எல்லையில்லாப் பரம்பொருள் தன்னுடைய தெய்வீக சக்தியை திருஅண்ணாமலை ஓளிப் பிழம்பாகவும், பஞ்ச பூத தலங்களில் லிங்க மூர்த்தி வடிவுகளிலும் வெளிப்படுத்தி உள்ளது.
அனைவரும் மிகவும் எளிமையாக தன்னை வழிபடும் வகையில் 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சர வடிவிலும் எழுந்தருளி உள்ளான் ஈசன். அதுபோல கனகசபை, சித்ர சபை, சிற்சபை, தேவ சபை, நிருத்த சபை என்னும் ஐந்து சபைகளில் நடராஜ நாட்டியங்களாகவும் திருக்காட்சி தந்தருளி உள்ளார் எம்பெருமான். ஆனால், இந்த ஆனந்த தாண்டவ நாட்டிய இரகசியங்களை சாதாரண மனிதர்களால் உணர முடியாது என்பதால் இந்த நாட்டியங்களை தரிசிக்கும் பேறு பெற்ற பதஞ்சலி, காரைக்கால் அம்மையார், வியாக்த பாதர், அகத்தியர் போன்ற முனிவர்களும் ரிஷிகளும் எம்பெருமானின் நாட்டியக் கோல இரகசியங்களின் தெய்வீக சக்திகளை சாதாரண மக்களும் பெறும் பொருட்டு நடராஜ மூர்த்தங்கள், திருக்கோயில் கோபுரங்கள், தீர்த்தங்கள், கொடிமரங்கள் இவற்றில் பதித்து வைத்துள்ளார்கள்.
பதஞ்சலி முனிவர் பெற்ற ஆனந்த தாண்டவ ரகசியத்தை சிதம்பரம் கோயில் மேற்கூரையில் தங்க கூரையில் வில்வத் தலங்களாக பதித்து வைத்திருப்பது போல் அகத்திய பெருமான் திருக்குற்றால சித்திர சபையில் தான் பெற்ற ஆனந்த தாண்டவ இரகசியங்களை சித்திரங்களாக பதித்து வைத்துள்ளார்.
27 நட்சத்திரங்களில் நடு நாயகமாக விளங்கும் சித்திரை நட்சத்திரம் திரிதினமாக விளங்கிய சக்தி மிகுந்த நாளில் பிரதோஷம் இணைந்த புண்ணிய காலத்தில் அகத்திய பெருமான் எம்பெருமானின் மந்தார மன்மத ஆனந்த தாண்டவம் என்னும் நடராஜ கூத்தை காணும் பேறு பெற்றார்.
பொதுவாக நடராஜ பெருமானின் அனுகிரக சக்தியை தாண்டவம், நாட்டியம் என்றும் அழைத்தாலும் இறைவன் ஒவ்வொரு யுகத்திலும் எத்தனையோ கோடி நாட்டியங்களை நிகழ்த்தி உள்ளான். அத்தனை கோடி தாண்டவ கோலங்களும் சிறப்பான பெயர்களை பெற்று விளங்குகின்றன.
அவ்வாறு அகத்திய பெருமான் சித்ர சபையில் பெற்ற தாண்டவமே மந்தார மன்மத தாண்டவம் என்று சித்தர்களால் புகழப்படுகிறது. அறிவு, ஆற்றல், அழகு அனைத்தையும் அனுகிரக சக்திகளாக அளிக்க்க்கூடியதே இந்த்த் தாண்டவம். இந்த அற்புத சக்திகளை உலக மக்களின் நன்மைக்காக அகத்திய வழித் தோன்றலான ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தனது குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசன் அருளால் பெற்று உலக மக்களின் நன்மைக்காக அதை அர்ப்பணித்தார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் திருக்குற்றாலத்த்திற்கு தனது அடியார்களுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் சித்திரை திரிதினமாக அமைந்த புனித நாளில் பிரதோஷ சுப முகூர்த்த வேளையில் சித்திர சபையை தரிசனம் செய்து மந்தார மன்மத தாண்டவ அருட் சக்திகளை உலக மக்களின் மேன்மைக்காக தாரை வார்த்து அளித்தார்கள். அந்த புனித நேரத்தில் திகழ்ந்த திருக்குற்றால சித்ர சபை தரிசனமே நமது அமுத தாரைகள் (பாகம் ஏழு) என்னும் நூலை அலங்கரிக்கின்றது என்பது இதுவரை நீங்கள் அறியாத ஆன்மீக இரகசியம்.
இவ்வாறு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய மந்தார மன்மத ஆனந்த தாண்டவ இரகசியங்களே சித்திர படங்களாக தற்போது தரிசிக்கிறீர்கள். அவை வெறும் சித்திரங்கள் அல்ல. எம்பெருமான் சிவபெருமானின் மந்தார மன்மத ஆன்ந்த தாண்டவ அருட் கோலங்கள். இடியாப்ப சித்த ஈசபெருமானின் கருணை கடாட்ச முத்துக்கள். அகத்திய பெருமானின் அமுதத் துளிகள். வெங்கடராம ஈசனின் அருட்கொடை.

From Notes: திருவலியதாயன் (சித்திர தொகுப்பு) புத்தகங்களை ஏழு, 7ன் மடங்காக வாங்கி வித்யா தானம் அளிப்பதும், அத்துடன் தக்காளி பிரிஞ்சி தானமும், நன்றாம்! ஓஃம்
மங்கை பங்கன் மாசறு மணாளா இங்கு தங்கி எம்குறை தீர்ப்பீர்- என்ற மதுமான் மகரிஷி துதியை ஓதி ஸ்ரீராமரை வலம் வந்து வணங்குவதும் சாயாவன திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அற்புத பலன்களை அளிக்கும் சிறப்பான வழிபாடாகும். சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் மேற்கண்ட மதுமான் துதியை ஓதியவாறே பார்த்தசாரதி ஆலய ராமபிரானை ஞாயிறு, வியாழக் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் சூரிய பகவானே அவர்களுக்கு சற்குருவை காட்டி அருள்வார்.
ஆப்பிரிக்கா நாட்டில் அரிசோனா என்னும் தலத்திலுள்ள புனிதமான கறுப்பு இன மக்களுக்கே முதன் முதலில் மனித வரலாற்றில் இறை தரிசனம் கிட்டியது. பொருளாசை என்பது ஒரு துளியும் அற்ற இப்புனிதர்களுக்கு கடவுளே மனமுவந்து தரிசனம் தந்தருளினார்.
(confirmation of jobs) வேலை நிரந்தரமாகும்.
என்ற பெயர் பெற்ற தீர்த்தங்களில் (உதாரணம் திருவெண்காடு, ஸ்ரீரங்கம், திங்களூர்) ஒவ்வொரு திங்கட் கிழமையும் சந்திர பகவானே தீர்த்த நீராடல் புரிந்து அத்திருத்தலத்தில் உறையும் சிவ மூர்த்தியை வழிபட்டுச் செல்கிறார். பவ்வேறு மனக்கொந்தளிப்புகளால் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தெளிவில்லாத நிலையில் இருப்போர் திங்கட் கிழமைகளில் சூரியோதய நேரத்தில் சந்திர தீர்த்தங்களில் நீராடி தீர்த்தக் கரையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் பஞ்சாட்சரம் ஜபித்து வந்தால் மனம் தெளிவடையும்.
ஒவ்வொரு வருடமும் எந்த அளவிற்கு கடவுளை நோக்கி முன்னேறி உள்ளோம் என்று ஆத்ம விசாரம் செய்து பார்ப்பதே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாகும்.
பகுத்து உணர வேண்டியதை உன்னால் படித்து உணர முடியாது என்பதை உணர்த்தவே குழந்தை புத்தகத்தைக் கிழிக்கிறது.
அளிக்கும் செல்வம் நிரந்தரமாய் தங்கி இருக்க இறைவனிடம் வேண்டி வழிபட்ட தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள ஸ்ரீசாமேவேதீஸ்வரர் திருத்தலமாகும். சோமநாதர் என்று முற்காலத்தில் திருநாமம் கொண்ட இத்தல இறைவனை குபேரன் வழிபட்டு, இத்தலத்தில் நெடுங்காலம் தங்கி திருப்பணிகள் செய்து தன் குபேர நிதிக்கு நிரந்தரத்தன்மை பெற்றார். தீராத தரித்திரத் தன்மை உள்ளோரும், கைக்கெட்டியது வாய்க்கெட்டாத அவலச் சூழ்நிலையில் வறுமையால் வாடுவோரும் திருமங்கல சிவாலயத்தில் உள்ள நந்தவனத்திற்கு நீர் பாய்ச்சும் திருப்பணியை ஏற்று மலர்ச் செடிகள் செழிக்க அருள்புரிவதால் திருமகளின் நிரந்தர செல்வ கடாட்சத்திற்கு பாத்திரம் ஆவார்கள்.
கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்
நா(நாக்கு), ரா(உள்ளிருந்து நல்ல சக்திகள் வெளியே செல்லாமல், வெளியே இருக்கும் தீய சக்திகள் உள்ளே செல்லாமல்), ய(யார்), அனன்(அனுபவிப்பவன்). சுருக்கமாகச் சொன்னால் நாக்கினால் நல்லதையே சொல்லி, நல்லதையே செய்பவன் நாராயணன்.
ஒரு வாரத்திற்குப் பின் இரண்டு வாரம் ராஜ்மாவை உணவில் சேர்க்கக் கூடாது. திரும்பவும் ஒரு வாரம் சுண்டலும், பின் இரண்டு வாரம் சுண்டல் சேர்க்காமலும் இருக்க வேண்டும்.
சீதையைக் கூறுவதற்குக் காரணம் என்ன? 108 அங்க லட்சணங்களும் முழுமையாகப் பெற்ற தேவியே சீதாப் பிராட்டி ஆவாள். அந்த அங்க லட்சணங்களுள் ஏதேனும் ஒன்றைத் தியானித்து வந்தாலே போதும் எல்லா ஞானங்களையும் பெற்று விடலாம். தற்போது அந்த அங்க லட்சணங்களுள் ஒன்றைக் கூட யாரும் பெற முடியவில்லை என்பதே கலியுக நிலையாகும்.
நீ சிரிக்காதே.
ஒரு அம்பு விட்டால், ஒரு குண்டு போட்டால் 10 மூட்டை நெல் விழ வேண்டும். அதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம். எந்த முட்டாளும் ஒரு கோழி முட்டையை உடைத்து விடுவான். ஆனால், எந்த அறிவாளியாலும் ஒரு முட்டையை உருவாக்க முடியாது.
அர்ச்சுனன் அம்பு எய்தான். பீஷ்மரின் தாகம் தீர்க்க கங்கை ஓடோடி வந்தாள். இதுதான் வல்லவனின் செயல்.
உங்கள் மூதாதையருக்கு நீங்கள் செய்யும் பித்ரு பூஜைகளும், பிறர் நலத்திற்காக ஆற்றும் தான, தர்மங்களுமே உங்கள் தலையைக் காக்கும். துப்பாக்கி உங்களைக் காப்பாற்றாது. துப்பாக்கி எப்போதும் ஒரு எதிர்மறை சக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தக்க வழிகாட்டியின் உதவியுடன் 20 ஆண்டு காலம் பூஜைகள் செய்து வந்தால் ஒரு எண்ணைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.
