேட்டறிந்து தினமும் ஓதி வரவும்)
"த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"
- வெள்ளரிப் பழம் கனிந்து கொடியில் இருந்து விடுபட்டாலும், வெளியில் இருந்து பார்ப்பதற்கு, வெள்ளரிக் கொடியில் பழம் ஒட்டி இருப்பது போலவே தோன்றும். இதே போல், பூர்வ ஜன்ம வினைத் தொக்காய், லௌகீகமாய் பூவுலகில் இல்லற வாழ்வை நடத்த வேண்டி இருந்தாலும் .... ஒரு புறம் செய்ய வேண்டிய இல்லற, வாழ்க்கைக் கடமைகளைத் தவறாமல் ஆற்றிக் கொண்டும் ... அதே சமயத்தில் ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் வெள்ளரிப் பழம் போல் ஆன்மீகத்தில் கனிந்த கனியாய், இறைவனை நோக்கி வாழ்தல் வெள்ளரிப்பழ மோட்ச மார்கம் என்பதாகும். (உர்வாருகம் = வெள்ளரி)
மஹாமிருத்யுஞ்ஜய மந்திரம் (தமிழ்)
முக்கண் முக்தா முழுமண வேதி மூல வளர்ப்பாய் அருள்வாய் அருள்வாய்
அக்கா ரகனி அருள்வெள் ளரிபோல் அரிந்தே அரியா தருள்வாய் அருள்வாய்
சிக்கா முடிவும் இலதாய்ச் சிறியேன் சித்தம் மருளா தருள்வாய் அருள்வாய்
எக்கா ரணத்தால் எம்பார் ஏகன் அடிதாள் விலகா தருள்வாய் அருள்வாய்
உள்ஒளி தருவதே தீபாவளி!
தீபாவளித் திருநாள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாலேயே ஆசிர்வதிக்கப்பட்ட ஐப்பசி மாத சிவராத்திரி தினமாகும். சிவராத்திரி தினமானது எத்தனையோ விசேஷமான தெய்வீகத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. உண்மையில், ஒரு பட்சத்திற்கு ஒரு முறை (15 நாட்கள்), அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற விசேஷ தினங்கள் அமையக் காரணமே, அந்தந்த பட்சத்தில், ஒரு மனிதன் செய்கின்ற தவறுகளுக்கு உடனடியாகப் பிராயச்சித்தங்களைப் பெற்றுத் தருவதற்கும் ஆகும்.
இவ்வாறு பட்சந் தோறும் பண்டிகைகளாக அமைவதற்கான வேறு முக்கியமான காரணங்களும் உண்டு. இனியேனும் வாழ்வில் தவறுகளை செய்யாதிருக்கத் தேவையான புண்ய சக்திகளையும், இதுவரையில் செய்த சஞ்சிதக் கர்ம வினைகள் தாக்கா வண்ணம் ஓரளவு காத்திட, நல்ல ரட்சா சக்திகளையும் அளிப்பதற்கும் இவை உதவுகின்றன. இவ்வகையில் ஐப்பசி மாத சிவராத்திரிக்குத் தீபஸ்ரீதரம் என்று பெயர். பலருமே ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாள் மட்டுமே தீபாவளி வைபவ காரணமாக எண்ணுகின்றார்கள். ஒரு தெய்வ மூர்த்தியின் திருக்கரங்களால் மடிபடுதல் என்று சொல்வதை விட, தெய்வ மூர்த்தியே நேரில் வந்து தீவினைகளை மாய்த்து, நற்குண சக்திகளாக ஆக்கித் தருகின்ற அற்புத லீலை என்று உணர்தல் வேண்டும்.
நரகாசுர புராணம் பல பாடங்களைப் போதிக்கின்றது. நரகாசுரன், ராவணன் போல் பல பூஜைகளையும் சிறப்புற ஆற்றி, அதே சமயத்தில் பூலோக ஜீவன்களுக்கு எண்ணற்றத் துன்பங்களையும் தந்தவன். கொடிய பாவ வினைகளை சேர்த்துக் கொண்டாலும், தாம் செய்த பூஜைகளில் திரண்ட புண்ய சக்தியானது, பாவ வினைகளின் தன்மைகளை ஓரளவு தணித்திட்டது. இதே நிலை தான் கலியுகத்திலும் மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்றது.
அதாவது ஒருபுறம் இறைவழிபாடுகள், மறுபுறம் பிறரை ஏமாற்றுதல், வதைத்தல், லஞ்சக் குற்றங்கள், காமத் தீவினைகள், சூதாட்டம், மது அருந்தி ஆட்டம் போடும் குற்றங்கள், உடலால் ஆக்கிய அதர்மக் குற்றங்கள் போன்ற பலவும் இணையாகவே பலருடைய வாழ்விலும் நடந்து வருகின்றன.
அதாவது கலியுலகில் ஒருவர் என்னதான் அற்புத வழிபாடு, தான தர்மங்களால் அபரிமிதமானப் புண்ய சக்திகளைப் பெற்றாலும், அவர் செய்கின்ற தீவினைகளிலிருந்து அவரை ஓரளவு காப்பாற்றவும், பல தீவினைகளைக் கழிக்கவுமே அப்புண்ய சக்திகள் தீர்ந்து விடுவதால், அவருடைய வாழ்க்கையே போராட்டமாக ஆகி விடுகின்றது.
இவ்வகையில் பல வருடங்களுக்கு நிலவி வந்து அருள வல்ல புண்ய சக்திகளை அருணாசல கிரிவலம், சபரிமலை விரதம், திருப்பதி பாத யாத்திரை, ஆயுர் தேவி பூஜை, அன்னதானம் போன்றவற்றின் மூலமாகச் சேர்த்து, புகை பிடித்து புகை பிடித்து, விஷக் காற்றைப் பிறருக்கும், காற்றுப் பரவெளியிலும் பரப்பியும், மது அருந்தி தன் ஆத்ம நிலைக்குக் களங்கம் விளைவித்தும், லஞ்சம், ஏமாற்றுதல், முறையற்ற காமம் போன்றவற்றிலுமாக, அனைத்துப் புண்ய சக்திகளையும் ஒரு வாரத்திலும், ஒரு சில தினங்களிலுமேயாகக் கழித்து விடுகின்ற நிலையே கலியுக அவல நிலை!
இறைப் பூஜைகளில் திரளும் புண்ய சக்திகளை இவ்வாறு விரயம் செய்து விட்டு, “கடவுளே! உன்னை இவ்வளவு வழிபட்டேனே, இன்னும் ஏன் எனக்குக் கஷ்டங்களைத் தருகின்றாய்!” என்று புலம்புவது சரியாகுமா?
தீபாவளியின் மகிமைகளுள் ஒன்றாக, முதலில் இறைவனுக்குப் படைத்துத் தானும் உண்டு, ஏழைகளுக்கும் தானமளிப்பதற்காக, உணவுப் பண்டங்களை, பட்சணங்களை ஆக்குவதால், அந்த அடுப்பு நெருப்பிற்கும் அற்புதத் தான தர்மப் பங்கு சக்திகள் சேர்ந்து வளந் தரும் உத்தம நிலை,
ஜ்வாலஜல ஸ்நானம்
தீபாவளியன்று விளக்கு, எண்ணெய் தானம் செய்து, நிறைய தீபங்களை ஏற்றி, மனமாரக் கண்டு தரிசித்தலுக்கு ஜ்வாலஜல ஸ்நானம் என்று பெயர்! எவ்வாறு புனித நதி நீரில் மூழ்கிப் பாவம் களைகின்றோமோ, இதே போல பல விளக்குகளின் தீப தரிசனம் செய்கையில், இதன் ஜோதி நீரோட்டம் நம்முடைய உடல் நாளங்களில் பாய்ந்து, நதியோட்டமாய்ச் சுழன்று, உடல், மனம், உள்ளத்தைச் சுத்திகரிக்கும், பாவ வினைகளையும் போக்கும். தீபாவளி அன்று பட்டாசுகளில் எழும் ஒளியும் ஒரு வகை தாரண வகை ஜோதியே ஆகும். அக்காலத்தில் செயற்கை ரசாயனக் கலவை இன்றி, மூலிகா இயற்கைத் திரவியங்களால் வெடி வகைகள் ஆக்கப்பட்டமையால் ஹோமப் புகை போல் இது நன்மை பயத்தது! இதில் எழும் ஜோதியும் பயனளிப்பதாக, விசேஷமாக இருந்தது! காலப்போக்கில் செயற்கை ரசாயனக் கலவையே பட்டாசுகளில் பெருகி விட்டது.