அவை மண் மறைத்த ரகசியங்கள், ஜோதி மறைத்த ரகசியங்கள், கோயில் மறைத்த ரகசியங்கள் ஆகும். ஜோதி மறைந்த ரகசியங்கள் தெரிய வேண்டுமனால் மூன்று கோடி பேருக்கு அன்னதானம் இட, ஒரு லட்சம் ஹோமங்கள் நடத்த வேண்டும், மூன்று இறை அடியார்களுக்கு இலவச திருமணங்கள் நிகழ்த்த வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு தான் இறக்கப்போகும் தேதி தெரிந்து விடும். இறப்பதற்குள் தான் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளும் தெரிந்து விடும். அச்சேவைகளை நிறைவேற்ற 80 ஆண்டு கால ஆயுள் கூட குறைவாகவே தெரியும். இப்படிக் குறைந்த காலத்தில் எவ்வாறு இறைவனுக்குச் சேவை செய்யப் போகிறோம் என்று நினைப்பதால் எழுவதே குழந்தையின் அழுகை.
பொருளடக்கம்
- வாழ்க்கையில் வெற்றி பெற எளிய வழி
- கணிப் பொறித் துறையில் நல்லறிவு பெற
- மாமியார்கள் சிறப்படைய …
- நடுக் கடலில் யார் துணை?
- இழந்த சொத்தைத் திரும்பப் பெற …
- பாதுகாப்பான விமானப் பயணம் அமைய
- வெற்றியின் இரகசியம்
- வெளிநாடு சென்றவர் நலமாய்த் திரும்பிட
- குழந்தை வரம் வேண்டுவோர்க்கு
- நல்வாழ்விற்கு நலந் தரும் வழிகள்
- தனி வழிக்கு அரிய துணை
- சகல வியாதிகளிலிருந்தும் விடுதலை பெற
- பூக்களின் புனிதம் பெறும் முறை
- சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!
- உணவுப் பற்றாக் குறை என்றுமே வராதிருக்க
- சந்ததிகள் செழித்தோங்க
- குழந்தைப் பேறு இல்லாக் குறை தீர
- கணவன் மனைவி என்றுமே பிரியாதிருக்க
- தேள் பயம் நீங்க
- கண்களைக் காப்பீர்!
- இழந்த செல்வத்தை மீண்டும் பெற முடியுமா?
- பில்லி, சூன்யம் நம்மைத் தாக்காமல் இருக்க
- வழிப்பறி பயம் அகல
- கண்ணாடி போட்டவர்கள் கவனத்திற்கு
- சுகப் பிரசவத்திற்கு அற்புத மருந்து
- பெயரில்லா மரத்தின் ரகசியம்
- திருமணத் தடங்கல்கள் விலக
- தீர்த்த நீராடல் தரும் திவ்ய பலன்கள்
- கண்ணைக் காக்கும் கண்ணாத்தா
- கேட்டதெல்லாம் கொடுப்பார்!
- இரும்பு வியாபாரம் சிறப்படைய
- ஆயுள் விருத்திக்கு ஓர் அற்புத பலா
- தாய் தவறு செய்தால்..
- தந்தைக்கு நற்கதி அளிக்கும் தனயன்
- வெளிநாடு செல்ல தெய்வீக விசா
- பதவி இழந்தோர் மீண்டும் பதவி பெற
- எலும்பு வைத்தியர்கள் புகழ் பெற
- தங்க நகை வியாபாரிகள் சிறப்படைய
- தலைக்கு வரும் ஆபத்து தலைப் பாகையோடு போக
- குடும்பத்தில் கடன் சுமை தணிய
- பொன்னும் பொருளும் குவிய
- மூடிய தொழிற் சாலைகள் திறக்க
- ஆசைகள் நிறைவேறும் வழி
- பரம்பரை நோய்கள் விலக
- கதிரவன் அளிக்கும் கண் பாதுகாப்பு
- கடைசி வரை குழந்தைகளுடன் கூடி வாழ
- குழந்தை பிறப்பால் தொல்லையா?
- மாங்கனி சோமாஸ்கந்தரின் மகிமை
- பணத்தைக் காக்கும் ஆபத்சகாயர்!
- நவ சர்ப்ப கருடன் உதவி பெற
- வாகனத் துறையில் முன்னேற
- தர்ம சிந்தனை உள்ளத்தில் பெருக
- மண வாழ்க்கை மணக்க வேண்டுமா?
- பிருகு முனி வழங்கும் பேரருள்
- நிலையான உத்தியோகம் பெற
- முத்தோஷத்தை முறியடிப்பது எப்படி?
- பதவி இழந்த அரசர்களுக்கும் பரிகாரம்!
- வெளியே சென்றவர் பத்திரமாய்த் திரும்ப
- யாருக்கு எந்த வாசல் சிறப்பு தரும்?
- துணி வியாபாரம் செழிக்க
- கீர்த்தியும் புகழும் தேடி வர
- அனைத்துக் காரியமும் சித்தியாக
- கடன்பட்டார் கலங்காதிருக்க
- வேலைக்குப் போகும் பெண்கள் துயர் தீர
- நல்ல குழந்தைகளைப் பெற வேண்டுமா?
- காசியை மிஞ்சும் ஸ்ரீவாஞ்சியம்!
- பள்ளிக்குச் சென்ற குழந்தை பத்திரமாக வீடு திரும்ப
- முன்னின்று உதவி செய்யும் முக்களா லிங்கர்
- கண்ணொளிக்கு நெய் விளக்கு
- மூல நட்சத்திரத்தின் மகிமை
- வைர வியாபாரிகள் நலமடைய
- நோயை விரட்டும் வழி
- ENT வைத்தியர்கள் சிறப்படைய
- கோயில் குருக்கள் நலமடைய
- தெற்கே ஒரு கங்கை
‘இன்பமே எந்நாளும், இனித் துன்பம் ஏதும் இல்லை’ இந்நிலையை அடையவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். ஆனால் இன்பத்தை அடையும் முயற்சியில் அனைவரும் முயன்றாலும் கூட கோடியில் ஒரு சிலரே இம்முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் அனைவரும் இன்பத்தை அடைவதாக நினைத்து துன்பத்திலேயே உழல்கின்றனர்.
படிக்கும் மாணவன் வேலை கிடைத்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறான். வேலைகிடைத்தவுடன், “உயர் பதவி பெற்றால் சந்தோஷமாக இருக்கலாமே!” என்று எண்ணுகிறான். உயர் பதவி பெறும் சமயம் வயதாகி விடுகிறது. கூடவே குடும்பப் பிரச்னைகளும், நோய் நொடிகளும் வந்துவிடுகின்றன அப்போது மீண்டும் மாணவ, குழந்தைப் பருவத்தை நினைத்து அந்த சந்தோஷம் மீண்டும் வராதா என்று ஏங்குகிறான்! பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையும் இவ்வாறாகவே அமைந்துவிடுகிறது.
நீங்களும் இந்த சராசரி மனித வாழ்வை விரும்புகிறீர்களா? “இல்லை, நான் ஒரு புதிய வாழ்வை, இன்பமே பொங்கிவழியும் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்”, என்றால் உங்களுக்கு உதவ வருபவர்கள் சித்தர்களே.
சித்தர் என்பவர் யார்? புரியாத பாடல்களைப் பாடி, மண்ணைப் பொன்னாக்கி, வானத்தை வில்லாய் வளைப்பவரே சித்தர் என்று நீங்கள் எண்ணலாம். இவை அனைத்தையும் ஒரு சித்தர் எளிதாக செய்ய முடியும் என்றாலும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு என்றும் இறைவனின் சித்தத்தில் நிறைந்து, தன் சித்தத்தில் இறைவனை நிறைத்து, இறைவனுடன் இரண்டறக் கலந்து வாழும் உத்தமர்களையே சித்தர்கள் என்கிறோம். இவர்கள் மொழி, மதம், இனம், தேச எல்லையைக் கடந்தவர்கள். ஆண், பெண், மனிதன், விலங்கு என்று பாகுபாடும் இல்லாதவர்கள்.
இத்தனை பெருமை மிகுந்த சித்தர் குல வழித் தோன்றலாய் விளங்கும் ஸ்ரீசிவகுரு மங்கள கந்தர்வா என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் உத்தம சீடரே ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001வது குரு மகா சன்னிதானம் சக்தி அங்காள பரமேஸ்வரி அடிமையும் இவரே. ஆன்மீக அன்பர்களும், நல்லதையே செய்யும் நாட்டம் உடையவர்களும் அன்புடன் குருமங்கள கந்தர்வா என்று கொண்டாடுவதும் இவரையே.
மக்களின் அன்றாடப் பிரச்னையான கல்வி, திருமணம், உத்தியோகம், வியாபாரம், நோய்கள் இவை அனைத்திற்குமே சித்தர்கள் எளியநிவாரண முறைகளைக் கூறியுள்ளனர். தம் குருநாதரின் குருகுல வாசத்தில் பயின்ற அந்த தெய்வீக அருள்வழிகளை எல்லாம் மக்களின் நல்வாழ்விற்காக இச்சிறு புத்தகத்தின் மூலம் அர்ப்பணித்துள்ளார்கள். இதை அனைவரும் படித்து, உணர்ந்து, தங்கள் வாழ்விலும் இயன்றவரை கடைபிடித்து நிலையான இன்பம் பெற்று வாழ எல்லாம் வல்ல திருஅண்ணாமலையாரின் திருப்பாதங்களைப் பணிகின்றோம்.
ஓம்
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமைகள்
கணபதியின் பெயரை வைத்திருப்பவர்களும், கணபதி உபாசனை செய்கின்றவர்களும், வாழ்க்கையில் காரிய சித்தியைப்பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி கழிந்து நான்காம் நாள் வரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த நாளில் இரவு ஒன்பதுமணிக்குமேல் சந்திரனைப் பார்த்த பிறகு வினாயக பூஜை செய்து 108 பூரண கொழுக்கட்டைகளை வினாயகருக்கு நிவேதனம் செய்து ஏழைகளுக்கு தானமாய் அளித்தல் சிறந்த பலன்களைத் தரும். மாசி மாதத்தில் வருவது மஹா சங்கடஹர சதுர்த்தி ஆகும். மேலும் சங்கடஹர சதுர்த்தி செவ்வாய்க் கிழமையோடு சேர்ந்து வந்திடில் மிகச் சிறப்புடையதாகும். இவ்வாறு தொடர்ந்து 12 ஆண்டுகள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து இரவில் கணபதி பூஜை செய்திடில் மனம் திட வைராக்கியம் அடைந்து எந்த நல்ல காரியத்தையும் துணிந்து செய்து வெற்றி அடைவர்.
நிறைந்த அறிவோடு இருக்கின்றவர்களுக்கு அதிகமான ஆசைகள் இருக்கக் கூடாது. உதாரணமாக ஒருவர் கணிப் பொறித் துறையில் (Computer science) திறமை நிறைந்து விட்டால் அதிகமான ஆசைகள் பிறந்து விடுகின்றன. எப்படி? தன்னைவிட பிறருக்கு அதிகமாகத் தெரிந்திருக்கக் கூடாது என்று புதுப்புது முன்னேற்றத் துணைப் பொறிகளை வாங்கிக் குவித்து பொய் சொல்லவும் ஆரம்பித்து விடுவர். இதற்குக் காரணம் அறிவோடு அதிகமான ஆசைகள் சேர்ந்ததே ஆகும். ஆகவே ஆசை படைத்த மனிதனிடம் அறிவு சேர்ந்துகொண்டால் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வர். இவர்கள் ஆசையால் செய்கின்ற, சொல்லுகின்ற பொய், புரட்டால் பிறருக்கும், தனக்கும் துன்பம் வராதிருக்க ஒரே வழி இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே அமர்ந்திருக்கும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவதுதான். இத்தகைய தட்சிணா மூர்த்தி எங்கே இருக்கிறார்? ஓமாம்புலியூர் என்னும் திருத்தலத்தில் ஸ்ரீபிரணவ புரீஸ்வரருக்கும், ஸ்ரீபுஷ்பலதாம்பிகைக்கும் மத்தியில் மகா மண்டபத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணா மூர்த்தியை வணங்கி முந்திரி கலந்த எலுமிச்சை சாதம் தானமாக அளித்து வந்திடில் ஆசை குறையும், அறிவு ஒளிவிடும். அன்னதானம், இலவச மருத்துவ வசதி போன்ற நற்காரியங்கள் சமுதாயத்தில் பெருகி, மனிதனுக்கு நன்மையே பயக்கும் விஞ்ஞான வளர்ச்சி பெருகும். சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார் கோயிலிலிருந்தும் ஓமாம்புலியூருக்குப் பேருந்து மூலமாய்ப் போகலாம்.