எனவே வரும் தீபாவளி நாளில், ஒவ்வொருவரும் குடும்பத்திலும், ஆலயத்திலும், நதிக் கரைகளிலும் குறைந்தது 108 தீபங்களையாவது ஏற்றி ஸ்ரீகிருஷ்ணாங்காரக ஜோதியாகக் கண்டு வழிபட வேண்டும்.
, “தீபாவளி அன்று எங்கு எவ்வகை தீபம் எவரால் ஏற்றப்பட்டாலும், அவ்விளக்கின் அடிப்பகுதியாக, விளக்குப் பாதமாகத் தான் துலங்க வேண்டும்! தீபாவளியன்று எவர் தீபம் ஏற்றிடினும் அதில் ஸ்ரீகிருஷ்ண ஸ்பரிசமும், கிருஷ்ணாங்காரக தீப சக்திகளும் படிய வேண்டும்!” என்ற நல்வரத்தையும் யமுனா தேவி பெற்றனள், நமக்கும் பெற்றுத் தந்தனள்! இது நிகழ்ந்த நன்னாளும் ஒரு யுகத் தீபாவளித் திருநாளே!
எனவே தீபாவளி அன்று, தீபாவளி தீபஜோதியின் மகிமையை அறிந்தோ, அறியாமலோ, உலகெங்கும் எவ்வகை தீபம், எவராலும், எங்கு ஏற்றப்பட்டாலும், அனைத்து விளக்குகளின் பாதமாக, அடிப்பகுதியாக யமுனா தேவி துலங்குகின்றாள். இதனால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஏற்றும் கிருஷ்ணாங்காரக தீப ஜோதியும் அதில் செறிவதாகும்.
எனவே, தீபாவளி அன்று, கங்கை ஜலத்தோடு யமுனா நதித் தீர்த்தமும் கலந்து நீராடுவது விசேஷமானதாகும். ஆனால் அனைவராலுமா யமுனா தீர்த்தத்தைப் பெற முடியும்? இதற்கும் ஆன்மீகத்தில் வழிவகை தரப்பட்டுள்ளது! ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிடில், ஆன்மீக தீபமே அனைத்துத் துன்பங்களுக்கும் தீர்வுகளைத் தருவதாகும்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஒன்பது நதி தேவதா மூர்த்திகளின் சிலா ரூபங்கள் ஒரு சேர, தரிசனத்திற்கு, வழிபாட்டிற்கு உள்ளது. இங்கு அனைத்து நதி தேவதா மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, யமுனை நதி தேவதா மூர்த்தியின் திருவடிப் பாத நீரைப் பெற்று யமுனைத் தீர்த்தமாகக் கொண்டிடலாம்.
மகாமகக் குளம், ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், திருஅண்ணாமலை சிவகங்கைத் தீர்த்தம், லால்குடி சிவகங்கைத் தீர்த்தம் போன்ற ஆலயத் தீர்த்தங்களில், அனைத்து நதி மூர்த்திகளும் நீராடி வழிபடுவதால், இத்தீர்த்தங்களிலும் யமுனைத் தீர்த்தம் செறிந்துள்ளது!
வருடந்தோறும் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளைத் தக்க பெரியோர்களிடம் அறிந்து கொண்டாடினால் தான் பரிபூர்ண பலன்களைப் பெற முடியும். முறைகள் மாறுபடுகையில் ஏதேனும் ஒன்றினை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். நம் பண்டிகைகள் நமக்கு நலம் தரும் பொருள் பொதிந்த விழாக்கள் ஆகும். முன்வினைகளைத் தீர்க்கின்ற முப்பெரும் தேவனின் திருவருள் பொழியும் மெய்விளக்கங்களாகவும் நம் பண்டிகைகள் அமைந்திருக்கின்றன.
பல்லாண்டுகளாக ஓரிடத்தில் இருள் மண்டி இருந்தாலும் ஒரு சிறு விளக்கு ஏற்றப்பட்டால் அவ்விடத்தை விட்டு இருள் பறந்தோடி விடுகிறது. ஒரு சிறு விளக்கே பல ஆண்டுகளின் இருளை ஒரு சிறு நொடியில் ஓட்டி விடுகிறது என்றால் பலவிளக்குகள் சேர்ந்து ஏற்றினால் எத்தனையோ எதிர்கால இருள்களை நம்மை நாடவிடாமல் ஓட்டிவிடலாம். இது எப்படி சாத்தியமாகும்?
பல ஆண்டு இருளானது ஒரு சிறு விளக்கால் ப்ரகாசம் பெறுகிறதென்றால் பல விளக்குகளை நாம் தினமும் ஏற்றிக் கொண்டு வந்தால் இருளென்பதே இல்லாமல் போய்விடும். இது எதைக் குறிக்கிறது என்றால், வாழ்வில் வழியே கிடைக்காமல் திணறுகின்ற குடும்பங்களுக்கு உடலாலோ, உழைப்பாலோ, அன்பளிப்பாலோ, திறமையாலோ, தியாகத்தாலோ, சேவையென்ற விளக்குளை விடாமல் ஏற்றிக் கொண்டு வந்தால் (செய்து கொண்டு வந்தால்) எதிர்கால ‘இருள்’ என்கின்ற துன்பத்தை நம்மால் மாற்றிவிட முடியுமல்லவா? ஆகவே, விளக்குகளை ஏற்றுங்கள்.
வாழ்க்கையை வீணடிக்காதீர்கள் என்ற தத்துவத்தை விளக்குவதுதான் தீபாவளித் திருநாளாகும். அதோடுமட்டுமல்லாமல் தீபாவளித் திருநாள் நம்முடைய முன்னோர்கள் மேலுலகில் தாங்கள் பெற்ற அருள் வரத்தினைப் பிறர் சேவைக்காகத் தன்னையே தியாகம் செய்த அனைவருக்கும் அருள்வழங்கும் திருநாளாகும். ஆகவேதான் இத்திருநாளை “நீத்தார் நினைத்தருளும் திருநாளே தீபாவளி“ என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இத்தீபாவளித் திருநாள் பொருள் பொதிந்த உத்தம தத்துவத்தையும் விளக்குகிறது.
நரகாரசுரன் என்ற அரக்கன் பெற்றவரம் யாது தெரியுமா? பல வருடங்களாகத் தவமிருந்து தேவர்களையும், மனிதர்களையும், பூலோகத்திலும், மேலுலகுகளிலும் ஆளுகின்ற அருள் வரமும், அதோடு மட்டுமல்லாமல் யாராலும் தான் இறக்கக்கூடாது. ஆனால் தன் தாயின் கையால் மட்டுமே இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். எந்தத் தாயும் தன் குழந்தையைக் கொல்லமாட்டாள் என்ற பூரண நம்பிக்கையே இதற்கு மூலகாரணமாகும். ஆனால் வரமளிக்கும் இறைவன், பிறந்தவர்கள் அனைவரும் இறந்து தான் தீர வேண்டும் என்ற சட்டத்தை இயற்றியவன் நரகாசுரனுக்கு மட்டும் விதிவிலக்களித்து விட முடியுமா?