அறிவு வளர்ச்சி மிகுந்த இக்காலத்தில் வயதான மாமியார்கள் கூட தன் மருமகளை மகள் போல் பாவிக்கும் எண்ணம் மிகவும் குறைந்து வருகிறது. மருமகளை தேவையில்லாமல் சபிப்பது, திட்டுவது, துன்புறுத்துவது போன்ற செயலால் பாதிக்கப்பட்ட மருமகள், நல்ல மருமகன்கள் இத்துன்பத்திலிருந்து விடிவு பெற சித்தர்கள் நிறைய வழியைக் கூறியுள்ளார்கள். அதில் ஓர் எளிமையான வழியாக மாமியார்கள் கௌரி தீர்த்தத்தில் நீராடி அவர்கள் அருகிலேயே தங்கள் குழந்தைகளையும், மருமகள், மருமகன்களையும் நிற்கச் செய்துஅவர்கள் நீராடிய கூந்தலிலிருந்து விழும் நீர்த் திவலைகளை இவர்கள்மேல் விழும்படி உதறி, உலர்த்திடில் மாமியார்கள், மாமனார்கள் இட்ட சாபம் பறந்தோடி விடும். பிறகு அந்த இடத்தில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அன்னதானம் செய்யவும். இத்தனை சிறப்புடைய தீர்த்தம்தான் ஓமாம்புலியூர், ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்திலுள்ள தீர்த்த மாகும். மகன், மகள், மருமகன், மருமகள் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதுடன் தவறு செய்த மாமியார், மாமனார்களுக்கும் சிறந்த பிராயசித்தத்தைத் தருவதே ஓமாம்புலியூர் தீர்த்தமாகும்.
மீனவர்களும், கடல் பிரயாணம், கப்பல், படகு, சுற்றுலா செல்கின்றவர்களும், படகு வீடுகளில் வசிக்கின்றவர்களும், படகுப் போட்டியில் கலந்து கொள்கின்றவர்களும், படகுகளில் ஏறித் தங்களுடைய ஊருக்குச் செல்ல வேண்டியவர்களும் உயிருக்கு ஆபத்து வராமல் சிறப்பாக இல்லம் திரும்ப வேண்டுமெனில் ஆன்மீகத்தில் வருமுன் காக்கும் வழியைச் சித்தர்கள் குறித்துள்ளனர். அதாவது கப்பலிலோ, படகிலோ, மோட்டார் படகுகளிலோ, வட்டப் பரிசிலிலோ, கட்டு மரத்திலோ ஏறும் முன் மனமார வேண்ட வேண்டிய வாசகம் ஒன்று உண்டு. அதுதான் “ஐயாற்றுடை அப்பனே காக்க வா” இதை ஜபிப்பவர்களைக் காப்பதற்கென்றே குரல் கொடுத்த விநாயகர் காத்துக் கொண்டிருக்கிறார். எங்கே? திருவையாறு பஞ்சநதீஸ்வரர் ஆலயத்தில் ஆட்கொண்ட சந்நிதி அருகே! முடிந்த போதெல்லாம்அந்த விநாயகப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்செய்து அன்னதானம் செய்யவும்.
பொருளுதவி, பண உதவி, நிலபுலன்களால் வரவேண்டிய நியாயமான தீர்ப்புகள், வீட்டைத் தேடி வர வேண்டும் என்றால் ஒரு அற்புதமான வழிபாட்டை நீங்கள் செய்தாக வேண்டும். சித்தர்களும் தெய்வங்களும் மகான்களும் குடியிருந்து வாழ்ந்த பழைமையான வரந்தரும் வன்னிமரங்களைப் பார்ப்பது அரிது. அதில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாறு, சங்கரம்பந்தல் ஆகிய ஊர்களுக்கு இடையில் எடுத்துக் கட்டி சாத்தனூர் உள்ளது. அங்கு தர்ம சாஸ்தாவே கோயில் கட்டி பூஜித்த விநாயகர் உள்ளார். அக்கோயிலுக்குத் தென்புறம் மிகப் பழைமையான வன்னிமரம் உள்ளது. விஜயதசமி அன்று விநாயகரை வணங்கி இந்த வன்னி மரத்தை 108 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி பெரிய கொத்துக் கடலை கலந்த அன்னதானம் செய்து நல்நினைவோடு இல்லம் திரும்பிடில் நியாயமான முறையில் வர வேண்டிய பொருள் வீடு தேடி வரும்.
திருவெண்காடு பெரும்பள்ளம், திருநள்ளாற்றிற்கு நடுவில் உள்ளது பாசிகுளம் விநாயகர் கோயில். இந்தக் கோயிலுக்கு வடகீழ் மூலையில் ஓர் அற்புதமான அரசமரம் உள்ளது. இந்த அரசமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த அரச மரம் ஆகாய சொரூப சக்தி உடையதால் விமானப் பிரயாணம் செய்வோர், விமான ஓட்டிகள், விமான உதிரிபாகங்கள், விமானத் தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபட்டிருப்போர் இவர்களுக்கு எந்த வித ஆபத்தும் வராமலிருக்க விநாயகரை வணங்கி அரசமரத்தை செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் பகலில் 108 முறைக்குக் குறையாமல் பிரதட்சணம் செய்து (வலம் வந்து) பாதம் பருப்பு கலந்த பால் பாயசம், தக்காளி சாதம் அன்னதானம் செய்திடில் விமானத் துன்பங்கள் வராது.
வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று நிலைகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். ஒன்று நிதானம், இரண்டு சோர்வடையா முயற்சி, மூன்று தெய்வ நம்பிக்கை. இந்த மூன்றும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்றால் கீழ்க் கண்ட வழிமுறைகளில் உறுதிப்பாடு கொள்ளுங்கள்.
| தினமும் சந்திப்பது | இன்பமும், துன்பமும் | இதைக் கண்டு தளராதே |
| என்றுமே போகாதது | புகழ், பழி | இதற்காக ஆசைப்படாதே |
| சென்றால்வராதது | மானம், உயிர் | நீங்கள் திடமாக இருங்கள் |
| நம்மைத் தேடி வருவது | இளமை, மூப்பு | மயங்கி விடாதீர்கள் |
| நம்மைத் தொடர்வது | பாவம், புண்ணியம் | அலட்சியப் படுத்தாதீர்கள் |
| நம்மை ஆட்டிப் படைப்பது | ஆசை, துக்கம் | அடிமையாகி விடாதீர்கள் |
| உதறித் தள்ள முடியாதது | பசி, தாகம் | யார் வயிற்றிலும் அடிக்காதே |
| நம்மைப் பிரியாமல் துன்புறுத்துவது | பந்தமும், பாசமும் | பைத்தியம் பிடித்து அலையாதே |
| தன்னைத் தானே அழிப்பது | பொறாமை, கோபம் | அகங்காரம் கொள்ளாதீர்கள் |
| பாகுபாடின்றிச் சந்திப்பது | பிறப்பு, இறப்பு | தெரிந்தும் பிறரைத் துன்புறுத்தாதே |
நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாது என்று! நிச்சயமாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள், இன்பங்கள் யாவும் உங்களுக்குத் தெரிந்துதான் நடக்கின்றன. ஆகவே குருவையும், தெய்வத்தையும் நம்புங்கள். இன்னும் தெரியாததெல்லாம் தெரிய வரும், உணராததை எல்லாம் உணர முடியும்!
கணவன் வெளிநாடு சென்று வராமல் இருந்தாலும், நாட்டைக் காக்கும் பணியில் போருக்குச் சென்றிருந்தாலும், எதிரிகளின் தொல்லையால் kidnap செய்யப்பட்டு (சிறையெடுக்கப்பட்டு) மறைந்து இருந்தாலும் ஆபத்தில்லாமல் திரும்ப ஒரு வழியுண்டு. வள்ளியூரில் இருக்கும் மலைக் குகை முருகனுக்குத் தொடர்ந்து கையால் அரைத்த சந்தனம் சாற்றி பிரசாதமாக எடுத்து வைத்து அந்த சந்தனத்தை உபயோகித்து வந்தால் கைமேல் இப்பலன் கிடைக்கும். பற்பல காரண காரியங்களால் பிறர் அறியாமல் மறைந்துபோன மக்களுக்கு நல்வழி காட்டவே குகை முருகன் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார். இவரைச் சரணடைந்து நலம் பெறுங்கள்.
குழந்தை வரம் தருவதில் பல முனிவர்கள் பல விதமாய் தவம் செய்து அருள் பெற்றுள்ளனர். அதில் ஒன்பது பெருமாள் உருவங்களைத் தன் தவ வலிமையால் நிலை நிறுத்தி பிள்ளை வரம் தரும் வரம் பெற்றவர் பிருகு முனிவராவார். இந்த முனிவரை வேண்டுவோருக்கு முன் வினைகளைக் களைந்து வரம் பெற வழி செய்வார். இவர் வணங்கும் ஒன்பது பெருமாள் வடிவங்களோடு தானும் அமர்ந்திருக்கும் இடம் உத்திரமேரூர் கோயிலாகும். இந்த பிருகு முனிவரை உண்மையாய் வேண்டுவோருக்கும், இவ்விடத்தில் தான தர்மங்கள் செய்வோருக்கும் மக்களின் வேண்டுதலை ஒன்பது பெருமாளுக்கும் சமர்ப்பிக்கின்றார் பிருகு முனிவர். உண்மையான வேண்டுதல் யார் பூணுகின்றார்களோ அவர்களுக்கு இங்கிருக்கும் பெருமாள் செவி சாய்க்கிறார்.
மன்னிப்பதற்கு ஒரு அளவு உண்டு. தொடர்ந்து மன்னித்துக் கொண்டேயிருந்தால் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாது போய்விடும். நம்மைச் சுற்றித் தவறுகள் தொடருமாயின் தொடர்ந்து மன்னிப்பதை நிறுத்திவிட்டு தவறு செய்பவர்களை தூர வைத்துத் தொடர்பை அறுத்து விடுவது நல்லது. இதில் என்னென்ன கர்ம நிலைகளுக்கு ஏற்பபடி நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
- குடும்பத் தேவைக்கு வேண்டும் அளவு பணம் கிடைத்து விட்டால் போதும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் வருகின்ற மிகப் பெரிய ஞானமாகும். இவ்வாறு ஆரம்பித்த பண ஆசை அதிகமாகி அதுவே வெறியாக மாறும்பொழுது:- அனைத்தையும் தர்மம் செய்து விடு.
- மண் பூமி மீது ஆசைப்பட்டு அதை அதிக அளவில் அடைய முற்படும்போது:- சொத்துக்களை வசதியில்லாத உறவினர்களுக்கு தானம் செய்து விடு.
- பெண் போகத்தால் காம தேவனின் கர்ம எல்லைக்குள் அகப்படும்போது:- குற்றால நீர்வீழ்ச்சியில் அமைதியாய் அமர்ந்து விடு.
- அதிலும் வேகம் தணியவில்லை என்றால் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ருத்ரப் பிரயாகையில் அமர்ந்து விடு.
- வேலை பளு அதிகமாக இருக்கும் சமயத்தில் குழந்தைகள் தொல்லை தரும்போது:- அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று விடு.
- கணவனின் பொறுப்பற்ற தன்மையால் குடும்பம் சீரழியும்போது:- பாசத்திற்கு அடிமை ஆகாமல் தாய், தந்தையின் உத்தரவு பெற்று யாரிடமும் சொல்லாமல் தூர இடத்திற்குச் சென்று விடுவது நல்லது.
- மாமியார், மாமனார் மற்றும் மருமகளிடம் புரிந்து கொள்ளாத தன்மை ஏற்படுமாயின்:- சண்டையில்லாமல் விலகி இருப்பது நல்லது.
- பணப் பற்றாக் குறையால் குடும்பத்தில் செலவு அதிகமாகும்போது:- வறட்டுக் கௌரவத்தைக் குறைத்துக் கொண்டு கடன் வாங்காமல் பகுதி நேர வேலை செய்வதால் நலம் பெறலாம்.
- நம்மிடம் அன்பு செலுத்தியவர் மாண்டு போகும்போது:- அவர் இறந்த திதியில் தர்ப்பணம் அன்னதானம் செய்தல் நலம்.
- மனிதனுக்கே உரிய சுய கௌரவம் பாதிக்கும்போது:- அந்த இடத்தை விட்டுத் தூர சென்று விடு.
- கோபத்தால் பொறுமை இழக்கும்போது:- உன்னுடைய குழந்தைப் பருவ புகைப் படத்தைப் பார். பொறுமை வந்து விடும். வயதானாலும் உங்களுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை அடிக்கடி பார்த்தால் பொறுமை அதிகமாக வரும். ஆகவே அனைவர் வீட்டிலும் அவரவர் குழந்தைப் படத்தை மாட்டி வையுங்கள்.
- அளவுக்கு அதிகமான உற்சாகத்தால் மனதில் தீவிர கிளர்ச்சி உணர்வு வெறியாக மாறும்போது:- பச்சைக் கார வெங்காயத்தைக் கண்ணில் வை, வெறி அடங்கும்.
- உண்மையே கூட சில சமயங்களில் சுடும் - அப்போது கடவுள் முன்னால் சென்று அழுது விடு.
இரவு பகலாய்த் தனி வழியே வாகனம் ஓட்டுவோர், பிரயாணம் செய்வோர் நிம்மதியாக பிரயாணம் செய்ய வழிக் காவலாய் வந்து துணை புரியும் பைரவர் அற்புதமாய் இருக்குமிடம் அரிய துறையாகும். அதோடு மட்டு மல்லாமல் காற்று சேஷ்டை, துர்ஆவி, நிழல் ஆடல் போன்ற துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெற ஸ்ரீவர மூர்த்தி ஸ்ரீபைரவரின் திருக்கோலத்தில் முகுந்த முனிவருக்குத் திருக்காட்சி அளித்த உத்தமர். ஆதலால் இவரை வேண்டி முழு முந்திரிப் பருப்பு கலந்த சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் தான தர்மங்கள் செய்து வழிபடுவோர்க்கெல்லாம் நற்பலன் அளிப்பார்.
எமதர்ம ராஜனின் ஆசியோடு நிம்மதியாக இறைவனடி சேர்வது வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பாக்கியமாகும். ஆனால் எல்லாருக்கும் அவ்வாறா கிடைக்கிறது? அவ்வாறு கிடைக்கவேண்டும் என்பதற்கு வழி சொல்வதற்கு யாரும் இல்லையே என்று ஏங்குவோர் பலர். இவர்கள் சதய நட்சத்திரத்தில் ஸ்ரீமேகநாத சுவாமி குடியிருக்கும் திருமீயச்சூர் சென்று சங்காபிஷேகம் செய்து, சங்கு புஷ்பங்களால் அர்ச்சித்து, பிரண்டை கலந்த அன்னத்தைத் தானம் செய்து அரைத்த சந்தனத்தால் காப்பிட்டு வணங்கிடில் சகல வியாதிகளின் துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து, எமதர்ம ராஜனின் ஆசிபெற்று துன்புறாமல் நிம்மதியாய் இறை நினைவோடு இயற்கை எய்த முடியும்.
பூலோகத்தில் வாசம் உள்ள மலர்களைத் தங்கள் சுய நலத்திற்காகவும், ஒன்று சொல்வது ஒன்று செய்வது - இதையே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கும், மக்களுக்குச் சேவை செய்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றுகின்றவர்களுக்கும், சிவம் அகன்ற நிலையில் இருக்கின்றவர்களுக்கும் (இறந்தவர்களுக்கும்), பூமாலைகளைச் சூட்டிப் பூக்களுக்குத் தோஷத்தை உருவாக்கக் கூடாது. இவர்களுக்காக பூக்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்துப் பூக்களையும் இறைவனுக்கே சூட்டி பிரசாதமாக சிறிது எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பது சித்தர்கள் வாக்காகும். அதிலும் திண்டு மாலைகள் எல்லாம் இறைவனுக்கு மட்டும்தான் அணிவித்தல் வேண்டும். புஷ்பங்களைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதாலோ, மிதிப்பதாலோ, நகங்களால் கிள்ளி அர்ச்சனை செய்கின்றேன் என்று துன்புறுத்துவதாலோ முரட்டுத் தனமான முடிவுகள் எடுக்கின்ற நிலைக்கு ஆட்படுகின்றோம்.
துர்வாசர் சாபம் பெற்ற ஐராவதம் பூமியில் காட்டு யானையாய்த் திரிந்து சிவபெருமானை வழிபட்டு தெய்வத் திருஅருளால் சாபம் நீங்கப் பெற்று திருப்பாற்கடலில் பிறக்க வரம் பெற்றது. அவ்வரத்தால் தேவசிரஸ்குஞ்சரா என்னும் பெயருடைய அற்புத சங்கு ஒன்றில் பிறவி எடுத்து தவம் இயற்றியது. தன் தவம் சித்தியானபோது அமிர்தத்துடன் வெளிவந்து தேவலோகத்தில் சிறப்புடன் வாழ்ந்தது. இந்த ஐராவதம் தவம் இயற்றி, தேவசிரஸ் குஞ்சரா சங்கை வைத்து பூஜித்து தேவர்களுடைய வாகனமாய் ஆவதற்கு அருள் செய்த தெய்வம் ஸ்ரீமரகத வல்லி சமேத ஸ்ரீஇந்திரேஸ்வரர் ஆவார். இவரை முக்தீஸ்வரர் என்றும் அழைப்பதுண்டு. புஷ்பங்களைத் தவறாகப் பயன்படுத்திய துன்பங்கள் நீங்கவும், வளமான வாழ்வைப் பெறவும் ஸ்ரீஇந்திரேஸ்வரரையும் இச்சங்கையும் வைத்துப் பூஜித்து செல்வ நிலையைப் பெருக்கிக் கொள்வீர். தேவ சிரஸ் குஞ்சரா சங்கினை ஆசீர்வதித்து அருள்செய்த தெய்வமாகிய ஸ்ரீஇந்திரேஸ்வரர் இருக்குமிடம் மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில்அருகே குளத்தின் மேல் கரையில் அமைந்திருக்கிறது. (தேவசிரஸ் குஞ்சரா சங்கு, நமது மூதாதையர்களின் ஆசியைப் பெற்றுத் தரும் காமதேனு மடிச் சங்கு போன்ற அற்புத பல சங்குகளை சென்னையில் உள்ள எமது ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் பெற்றுக் கொள்ளலாம்).
சர்க்கரை வியாதி தரும் தொல்லையிலிருந்து விடுதலை பெறவும், வெளிநாடுகளுக்குச் சென்றவர் நல்ல வருமானத்தோடு தாய் நாடு திரும்பவும், கரும்புப் பயிர் அதிக மகசூல் தரவும் நம்முள் நல்வரம் தருபவராய் விளங்கும் சிவன் உண்டு. அந்த சிவன் கோயிலில் சர்க்கரையோடு அரிசி, கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு போன்ற தான்ய குருணைகளையும் சேர்த்து அக்கோயிலில் இருக்கும் எறும்புகளுக்கு தானமாய் இட்டால் மேற்கண்ட பலன்கள் யாவும் நம்மைத் தேடி வரும். இந்த தெய்வத்தின் பெயர் என்ன தெரியுமா? அவர்தான் ஸ்ரீகரும்பேஸ்வரர். இச்சிவன் உறையுமிடம் தஞ்சாவூர் அருகே உள்ள கோயில்வெண்ணி என்ற இடமாகும்.
குடும்பத்தில் உணவுப் பற்றாக் குறை வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. தான் தோன்றித் தனமாய் தீய நண்பர்களுக்காகச் செலவழித்தல், மாது, மது, சூது, புகை பிடித்துப் பணத்தைச் செலவழித்தல், தெய்வ பக்தி உடைய மனைவி சொல்லும் நல்வழியில் செல்லாமல் இருப்பது போன்றவை முக்கியமான காரணங்களாகும். இதனால் குடும்பத்தில் உணவுப் பற்றாக்குறை வந்தால் மேலே கூறிய தீய செயல்களை விடுத்து மன்னார்குடி அருகே உள்ள பாமினி சிவன் கோயிலில் ஐப்பசி முதல் நாள் அன்று சாதம், குழம்பு, ரசம், காய்கறிவகைகள், அப்பளம், வடை, பாயசம் போன்ற பல்வகை அறுசுவை உணவினை சிவனுக்குப் படைத்து அன்னதானம் செய்திடில் வீட்டில் உணவுப் பற்றாக்குறை வரவே வராது.
பொதுவாக கோலூன்றி நடப்பவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களே. முதியவர்கள் அனுபவத்தில் சிறந்தவர்கள். அதோடு மட்டுமல்லாமல் அதிகமாக ஜபம், தபம், தானம், தர்மம், பூஜைகளைச் செய்தவர்களையும் முதியோர் என்றே அழைப்பர். ஜப தபங்கள், தான தர்மம் செய்யாதவர்களை வயதானாலும் முதியோர் என்று அழைக்கக் கூடாது. வயதானோர் என்றுதான் அழைப்பது வழக்கம். பேச்சு வழக்கில் பெருசு என்று கூப்பிடுவார்கள். ஆகவே தெய்வ பக்தியில் சிறந்த முதியோர்களுக்கு ஊன்றுகோல் தானம் அதாவது walking stick தானம் செய்திடில் குடும்ப சந்ததி நல்ல முறையில் தழைத்தோங்கும் என்பது சித்தர்கள் வாக்காகும். அவ்வாறு தாய், தந்தை நல்ல தர்ம சிந்தனை, செயல் உடையோர்க்கு தரும் கோல் முக்தி ஊன்று கோலாகும். முக்தி ஊன்று கோல் தருவதற்கு விருப்பம் உடையவர்கள் தேக்கு, பலா, மா, அரசு, புரசு போன்ற மரங்களாலான ஊன்றுகோலைச் செய்து கோயம்புத்தூர் காரமடை ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோலூன்றி விநாயகருக்கு சமர்ப்பித்து அன்னதானம் செய்து நல்ல முதியோர்களுக்கு தானமாய் அளித்திடில் ஆண் வாரிசு இல்லாதபெண் வாரிசு மட்டும் உள்ள குடும்பங்களில் சந்ததிகள் செழித்தோங்குவர்.