ஆகவே, தான் இறக்காமலிருப்பதற்குத் ‘திறமையாக வரம் பெற்று விட்டோம்’ என்ற மமதையால் நரகாரசுரன் பலருக்கும் பலவிதமான துன்பங்களை அளித்தான். ஒருவருடைய தபோபலம் (புண்ணியம்) இருக்கும் வரை எல்லாவித அக்கிரமங்களும் நல்லவிதத்தில் செயல்படும். என்றைக்குப் புண்ணியம் முடிகிறதோ, அன்று இறை தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதுபோல நரகாரசுரன் வாழ்ந்தாலும், அவனைப் பெற்றெடுத்த தாய், அடுத்த பிறவியில் பரம்பொருளாகிய ஸ்ரீகிருஷ்ணனைத் தன்னுடைய கணவனாகப் பெற்றாள்.
அந்தக் கண்ணனுடைய மனைவியின் நாமம் சத்யபாமா என்பதாகும். சத்யபாமாவிற்கு முன்ஜன்மத்தில், நரகாசுரன் தன் மைந்தன் என்ற ரகசியத்தை நினைவுறுத்தாமல் மறைத்து வைத்திருந்தான் இறைவன். நரகாசுரனின் கொடுமையால் பல துன்பங்களை அனுபவித்த மக்களும், சாதுக்களும் யோகிகளும் கண்ணனிடம் முறையிடவே, கண்ணபிரான நரகாரசுரன் மீது போர் தொடுக்கச் சென்றார். அப்பொழுது சத்யபாமா தேரோட்டியாக விளங்க கண்ணன் பலவித ஆயுதங்களோடு போருக்குச் சென்றார்.
கண்ணன் நரகாரசுரனுடன் கடுமையாகப் போர் தொடுத்தார்., நரகாசுரன் “மாத்ருமாயா” என்ற அஸ்திரத்தைக் கண்ணன் மீது வீசினான். அப்போது கண்ணபிரான் அடிபட்டு மயக்கத்தில் சாய்வது போல் சாய்ந்தார். இதைப் பார்த்த சத்யபாமா கணவன் இறந்துவிட்டார் என்ற பயத்திலும், கோபத்திலும் எதிரே இருக்கின்ற நரகாசுரன் தன்னுடைய எதிரி என்ற எண்ணத்தைப் பூண்டனள். ஆகவே கோபம் கொண்டு நரகாசுரனைச் “சிம்சுபா” என்ற அஸ்த்திரத்தால் அடித்து வீழ்த்தினாள்.
நரகாசுரன் உயிர் துறக்கும் நிலையில் இருந்தான். அப்போது கண்ணன் மயக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தார். நரகாசுரனுக்கு இறக்கும் நிலையில் கண்ணனுடைய கண்களின் ஒளியால் முன்வினை நினைவுகள் தெரியத் தொடங்கின.அப்போது சத்யபாமாதான் தன் தாய் என்றுணர்ந்து, “அம்மா! உன் கையாலேயே இறக்க வேண்டிய நிலையைத் தந்துவிட்டாயே” என்று வருந்தினான். “அதற்கு என்ன செய்வது” என்று தன் மகனையே சத்யபாமா கேட்டாள்.
“நான் இறந்த நாளை அன்ன ஆவிநிறைகுட தீபம் ஏற்றி தீபாவளியாகக் கொண்டாடுவீர்” என்று கூறி இறந்தான் நரகாசுரன். ஆகவே “அன்ன ஆவி நிறைகுடதீபம்” ஏற்றும் முறையைத் தாது வருடத் தீபாவளியில் கடைப்பிடிப்பதால் அளவு கடந்த அருளைப் பெறலாம். நரகாசுரன் கண்ணனிடம் பலவிதமான தீப முறைகளை வரங்களாகக் கேட்டுப்பெற்றான். இம்முறையில் குந்திதேவி, திரௌபதி, அனுசூயா, ராதை, ஜாம்பவான் போன்றோர் பலவிதமான தீபங்களை தீபாவளியன்று ஏற்றி பல அனுக்ரஹங்களையும், தெய்வீக சக்திகளையும் பெற்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு அளித்துள்ளோம்.
உத்திர ஆவி நிறைகுடதீப முறைகள்
தீபாவளியன்று விடியற்காலை மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள் பெரிய சுமங்கலிகள் முதலில் எழுந்து ஸ்நானம் முடித்து வெங்கலப் பானையில் அரிசி இட்டு சாதம் வடித்து அந்த வெங்கலப்பானையில் அகல்விளக்கு ஏற்றி ஆவி வரும் பொழுதே சாதத்தின் நடுவில் வைக்க வேண்டும். அப்பானைக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பானையைச் சுற்றி 12 தீபங்கள் ஏற்றி “நீத்தார் நீடு அருள் தருவீரே” என்று வேண்டுதல் வேண்டும். இதனால் பெரிய சுமங்கலிகள் கங்காமாதாவின் அருளால் முன்னோர்களின் ஆசியை எளிதாகப் பெறலாம்.
மாலையில் மீண்டும் வேறொரு வெங்கலப் பாத்திரத்தில் அரிசி இட்டு சாதம் வடித்துச் சூடு ஆவி வரும் போது அதனுள் அகல்விளக்கேற்றி அச்சாதத்தில் பதித்து அந்த வெங்கலப் பானையைச் சுற்றி 14 தீபங்களை, அவ்வீட்டு மருமகள்கள் மற்றும் மகள்கள் கூடி, ஏற்றி வழிபடுதல் வேண்டும். இதற்குத் “தக்ஷிண ஆவி நிறைகுட தீபம்” எனப்பெயர். இதனால் குடும்பத்தில் இறந்த குழந்தைகளுக்கும் இருக்கின்ற குழந்தைகளுக்கும் நீத்தாரின் நல்லருள் கிடைக்கும்.
தாது வருடத்தில் தீபாவளி தானம்
- 1. ஏழைகளின் வீட்டிற்குப் புதுக் கூரை போட உதவுதல் வேண்டும். பலன் – கால் பகுதிகளில் வந்த நோய் விலகும்.
- 2. கூரை வீடுள்ளவர்களுக்குச் சீமை ஓடுபோட உதவுதல் வேண்டும். பலன் – வயிற்றுநோய் உள்ளவர்களுக்கு வியாதியின் தொல்லை விலகும்.
- 3. புதுப் பாய், ஜமுக்காளம், வெண்கல விளக்கு, பசுநெய், திரியுடன் தமிழ்மறை, வேதமறை ஓதுபவர்களுக்குத் தானமளித்தல் வேண்டும்., பலன் – மன அமைதியைப் பெறலாம்.
- 4. பசுமாட்டின் மீது பட்டுப்புடவை போர்த்தி ஆரத்தி எடுத்துச் சர்க்கரைப் பொங்கலை அப்பசுமாட்டை உண்ண வைத்து, மாட்டின் மீது போர்த்திய பட்டுப்புடவையை ஏழைகளுக்குத் தானம் செய்திடில், தீராத கடன் சுமை ஒழியும்.
- 5. புது சூளை அடுப்பு, புது மண்ணெண்ணை அடுப்பு, புது கேஸ் (Gas) அடுப்பு இவைகளை வைத்துச் சுற்றி விளக்குகள் ஏற்றி வணங்கி இவற்றை ஏழைகளுக்குத் தானமாய் தீபாவளியன்று அளித்திடில், தாய் தந்தையரைப் பிரிந்து காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பெண்களின் வாழ்வு சிறப்புறும், விவாகரத்து நிலையிலுள்ள உறவுகள் சுமுகமாக நல்லநிலையில் தீர்வு பெறும்.