பலருக்கு வீடு வசதி, வாகன வசதி, பண வசதி இவையனைத்தும் இருந்தும் சந்ததி விருத்தி ஆகாமல் இருப்பதுண்டு. இதற்குப் பல காரணங்கள் உண்டு. கோ தோஷம், நாக தோஷம், கூடா நாள் தோஷம், சூன்ய திதி தோஷம், சுக்கிர, வக்கிர தோஷம், கணவன் மனைவியைப் பிரித்த தோஷம், பிறர் குழந்தைகளைத் திருடி, தாய், தந்தையைப் பிரித்த தோஷம், பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றிய தோஷம், பிறர் கர்ப்பம் கலைத்த தோஷம் இன்னும் பல தோஷங்கள் உண்டு. இந்த தோஷத்தால் பாதிப்படைந்தோர்கள் தோஷத்தின் வேகம் ஓரளவேனும் குறைய பல வழிகள் இருந்தாலும் அதில் இதுவும் ஆன்மீகம் காட்டும் ஒரு வழியாகும்.
பொதுவாக வாழை மரம் மணலில்தான் பயிராகும். அதன் வேர்களுக்கு இளகிய மணல் தேவை. ஆனால் கல்மலையில் வாழை வளர்வதென்றால் அது தெய்வத்தின் செயலால்தான் முடியும். ஆகவே கல்மலையில் வளர்ந்த வாழைக்கு தெய்வ சக்தி அதிகம். இவ்வாழை உள்ள இடத்தில் கையால் அரைத்த மஞ்சள், சந்தனமிட்டு வழிபட்டு வந்து தான தர்மம் செய்திடில் வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும் என்பது சித்தர் வாக்காகும். இந்த இடம் சிவன் உறையும் இடமாகும். இது எங்கு உள்ளது? அதுதான் நாகப்பட்டினம் அருகே உள்ள தேவூர் சிவாலயம். இங்கு தலமரமாக பல தெய்வ வாழைகளின் ஒருவகையான வெள்வாழை உள்ளது. இந்த தெய்வீக வாழைகளை தரிசித்து மஞ்சள் நிற வஸ்திரங்களையும், தேங்காய் சாத தானமும் செய்து சந்ததி வாழ வழி தேடுவீர்!
கணவன் மனைவி பிரிவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதோடு மட்டுமல்லாமல் புலர் இளந் தம்பதியரைப் பிரிப்பதற்கென்றே கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்கின்றனர். அதில் இளம் விதவைகளும், முதிய விதவைகளும் மனைவியை இழந்தோர் பலரும் இத்தகைய தீய செயல்களில் ஈடுபடுவதுண்டு. மேலும் பணத்திற்காக, சொத்திற்காக, தங்களுக்குத் திருமணம் ஆவதற்கு முன் இவளையோ, அவரையோ காதலித்தோம் என்பதற்காக சதிகள் செய்பவரும் உண்டு. இத்தனை பேரும் இழுத்து வாரிக் கொண்டு தம்பதிகளைப் பிரிக்க நினைத்து செயல்பட்டாலும் அவர்களின் செயல்கள் யாவற்றையும் தவிடு பொடியாக்கும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. இந்த தெய்வ சக்தி நிறைந்த இடத்தில் தம்பதிகள் இணை பிரியாமல் ஒன்றாய் வாழ்வதற்கும், நன்றாய் வாழ்வதற்கும் அருள் செய்பவர் யார் தெரியுமா? அவர்தான் ஸ்ரீவரகூரின் வெங்கடேசப் பெருமாள் கோயிலின் மூலவராகிய ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் ஆவார். இங்கு பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதபடி ஆதரவாக லட்சுமியை அணைத்தபடி உள்ளார். பிராட்டியும் தன்னை எந்தச் சக்தியும் பிரிக்க முடியாதபடி அன்பொழுகத் தழுவியுள்ளார். இத்தலத்திற்கு தம்பதி சமேதராய் வந்து வணங்கி ஒன்பது கஜ சேலைகளையும், பொன் மாங்கல்ய தானத்தையும் செய்திடில் எந்தத் தீய சக்தியும் கணவன் மனைவியைப் பிரிக்காது.
இந்தக் காலத்தில் மக்கள் பலர் பூச்சிகளைக் கண்டே பயப்படுகின்றனர். அதிலும் தேள் என்றால் போதும் அவ்வளவு பயத்தைத் தரக் கூடியது. தேள் நம் அருகில்இருந்தாலும், நம்மீது விழுந்தாலும், நாம் அதன் அருகில் சென்றாலும் நம்மைத் தீண்டாமல் இருக்க பெரியோர்கள் ஒரு வழியை வைத்தார்கள். கோயம்புத்தூரில் உள்ள அவினாசி ஆலயத்தில் உள்ள அம்பாள் சன்னிதி சுவரில் தேள் உருவம் உள்ளது. இந்த உருவத்தை முடிந்தபோதெல்லாம் வணங்கி “அவினாசி அம்மா காப்பாய்!” என்று வேண்டி வேக வைத்த வேர்க்கடலை தானம் செய்திடில் தேள் பயம் நம்மை விட்டு விலகும்.
‘கோபுர தரிசனம் கோடி பாப நாசனம்’, என்றனர் பெரியோர்கள். ஒன்பது கலசங்கள் உடைய கோபுரத்தைத் தினமும் தரிசனம் செய்து வந்தால் நமது வாழ்வில் அன்றாடம் வரும் பல பிரச்னைகளுக்கு நல்ல விதமான தீர்வை அளிக்கிறது. தினமும் ஒன்பது கலசங்கள் உள்ள கோபுரத்தை நேரில் தரிசனம்செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் ஒன்பது கலசங்களோ அல்லதுஅதற்கு மேலோ கலசங்கள் உள்ள கோயில் கோபுரங்களின் புகைப்படங்களை தமது படுக்கை அறையில் வைத்திருந்து காலை எழுந்தவுடன் இத்தரிசனம் பெறுவதால் நாம் அன்றாடம் சந்திக்கும் பல துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.
மேலும் கோபுரங்களின் நிழல் தரிசனமும் அவ்விடத்தில் செய்யும் தான தர்மங்களும் பல காரியங்களைச் சாதித்துத் தரும். அதிலும் கண் வைத்தியர்கள் தங்கள் துறையில் சிறப்பைப்பெறவும் நிழல் தரிசனம் பெரிதும் உதவுகின்றது. அது மட்டுமா? கணினி பொறித்துறையில் வேலை பார்த்துக் கண் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்காமல் கண்ணைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எதிர்காலத்தில். இதற்கு அருள் செய்யும் நிழல் தரிசனம் திருவாரூர் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீஅசலேஸ்வரரின் ஆலய நிழலாகும். இதில் ஓர் அற்புதம் என்னவென்றால் இந்த ஆலயத்தின் நிழல் கிழக்கு திக்கில் மட்டுமே விழும். இந்நிழலை தரிசித்து கேரட் அல்வா, கேரட் பாயசம் போன்ற கேரட் கலந்த உணவு வகைகளைத் தானமாக தொடர்ந்து அளித்து வந்திடில் சிறந்த பலன்களைப் பெறலாம்.
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தைச் சேர்த்தவர்கள் உண்டு. அவ்வாறு உழைத்துச் சேர்த்த பணத்தை நல்வழியில் செலவு செய்திடில் அப்பணமும் வளரும். தீய வழியில் செலவு செய்த பணம்தான் நமக்கு நோயாகவும், எதிரிகளாகவும் எதிர்காலத்தில் நம்மைத் தாக்கும். ஆகவே பணத்தை தான தர்மத்திலும், கோயில் திருப்பணியிலும், 32 அறங்களிலும் செலவு செய்தல் நலமாகும். இத்தர்மங்கள்தான் என்றும் நம்மைக் காக்கும். ஆகவே நல்வழியில் செலவு செய்து ஏழ்மையானோர் மீண்டும் இழந்தசெல்வத்தைப்பெற ஆன்மீகத்தில்வழி கூறியுள்ளனர் சித்தர்கள். இழந்த செல்வத்தை மீண்டும் பெற வழி செய்யும் தெய்வம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் ஆவார். அவர் அருள் புரியும் இடம் திருச்சி அருகில் உள்ள லால்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலத்தில் குடியிருக்கிறார். இவரை நேர்த்தி வைத்து ஒரு மண்டலம் வலம் வந்து தான தர்மம் செய்திடில் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். மீண்டும் செல்வம் பெற்றவர் பெரிய தான தர்மங்களைச் செய்தல் வேண்டும். தீய வழிக்குப் போகக் கூடாது. சாமவேதம் இங்கு ஓதுவதால் பெருத்த பலன் உண்டு.
சாம வேதம் அறியாதோர் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய, “வாசி தீரவே காசி நல்குவீர்...” என்னும் தேவாரப் பாடலை 11 முறைக்குக் குறையாமல் ஓதி தக்காளி சாதம் தானமாக அளித்தல் நலம். இழந்த செல்வத்தை மீண்டும் பெற அருள் செய்யும் சக்தி உடையவர், இத்தலத்து சனீஸ்வரர் ஒருவரே. அவரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்ன? இடது புறம் பார்த்து நிற்கும் சனீஸ்வரரின் வாகனமாகிய காகம் இத்தலத்தில் வலது புறம் பார்த்து நிற்பதே முக்கிய காரணமாகும்.
அபிசார வேள்வி என்று உண்டு. அதில் முறையாக எடுத்து ஸ்வரம் பிசகாது மந்திரம் ஜபித்திடில் அந்த மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு வேள்வித் தீயில் இருந்து வெளிவரும் அனைத்து மிருகம், பட்சி, பாம்பு, தேள், புலி, சிங்கம், யானை, பூதம் போன்றவைகள் எதிரிகளைத் தாக்கும் வல்லமையுடையது. எப்பொழுதுமே நமக்கு எதிரிகள் வெளியில் கிடையாது. நமக்குள்ளேயேதான் இருப்பார்கள். அதுபோல நம்முடைய உப்பை, சோற்றைத் தின்றவர்கள்தான் நமக்கு எதிரிகளாய் மாறுவர். இவர்கள் செய்யும் பூஜைகள், ஏவல்கள் எல்லாம் நம்மைத் தாக்கித் துன்புறுத்தாமல் இருக்க பல வழிகள் உண்டு. எந்த மந்திரவாதிகளையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம். அனைத்து மந்திர, தந்திர, சூன்யம், பில்லி, ஏவல்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வழுவூரில் இருக்கும் ஸ்ரீகஜ சம்ஹார மூர்த்தி அருள் இருந்தால் போதும். துன்பம் நீங்கப் பெறலாம். இந்தக் கஜசம்ஹாரமூர்த்திக்குப் பின்புறம் சுவரில் அபிசார நிவர்த்தி யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. சிவாசாரியாரைக் கேட்டால் சொல்லுவார்கள். சுவாமியையும் இந்த யந்திரத்தையும் தரிசனம் செய்து சந்தன பிரசாதம் பெற்று தினமும் அதை பயன்படுத்தி (நெற்றிக்கு இட்டு, உண்டு) வந்தால் அனைத்துத் துன்பங்களும் தானே விலகும். சர்க்கரைப் பொங்கல் தானம் சிறப்புடையது. திருவாரூர் சாலையில் நெய்க்குப்பை என்னும் இடத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர். மயிலாடு துறையிலிருந்து நகரப்பேருந்து கோயில் வாசல் வரை செல்கிறது.
விட்ட பொருள் கிட்டவும் வழிப்பறி இன்றி நிம்மதியாய்ப் பிரயாணம் செய்வதற்கும் அருள் செய்யும் அற்புதலம் ஒன்று உண்டு. திருமுருகநாத சுவாமி என்னும் இத்தலம் கோவை-திருப்பூர் சாலையில் அவிநாசி யிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் உண்டு. சுப்பிரமணியன் என்ற பெயர் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இத்தீர்த்தத்தில் நீராடுவது நல்லது. இத்தலத்திற்கு திருமுருகன்பூண்டி என்றும் பெயர்.
கணிப் பொறியில் அதிகமாக வேலை செய்பவர்களும் கண்ணாடி போட்ட சிறுவர்களும் அடிக்கடி சென்று வணங்க வேண்டிய தெய்வம் ஒன்று உண்டு. அதுதான் திருமயிலை தெற்கு மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் உடன் உறை ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயம். அங்கு சனிபகவானுக்கு நேர் எதிரே சுக்கிரன் குருந்த மரத்தடியில் சிவபெருமானை வழிபட்டு நிற்கிறார். இவரை விடாமல் வழிபட்டு ஏழைகளுக்கு மருதாணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் இவற்றை தானமாக அளித்து வந்திடில் கண்ணொளி நலமுடன் இருக்க வழி செய்வார்.
திருச்செங்கோடு மூலவர் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் திருவடியின் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது அதிசயங்களில் ஒன்றாகும். இன்றும் நேர்மையானவர்களும் நல்லவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதற்கு உதாரணமாக சுவாமியின் மூலவரிடம் இந்த அமுத ஊற்று நீர் சுரக்கின்றது. இந்த நீரே தீர்த்தமாக அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த பிரசாத தீர்த்தத்திற்கு அற்புத சக்திகள் உண்டு. நோய் நீக்குவது முதல், சுகப் பிரசவம் வரை அற்புத அருளைத் தருகிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து சுவாமிக்கு நிவேதனம் செய்து சிறுவர், சிறுமியர்க்கு தானமளித்த பின்னர் பெறும் இத்தீர்த்தப் பிரசாதம் பல நலன்களைத் தரும். என்று இந்த ஊறல் நிற்கிறதோ அன்று தெரிந்து கொள்ளலாம் நாட்டில் பல துன்பங்கள் விளையும் என்று.
பிரான்மலை ஆலயத்தில் உள்ள தலமரத்தில் நிறைய சித்தர்களும், யோகியரும் ஜீவ ஐக்கியம் அடைந்துள்ளதால் அம்மரத்திற்குப் பெயர் இடவில்லை. மேலும் சித்தர்கள் ஐக்கியமான மரங்களைப் பெயரிட்டு அழைத்தலும் கூடாது. அம்மரங்களையெல்லாம் மூல லிங்கங்களாக நினைத்து பூஜித்தல் வேண்டும் என்பதற்காக பெயரை மறைத்து விட்டார்கள். பொதுவாக துர்வாசர் கற்பக லோகங்களி லிருந்து மாதவி விருட்சம், கோகர்ண பூஷண விருட்சம், தலைமலை விருட்சம் போன்ற சித்தர் ஐக்கிய மரங்களை பூமிக்குக் கொண்டு வந்தார். இத்தகைய மரங்களை எல்லாம் பெயரில்லா விருட்சம் என்றே அழைப்பர். ஆகவே பெயரில்லா மரம் உள்ள கோயில்களில் தலவிருட்சம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருக்கும். இவையெல்லாம் அருள் சுரக்கும் விருட்சம் என்றே மக்கள் அறிந்து நலமுடன் தொழுது பலன் பெறுவீர்.
ஆண்களாயினும் பெண்களாயினும் உரிய காலத்தில் மண வாழ்க்கை அமைவதே சிறப்பாகும். பல்வேறு பூர்வ ஜன்ம காரணங்களினால் திருமணம் நிறைவேறாமல் இருந்தால் அதற்குப் பல பரிகாரங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் உப்பிலியப்பன் கோயிலில் அன்னதானம், மாங்கல்ய தானம் செய்திடில் பொதுவாக நீண்ட நாள் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும். திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்ததல்லவா? கோயிலைச் சுற்றி உள்ள சார்ங்க, சூர்ய, இந்திர, பிரம்ம, தக்ஷிண கங்கை, தக்ஷிண கோதாவரி, தக்ஷிண யமுனை என்ற ஏழு தீர்த்தங்களில் திருவோணத்தில் நீராடி வஸ்திர தானம் செய்திடில் பெண் குழந்தைகளை உடையவர் தங்கள் குழந்தைகளின் திருமணம் நல்லபடியாய் முடியும்.
108 சிவத் தலங்களும், 108 வைணவத் தலங்களும் உள்ள காஞ்சீபுரத்தில் தங்கினால் கண்டிப்பாய் இத்தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
ஞாயிறு அன்று கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இஷ்ட சித்தி தீர்த்தத்தில் நீராடினால் கடன் அற்றவராய் வாழலாம்.
திங்கள் அன்று காலை ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினால் மனைவியின் நலம் பெறலாம்.
திங்கள் அன்று மாலை புண்ணிய கோடீஸ்வர ஆலயத்தில் சக்கர தீர்த்தத்தில் நீராடினால் செல்வம் சேரும், குபேர அருள் உண்டு.
செவ்வாய் அன்று கங்கை கொண்டான் மண்டபம் மங்கள தீர்த்தத்தில் நீராடினால் மாங்கல்ய பலம் உண்டு.
புதன் அன்று திருக்காளிமேடு இந்திர தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைகள் நன்றாய்ப் படிப்பர்.
வியாழன் அன்று காயாரோஹணேஸ்வரர் ஆலயத்தில் ரோகஹரண தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் விலகும்.
வெள்ளி அன்று காமாட்சி கோயிலில் உலகாணி தீர்த்தத்தில் நீராடினால் வெளியூர் படிப்பு, உத்தியோகம் நலம் தரும்.
சனிக் கிழமை மஞ்சள் நீர் நதிக்கு வடக்கில் சித்த தீர்த்தத்தில் நீராடினால் காரிய சாதனையும், இராஜயோகமும் கிட்டும்.
எத்தகைய கண் நோய் வந்தாலும், கணிப் பொறித் துறையில் அதிக நேரம் செலவழித்து கண்கள் பாதிப்பு அடைந்திருந்தாலும் மேலும் பாதிப்பு வராமல் இருக்கவும், கண் வைத்தியர்கள், கண்ணாடி அணிந்தவர்கள் யாவரும் புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு பத்து இளநீருக்குக் குறையாமல் இன்நீர் அபிஷேகம் செய்து தினமும் மனதார வேண்ட வேண்டும். அம்மனின் அருள் பெற்றால் கண் சம்மந்தமான கோளாறே வராது. நேத்திர ஜன ஆகர்ஷண யந்திர மந்திர சக்தியோடு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் கையால் உருவாகிய தேவியே இந்த மாரியம்மன்.
திருமங்கல சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பக்தர்கள் கேட்கும் வரம் தர அபய கரத்துடன் விளங்குகிறார். ஆனால் நீங்கள் கேட்பது உங்களுக்கு நன்மையைத் தருமா என்று சற்றே யோசியுங்கள். உதாரணமாக பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். பணத்தால் எதையும் வெல்லலாம் என்று நினைத்து தகுதிக்கு மீறிய ஆசையை வளர்த்துக் கொண்டு அதனால் இறைவனிடம் இரவு பகலாக மன்றாடிப் பிரார்த்திக்கும் போது இறைவனும் அவ்வேண்டுதலுக்குச் செவி சாய்க்கின்றான். ஆனால் திருமணத்திற்குப் பின் பணக்கார மாமனார் வீட்டில் தான் ஒரு வேலைக்காரனாக நடத்தப்படும் சூழ்நிலையை அனுபவிக்கும்போது மனம் மிகவும் வேதனையடைந்து தன் கையே தன் கண்ணைக் குத்தியதை நினைத்து வருந்துவோர்கள் ஏராளம். ஆகவே, “குருவே! எனக்கு எது நன்மையைத் தருமோ அதனைத் தந்தருள வேண்டும்,” என்று வேண்டுங்கள். திருமங்கல தட்சிணாமூர்த்தி தருவார், தருவார், தந்து கொண்டே இருப்பார், நீங்கள் அவரிடத்தில் சரணாகதி அடைந்தால்! திருமங்கலம் திருச்சி லால்குடியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருமங்கலத்து சனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரது காக வாகனம் வலது புறம் பார்த்து நிற்பது மிக விசேஷம். கன ரக இரும்பு, வாகன தொழிற் கூடம், உருக்காலை, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல், வாகன உதிரிப்பொருட்கள் விற்போர், உற்பத்தி செய்வோர்களுக் கெல்லாம் வருவாய் தரும் குபேர அருட்சக்தியைப் பெற்றுத் தருவார் இங்கு அருள்புரியும் சனீஸ்வர மூர்த்தி. திருமங்கல ஆலயத்தைச் சீரமைத்து வண்ணப் பூச்சுகள் செய்து இயன்ற திருப்பணிகளைச் செய்வோருக்கு சனீஸ்வர மூர்த்தியின் அருள் கடாட்சம் என்றும் உண்டு.
திருமங்கல சிவாலயத் தலமரம் பலா மரம். உதங்க முனிவர் தவம் செய்து அமிர்தம் பெற்ற இடமாதலால் இங்கு தல விருட்ச பூஜை ஆயுள் விருத்தியையும், ஆயுஷ் ஹோமம் செய்த பலனையும் தரும். மக நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமைகளிலும் இத்திருக்கோயிலை 64 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்வது பெருத்த வசதியைத் தேடித் தரும்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். ஆனால் சில சமயங்களில் தெய்வமாக மதிக்கப்பட வேண்டிய பெறோர்களே தங்கள் பிள்ளைகள், பெண்கள் மீது கோபம் கொண்டு சொத்து ஏதும் கொடுக்காது வீட்டை விட்டுத் துரத்தி விடுவதுண்டு. இதனால் ஏற்படும் தோஷம் மிகக் கொடியது. இந்த தோஷம் தீர பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் உதவி செய்து அவர்கள் வறுமையை நீக்கிப் பிறகு திருநல்லூர் கோயில் குளத்தில் நீராடுவது நலம் தரும். இக்குளத்தில் நீராடுவதால் ஏழு கடல்களில் குளித்த புண்ணியம் சேரும். குழந்தைகளுக்குத் தீங்கிழைத்த தாய் தன் தவறையுணர்ந்து பல நன்மைகளைக் குழந்தைகளுக்குச் செய்து நீராடினால் பரிகாரம் பெறலாம்.
மனிதன் இறந்த பின் அவன் இப்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப அவன் செல்லும் மரணப் பாதை அமைகிறது. பூத உடலை விட்டு விட்ட மனிதனால் தனது நன்மைக்காக எந்த பூஜையையோ, தான, தர்மங்களையோ, கோயில் வழிபாடுகளையோ நிறைவேற்ற முடியாது. இந்நிலையில் அவனது இரத்தத்திலிருந்து உதித்த மகன் செய்யும் வழிபாடுகளே அவனுக்கு நற்கதியைத் தரும். எனவே இறந்தபின் பத்து தினங்களுக்கு நீர்மோர், பானகம், குடை, செருப்பு போன்றவற்றை தானமாக அளிக்கும் நற்பழக்கம் இன்றும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. மேலும் இறந்த ஒரு வருடம் முடியும்போது அதை தலை திவச நாளாகக் கொண்டாடி இறந்தவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களையும் ஆடை அணிகலன் களையும் தானமாக இறந்தவரின் ஆன்மா அமைதியடைந்து தன் சந்ததியினருக்கு எல்லா செல்வங்களையும், சுகங்களையும் அளிக்கிறது. தந்தையை இழந்தவர்கள் முதல் திவசத்தை திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் என்னும் செஞ்சடை நாதர் திருக்கோயிலில் செய்திடவேண்டும். இதனால் தந்தைக்கு நல்லறிவு பெற்று ஒளியுலகில் புகுந்து அடுத்த பிறவியில் தனது சந்ததியினருக்கு நல்லன பல செய்வார் என்பது பெரியோர் கூற்று ஆகும்.