- 6. தீபாவளியில் விளக்கேற்றி வழிபட முடியாதவர்கள் “ஸ்ரீபவானி” சஹஸ்ரநாமாவளியை 5 முறையாவது படித்தால் “அன்ன ஆவி நிறை குட தீபம்” ஏற்றிய பலனைப் பெறலாம்.
- 7. அகல்விளக்கு, எண்ணெய், திரி இவற்றை அறியாதோர்க்குத் தானம் தந்து கோவில்களில் விளக்கு ஏற்றவைப்பது பெரும் பலனைத் தரும்.
- 8. வேதம் படித்தவரை வைத்துக் கோவில்களில் விளக்கேற்றி வைப்பது, கடுமையான ஜுர சம்பந்தமான நோய்கள் தீர வழி செய்யும்.
- 9. கர்ப்பிணியை வைத்துக் கோவில்களில் தீபாவளி அன்று விளக்கேற்ற வைத்தால் குடும்பத்தில் நற்செய்திகள் வரும்.
- 10. கோவில்களில் 60 வயது சுமங்கலியை வைத்து விளக்கேற்ற வைப்பதால், தாமதித்த திருமணம் நிறைவேற வழியுண்டு.
கணவனை இழந்தோர், கணவனையே தெய்வமாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர். இறந்த கணவன் நன்னிலையடைய அவர்களுக்கென விசேஷமான தீப முறையுண்டு. கணவனையிழந்தோரும் தீபாவளியன்று விளக்கேற்றி வழிபடுவதில் எவ்விதத் தவறுமில்லை. பின்வரும் தீபமுறை வழிபாடு இவர்களுக்கு உகந்தது.
தீபாவளி தீபம் (கணவன் இழந்தோருக்கு)
நக்ஷத்திரங்கள் வானில் இருக்கும் போதே, விடியும் முன் நீராடி அவரவர் குலதர்மபடி நூல் ஆடை, அணிந்து படத்தின் முன் மூன்று திக்கில் மூன்று உலோக கீழ்கண்ட முறையில் விளக்குகளை ஏற்றுதல் வேண்டும். கணவன் படத்தைக் கிழக்கு நோக்கிப் பார்க்குமாறு வைத்து வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் மூன்று தீபங்கள் ஏற்றி தனியாக அமர்ந்து கணவனின் பெயரையே விடாமல் ஒரு மணி நேரம் ஜபித்து 3 உலோக விளக்குகளை ஏற்ற வேண்டும். சிறிய வெள்ளி அகல்விளக்கு, சிறிய வெண்கல அகல்விளக்கு, சிறிய பித்தளை அகல்விளக்கு ஏற்றி ஜபித்து இந்த விளக்குகளைத் தானம் செய்து விடுதல் நலம். இதை “உதய சாந்தி தீபம்” என்று பெயரிட்டனர் பெரியோர் இதைக் காலையில் செய்து முடித்தல் வேண்டும்.
மதியம் புதுப்பாயில் அல்லது புது ஜமுக்காளத்தில் அமர்ந்து கணவனின் பெயரை ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் ஜபித்திடல் வேண்டும். மீண்டும் 3 உலோக விளக்கு ஏற்றிடுக. மதியம் ஏற்றும் தீபத்தை “ருணபந்த தீபம்” என்று பெரியோர் அழைக்கின்றனர். இந்தத் தீபத்தை வீட்டில் ஏற்றிய பிறகு வெள்ளி விளக்கை முறையாகக் குளிர வைத்து, அவ்விளக்கைக் கணபதி கோவில் உண்டியலில் செலுத்துதல் நலம். செப்பு, வெண்கல விளக்குகளைக் கணபதி சன்னதியில் ஏற்றி வைத்துவிட வேண்டும். எவர் வேண்டுமாயினும் இவற்றை எடுத்துக் கொள்ளுமாறு அங்கேயே வைத்துவிடுக!