வெளிநாடு செல்ல வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை விரித்தாடுகிறது தற்காலத்தில். வெளிநாடு செல்வதற்கு உங்கள் தலையில் எழுதியிருந்தால்தான் நீங்கள் போக முடியும். அப்படி எழுதவில்லை என்றால் நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் போக முடியாது. வெளிநாடு சென்று வாழ வேண்டும் என்ற ஆசை அளவு கடந்து இருந்தால் அதற்கு ஒரு வழியுண்டு. உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள நடராஜர் சன்னதியில் ஏகாதச ருத்திர லிங்கங்கள் உள்ளன. பாணம் வெள்ளையாகவும், ஆவுடை கருப்பாகவும் இருக்கும் இவர்களுக்கு வெண் கண்ட பாண ருத்திர லிங்கங்கள் என்று பெயர். இந்த ஏகாதச ருத்திர லிங்கங்களை முறைப்படி பஞ்சாட்சர ஜபம் செய்து சதுர்த்தசியில் விரதம் இருந்து தொடர்ந்து வேண்டிடில் நல்ல மாற்றம் எதிர்பார்க்கலாம். முடிந்த மட்டும் தாய் மண்ணில் இருப்பது நலம் பயக்கும்.
தற்காலத்தில் ஒருவருக்கு மற்றொருவர் உதவி செய்தல் என்பது மிக அரிதாக உள்ளது. காரண காரியம் இல்லாமல் பிறர் உதவுவது கிடையாது. மேலும் உதவி செய்யப் போனால் உபத்ரவமும் வந்து விடுகிறது. ஆகவே நல்லோர்களின் வழியாக நாம் உதவியைப் பெறவேண்டும் என்றாலும், கைமாறு கருதா உதவியாளர்களைப் பெற வேண்டும் என்றால் வாமனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும் உதவிநாயகராகிய சிவனைத்தான் சதாசர்வ காலமும் அழைக்க வேண்டும். சுவாமியின் பெயர் உதவி நாயகர். அம்பாளின் பெயர் உதவி நாயகி. தற்சமயம் அம்புஜாட்சி, தாமரைக் கண்ணி என்று அழைக்கப்படுகிறாள். கடலூருக்கு அருகில் கெடிலம் ஆற்றின் தென்கரையில் இவர்கள் இருக்கும் ஆலயம் அமைந்துள்ளது. திரையில் பீமருத்திரர் பூஜையை ஏற்றுப் பிறகு திரை விலகினால் வாமன மூர்த்தி பூஜித்த சிவலிங்க நாயகனாகிய ஸ்ரீஉதவி நாயகரை தரிசிக்கலாம். மேலும் தன் பதவி நிலைப்பதற்காக பலருடைய பதவிகளை இழக்கச் செய்தவர்களும், பதவி ஆசையால் பஞ்சமா பாதகங்கள் செய்தவருக்கும் தக்க தண்டனை வழங்கும் தெய்வம். மேலும் தவறு செய்யாத அப்பாவிகள் பதவி இழந்து தவிக்கும்போது ஸ்ரீஉதவி நாயகரைச் சரணடைந்தால் நல்லதொருவழி பிறக்கும்.
வைத்தியத் துறையில் பல உப பிரிவுகள் உள்ளன. அதில் எலும்பு சம்மந்தமான நோய்களுக்குத் தனி வைத்தியம் உண்டு. இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் (Bone specialists, Orthopedists) தங்கள் துறையில் வரும் நோயாளிகளின் நன்மதிப்பைப் பெறவும், அவர்கள் குணமடையவும் அரும்பாடுபட வேண்டும். அவர்கள் தங்கள் துறையில் தனி சிறப்பைப் பெறவும், மக்கள் மத்தியில் நல்லாதரவு பெறவும் ஆன்மீகத்தில் ஒரு வழியுண்டு. அதுதான் பிரளய கால ருத்திர வழிபாடாகும். இவருடைய உருவமோ நான்கு கரங்கள் கொண்டவர். ஒரு கரத்தால் மானுக்குப் புல் அளிக்கின்றார். இரண்டு கரங்கள் துடியை முழக்குகின்றன. நீண்ட கத்தியைப் போன்ற எலும்புத் துண்டை தோளில் வைத்து ஒரு கரத்தால் தாங்கியுள்ளார். இத்தகைய வடிவோடு கூடிய ருத்திரரை சதுர்த்தசி திதியில் விரதம் இருந்து ருத்திர மந்திரம் பதினோரு முறைக்குக் குறையாமல் ஜபித்து, முந்திரிப் பருப்பு கலந்த பால் பாயசம் தானமாக அளித்து வந்திடில் நல்ல பேரும் புகழும் அடையலாம். ஸ்ரீருத்திர மந்திரம் அறியாதோர் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த “வரிய மறையார் பிறையார் ...” என்னும் தேவாரப் பதிகத்தை 11 முறைக்குக் குறையாமல் ஓதி வழிபடவும். இந்த ருத்திரர் இருக்கும் இடம் - கும்பகோணம் நாகநாத சுவாமி ஆலயத்தில் முதல் பிரகாரத்தில் தென் பகுதியில் வடக்கு நோக்கியவாறு சன்னிதி கொண்டுள்ளார்.
அக்கினியால் வரும் ஆபத்தைத் தடுக்கவும், அக்கினியால் நற்காரியங்கள் செய்யவும், அக்கினியால் செய்யப்படும் ஹோமங்கள், யாகங்கள் சிறப்புறவும், உருக்காலைகள், மின்சார உற்பத்தியாளர்கள், அது சம்மந்தமான உதிரி பாகங்கள், தங்க ஆபரணங்கள், இரும்பு ஆலைகள், வண்டி வாகன தொழிற் கூடங்கள் விருத்திக்கு வரவும், மேலும் தீயினால் துன்பங்கள் வராமலிருப்பதற்கும் துணைபுரி கின்றவர் திருஅண்ணாமலை அகோர ருத்திர மூர்த்தியே. இவர் அமர்ந்துள்ள இடம் திருஅண்ணாமலையார் கிளி கோபுரத்தின் உட்புறம் தென்கிழக்கில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் மேற்கு நோக்கியவாறு சன்னதி கொண்டுள்ளார். (தற்சமயம் பைரவர் கோயில் என்று அழைக்கின்றார்கள்) இவர் அகோர ருத்திர மூர்த்தியே ஆவார். அக்கினி மூலையில் அமைக்கப்பட்டு இருப்பதால் மிக மிகச் சக்தி வாய்ந்தவர். உணவு உற்பத்தியாளர்கள், ஹோட்டல் அதிபர்கள், அன்னதானம் செய்பவர்களுக்கு மிகவும் உதவுபவர். 32 பசு நெய் தீபங்கள் இட்டு இவரை வணங்கி விரதம் இருப்போர் எதிர்காலத்தில் பல உணவு விடுதிகளுக்கு உரிமையாளராய் மாறுவர். நெருப்பில் வேக வைத்த சப்பாத்தி, கெட்டித் தயிர் தானம் சிறப்புடையது.
வாகன விபத்துகளைத் தடுக்கவும், ரயில் விபத்துகளைத் தடுக்கவும், விமான கடத்தல்களிலிருந்து தப்பிக்கவும் எதிர்பாராத நேரத்தில் தலைக்கு மேல் எந்தப் பொருளும் விழுந்து தாக்காதிருக்கவும், பிரயாணத்தில் வழிப்பறி நடக்காதிருக்கவும், கையில் இருக்கும் பொருளை நல்வழியில் செலவு செய்யவும் உதவுகின்ற அஷ்ட ருத்திரர் இருக்கும்இடம் திருக்கடையூர் ஆகும். கோயிலின் உட்பிரகாரமான திருமாளிகைப் பத்தி வரிசையில் வடக்கில் இரண்டும், கிழக்கில் இரண்டும், தெற்கில் மூன்றுமாக ஏழு ருத்திரர்களும், கால சம்ஹார உலா திருமேனியும் சேர்த்து எட்டு ருத்திர வடிவங்கள் உள்ளன. (தற்சமயம் இவர்களை அஷ்ட வசுக்கள் என்று அழைக்கின்றனர். ஆனால் இவர்கள் வடிவம் ருத்திர வடிவங்களைத்தான் தாங்கியுள்ளன என்பதை மக்கள் அறியவும்). எட்டு நாட்கள் பால், பழம் உண்டு விரதம் இருந்து இங்கு தங்கி தினமும் தரிசித்து வணங்கிடில் மேற்கண்ட பிரச்னைகள் தீரும்.
அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து வியாபாரம் போன்ற கூட்டுத் தொழில்களில் ஈடுபட்டு இருப்பர். அப்பொழுது குடும்ப பிரச்னை காரணமாகவோ, வியாபாரத்திற்காகவோ கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது அண்ணன், தம்பி இருவரும் கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கி இருக்கலாம். இவ்வாறு இருக்கும்போது அண்ணனோ தம்பியோ இறந்துவிட்டால் யாராவது ஒருவர் தலைமேல் அந்தக் கடன் விழுந்து விடும். அப்பொழுது அண்ணனோ தம்பியோ கடன் தீர்க்க தெய்வீகத்தில் ஒரு வழி காட்டியுள்ளார்கள் பெரியோர்கள். அவர்கள் கடனைத் திருப்பித் தர நல்ல வழி காட்டியும், உதவியும் பெற அவர்கள் செய்ய வேண்டியது இதுதான். திருவிடைமருதூர் சென்று தினமும் உருத்திர தீர்த்தத்தில் நீராடி, 11 ருத்திரர் பெயரையும் விடாமல் ஜபித்து ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை தரிசித்து, ஒரு வேளை மட்டும் உண்டு 48 நாட்கள் விரதம் இருந்திடில் கடன் தீர நல்ல வழிகாட்டி கிடைப்பார். இந்த உருத்திர தீர்த்தம் திருவிடைமருதூர் ஆலயத்திற்குத் தென்புறம் உள்ளது.
பதவி உயர்வுக்காக பலர் பல வழிகளைக் கையாளுகின்றனர். உயர் அதிகாரிகளின் வீட்டு வேலை, தோட்ட வேலை முதல் ஆபாசமான காரியங்கள் வரை அவர்கள் காலடியிலேயே கிடந்து செய்கின்றனர். இவ்வாறு பெறுகின்ற பதவி, பணம் எல்லாம் மிகப் பெரிய கர்ம மூட்டைகளாக மாறி எதிர்காலத்தில் துன்புறுத்தும் என்பது உண்மையே. இவ்வாறு தன்மானம் இழந்து பதவிக்காகவும், பொருளுக்காகவும் அலைகின்ற அன்பர்களுக்கு ஆன்மீகத்தில் மிகச் சிறந்த வழியுண்டு. பதவி வளமைக்காக பிறர் காலில் விழுவதைவிட எல்லாம் வல்ல இறைவன் காலைப் பிடித்துக் கொண்டால் அனைத்து நன்மைகளும் தானே வந்து விடும். இதற்கு அருளும் தெய்வம் இருக்கும் இடம்தான் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ள செம்பொன்னார் கோயில். பன்னிரண்டு சூரியர்கள் வழிபட்டு அழியாத பதவியையும், அருளையும் பெற்ற இடம். இங்கு ஒரு தீர்த்தம் உள்ளது. அதற்கு சூரிய புஷ்கரணி என்று பெயர். சித்திரை மாதத்தில் சூரிய கதிர்கள் இறைவன் மீது விழும் நாட்களில் இத்தீர்த்தத்தில் சித்தர்கள் “வட்டப் பூசுறை” என்ற மூலிகையைக் கலக்கின்றனர். ஆகவே இந்த நாட்களில் இத்தீர்த்தத்தில் தினமும் நீராடி கோதுமை அல்வா, ஆரஞ்சு வண்ண ஆடைகள் தானம் செய்து ஈசனை வேண்டினால் சொர்ணபுரீஸ்வரர் பொன்னும் பொருளும் சேர்த்து அளிப்பார்.