மாலையில் கணவன் படத்திற்குத் தன் கையாலேயே கட்டிய மணமுள்ள மாலையை அணிவித்துத் தர்ப்பைப் பாயில் அமர்ந்து மீண்டும் வெள்ளி விளக்கு, செப்பு விளக்கு, வெங்கல விளக்குகள் வைத்துத் தேங்காய் எண்ணெய் விட்டு திரியிட்டு தீபம் ஏற்றி ஒரு மணி நேரம் தனியாகக் கணவன் பெயரை ஜபித்துவிட்டு சிறுவர் சிறுமியர்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாலையில் ஏற்றும் தீபத்திற்கு “விமோசன தீபம்” என்று பெயர். இத்தீப உலோக விளக்குகளையும் தானமாய் அளித்திடல் வேண்டும். மறைந்த கணவனின் நினைவோடு வாழ்வோர்க்கு ஏற்ற நவதீப (9) பூஜையிது.
தீபாவளியன்று ஹோமங்கள் செய்ய விரும்பினால்..
- 1. பாலாழி சங்கு ஹோமம் :- சிறந்தது. இதைக் குரு மூலமாய் அறிந்து செய்தல் நலம். அண்ணன், தம்பி, அம்மா, சித்தி இவர்களோடு கூட்டு சேர்ந்து பல குடும்பங்களுக்கு அளித்த துன்பச்சுமை குறையவும், பரிஹாரமாகவும் இது அமைகிறது. அவ்வாறு துன்புறுத்திய குடும்பங்களுக்குப் பணத்தாலோ, பொருளாலோ உடலாலோ உதவி செய்தல் நலம் தரும்.
ரோஹிணி மூலிகா ஹோமம் செய்தல் நலம், வாகனங்களை முறையற்ற வழியில் பயன்படுத்தி இருந்தால் சிலந்திக் கட்டி நோய்கள் வரும். இதையும் குரு மூலமாய் தீர்த்தல் நலம். வாகனங்களை முறையற்ற வழியில் பயன்படுத்தி யாருக்கெல்லாம் துன்பம் அளித்தோமோ, அந்தக் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் நல்லது செய்தல் வேண்டும். இந்த ஹோமத்தை குருமூலமாய் முடிந்த பிறகு..!
ஸகலஸித்தி ப்ராயசித்த ஹோமம் : பணம், புகழ், பதவி என்ற அகந்ததையால் தடுக்கி விழப்போகிறவர்கள் பணம், புகழ், பதவி எல்லாம் நிரந்தரம் அல்ல இறைசேவையும், குருசேவையும் தான் தன்னைக் கடையேற்றும் என்ற எண்ணத்தைப் பூரணமாக நினைவு கூரவும், நிறைவேற்றவும் இந்த ஹோமம் வழிசெய்யும். இதையும் குருவைச் சுற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜம்பாரி தீப ஹோமம் :- இது இந்திரபயசித்தி என்ற கிரந்த முறை ஹோமம், பலரைத் துன்புறுத்தி அவர்களிடம் இருந்து பறித்த பணத்தைப் பலவாறாக தவறு வழிகளுக்குச் செலவழித்த கர்ம மூட்டைகளால் வரும் கண்டத்திற்குப் ப்ராயசித்தப் பரிகாரம் இது. படிப்பிச்சையும், மடிப்பிச்சையும், நிலப்பிச்சையும் எடுத்துச் செய்ய வேண்டிய இரகசியங்கள் நிறைந்த ஹோமம் இது. குருவிடம் இருந்து எளிதில் பெற முடியாத ஹோமம் பலவற்றில் இதுவும் ஒன்று.
தாதுவருட தீபாவளியன்று கொன்றை மரத்தின் சமித்துகளை (குச்சி) வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் நீராட வேண்டும். இதுவும் நரகாசுரன் பெற்ற வரமே....
some contents.. might be repeated... will re-edit or if pointed out in order...! thanks