பல சிறிய தொழிற்சாலைகள் முதல் பெரிய தொழிற் சாலைகள் வரை தற்காலத்தில் நிறைய இடங்களில் மூடிக் கிடக்கின்றன. இதற்குக் காரணம் பல உண்டு. கடன் கொடுக்கும் வங்கிகள் கடன் கொடுக்காததாலும், தனியார் நிதி நிறுவனங்களில் உள்ள உயர்அதிகாரிகளின் அவநம்பிக்கையாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இன்மையாலும், இன்னும் பல தனி மனிதர்களின் சுய கௌரவத்தினாலும் தொழிற்சாலைகள் நிறைய மூடிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் திறந்து சிறப்பாக செயல்பட ஆன்மீகத்தில் பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான வழிதான் பாரிஜாத வனம் என்றழைக்கப் பெறும் திருவாடானையில் குடியிருக்கும் ஸ்ரீஆதிரத்னேஸ்வரர் சினேகவல்லி அம்பிகையிடம் நேர்த்தி வைத்து ஒரு வேளை உண்டு, தினமும் தான தருமம் செய்து ஒரு மண்டலம் நோன்பிருந்தால் திறக்காத தொழிற்சாலைகளும், மூடிக் கிடந்த வியாபாரங்களும் திறந்து தொழிலாளர்கள், முதலாளிகள் மகிழ்வு அடைவர். திருவாடானை இருக்கும் இடம் - சிவகெங்கையில்இருந்து 33 மைல் தொலைவிலும் காளையார் கோயிலிலிருந்து 21 மைல் தொலைவிலும் உள்ளது.
வாழ்க்கையில் பலருக்குப் பலவிதமான ஆசைகள் உண்டு. “கையளவேதான் இதயம் வைத்தான் ஆனால் கடல்போல் அதிலே ஆசை வைத்தான்” என்றார்கள் பெரியோர்கள். அவ்வாறு மனிதனின் ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்றுவதற்கு பலவழிகளைக் கூறியுள்ளார்கள் சித்தர்கள். ஆனால் எந்தெந்த ஆசை கூடாது என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள். எதிலும் பேராசை கூடாது, துராசை கூடாது, நப்பாசை கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள். எது பேராசை, எது துராசை, எது நப்பாசை என்று தெரியாமல் மக்கள் தினமும் தடுமாறுகிறார்கள். இந்த ஆசைகளை சித்தர்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள இயலும். அப்படியானால் சித்தர்களை நாம் எவ்வாறு தரிசனம் செய்து அவர்கள் கூறும் அறவழியைத் தெரிந்து கொள்வது? இன்றைய தினம் எந்த ஒரு சித்தரும் தான் ஒரு சித்தர் என்று பறைசாற்றிக் கொள்வது கிடையாது. உருவத்தை வைத்தோ, ஆடை அணிகலன்களை வைத்தோ நாம் சித்தர்களை அடையாளம் காண முடியாது. எனவே இத்தகைய மக்களுக்கு உதவுவதற்காக ஒரு அற்புத வழியைக் காட்டினார்கள் ஆன்மீகத்தில். அது என்ன? சித்தர்களைக் காண ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் 108 தாமரை புஷ்பங்களைக் கொண்டு சென்று ஸ்ரீபுஷ்பரதீஸ்வரர் என்ற சிவலிங்கத்திற்கு விரதம் இருந்து அர்ச்சித்து சர்க்கரைப் பொங்கல் அல்லது நிலக்கடலை கலந்த எலுமிச்சை சாதம் தானம் செய்து வருதல் வேண்டும். இவ்வாறு 12 ஆண்டுகளில் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் வருகிறதோ அத்தனை ஞாயிற்றுக் கிழமைகளும் தாமரையால் அர்ச்சித்து உண்ணா நோன்பிருந்து தான தர்மம் செய்து வந்தால் சித்தர்களின் தரிசனம் பெற்று அனைத்துக் காரியங்களையும் சாதிக்கலாம். இந்தக் கோயில் உள்ள இடம் ஞாயிறு என்ற இடம். இவ்வூருக்குச் செல்ல சென்னை தங்க சாலையில் இருந்து நகரப் பேருந்துகள் செல்லுகின்றன. அல்லது சென்னையில் இருந்து செங்குன்றம் (Red Hills) சென்று அங்கிருந்து வடக்கே செல்லும் கிளைப் பாதையில் பாலவாயில், அருமந்தை முதலிய ஊர் வழியாகச் சென்று இவ்வூரை அடையலாம்.
வாழ்க்கையில பலர் பலவிதமான முன் வினைக் கர்மங்களால் கடினமான நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் ஒரே விதமான கர்மங்களைச் செய்தவர்களை ஒன்றாகக் கூட்டி தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று ஒரே குடும்பமாகவும் பல நேரங்களில் இறைவன் படைத்து விடுகிறான். அவ்வாறு படைத்து விடுவதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கு வந்த நோய் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வரும்படிச் செய்து விடுகின்றான். இதற்குதான் பரம்பரை நோய் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். தாய், தந்தைக்குச் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் வந்து விடுகிறது. அதைப் போலத்தான் மற்ற நோய்களும் தானே தேடி உற்ற நோய்களாகும். இவ்வாறு பரம்பரை நோய்களால் அவதியுறுவோர் தேவ, தெய்வ, பெரியோர்களின் சாபத்தால் ஏற்பட்ட பரம்பரை நோய்கள் தீர பல வழிகள் இருந்தாலும், ஆன்மீகத்தில் ஒரு வழி காட்டப்பட்டுள்ளது. அதுதான் சூரியன் வழிபட்ட மங்கலக்குடி என்ற தலம். சூரியனார் கோயில் அருகில் உள்ள தலம் இது. இத்தலத்து சிவன் ஸ்ரீபிராணவரதேஸ்வரர் ஆவார். அம்பிகை ஸ்ரீமங்கல நாயகியும் மிகவும் சக்தியும் கனிவும் கொண்டவர்கள். இங்கு கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் இங்குள்ள மங்கல தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீபிராணவரதேஸ்வரருக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர்அன்னம் நிவேதித்து தொடர்ந்து வழிபட்டால் தொல்லை தரும் பரம்பரை நோய்களிலிருந்து விடுபட முடியும் ஈசனருளால்.
பானு சஷ்டி, பானு சப்தமி - இந்த இரண்டு நாட்களும் மிக விசேஷமான நாட்களாகும். ஞாயிற்றுக் கிழமையும் சஷ்டி திதியும் கூடி வந்திடில் பானு சஷ்டி என்று அழைப்பர். பிரதமை திதியில் தொடங்கி ஆறு நாட்கள் வில்வம் ஊறிய நீர் மட்டும் அருந்தி விரதம் இருந்து ஞாயிறும் சஷ்டியும் சேருகின்ற பானு சஷ்டியில் சர்க்கரைப் பொங்கல், கோதுமையால் ஆன சப்பாத்தி, பூரி, ஆரஞ்சு நிற ஆடைகள், கண்ணாடி போன்றவற்றை தான தருமம் செய்பவர்கள் கண் சம்மந்தமான நோயால் பீடிக்கப்பட மாட்டார்கள். கண் வைத்தியர்கள் இந்த விரதத்தைக் கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும். இதைப் போலவே ஞாயிற்றுக் கிழமையோடு கூடிய சப்தமி திதி வந்திடில் பானு சப்தமி என்று அழைப்பர். மேற்கூறியது போல பிரதமை திதியில் தொடங்கி ஏழு நாட்கள் விரதம் இருந்து ஏழாவது நாள் ஞாயிறும் சப்தமியும் கூடும் நாளில் பானு சப்தமியைக் கொண்டாடுவது மிகுந்த அருளைத் தரும். கணிப் பொறியில் வேலை செய்பவர்கள், வெல்டிங் தொழிலில் உள்ளவர்கள், உருக்காலை, கொல்லன் பட்டரை, தூர தொலைநோக்கில் வேலை செய்பவர்கள் (observatory), வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டோர், optical centre-ல் வேலை செய்பவர்கள், நவரத்தினக் கற்களுக்குப் பட்டை தீட்டுபவர், பரீட்சை செய்பவர், ஹூடிணுனுட்ச்ண, தீயணைப்புப் படையினர், பாய்லர்களில் வேலை செய்வோர், லேசர் கருவிகளில் வேலை செய்வோர் ஆகியவர்கள் கண்டிப்பாக இந்த பானு சஷ்டி, பானு சப்தமி விரதம் இருந்து நற்பலனைப் பெற வெண்டுமெனில் பரிதிநியமம் என்ற திருத்தலத்தில் சூரிய தீர்த்தத்தில் நீராடி இந்த 6 அல்லது 7 நாட்களும் அங்கிருந்து இவ்விரதத்தை முடித்து தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்திடில் பெரிய மாற்றங்களை வாழ்நாளில் காணலாம். இந்த பரிதி நியமம் இருக்கும் இடம் தஞ்சாவூர்-பட்டுக் கோட்டை சாலையில் தஞ்சையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
வாழ்க்கையில் சிலருக்கு நிறைய குழந்தைகள் உண்டு. சிலருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஆனால் மிகச் சிலருக்கு ஒரு குழந்தைக்கு மேல் கிடையாது. இவையாவும் இறைவனின் விருப்பம். நிறைய குழந்தைகள் உடையவர்கள் அக்குழந்தைகளுக்குத் திருமணம் செய்து தனியாகப் போவதும் உண்டு, பிள்ளைகளோடு இருப்பதும் உண்டு. சிலர் தங்கள் குழந்தைகளைத் திருமணம் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டுத் தானும் மனைவியும் இருப்பதும் உண்டு. வயதான காலத்தில் சிலருக்கு இருக்கும் ஒரே குழந்தைக்கு திருமணம் செய்வித்துத் தாங்கள் மட்டும் தனியாய் இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் நிறைய காரணங்கள் உண்டு. இவ்வாறு தங்கள் குழந்தைகள் திருமணம் செய்த பின்பும் அவர்களை விட்டுப் பிரியாமல் இறக்கும் வரை சேர்ந்திருக்க பெற்றோர்கள் மிகவும் விருப்பப்படுவதுண்டு. இந்த விருப்பம் நிறைவேறுவதற்கும் ஆன்மீகத்தில் வழியுண்டு. அதுதான் சோமாஸ்கந்த ஆசன அமர்வு வழிபாடாகும். சிவன், முருகன் நடுவே இருந்து அம்பிகையோடு ஒரு நீண்ட செவ்வக வடிவமான ஆசனத்தில் அமர்ந்து உலா வரும்போதும், ஆலயத்தில் இருக்கும்போதும் வழிபட்டு பால் கொழுக்கட்டை தானம்செய்து வந்திடில் தம் குழந்தைகளோடு கடைசி வரை சேர்ந்து இருக்கும் ஆசியைப் பெறலாம். இந்த ஆசனத்திற்கு ஏகாசன மூர்த்தம் என்று பெயர். ஆனால் பல கோயில்களில் அலங்காரத்தின் பொருட்டு தனித்தனியாக மூன்று ஆசனம் போட்டு அலங்கரிப்பார்கள். இவ்வாறு சோமாஸ்கந்தர் அமரும் ஆசனத்திற்கு “பின்னாசன மூர்த்தம்” என்று பெயர். இந்த பின்னாசன மூர்த்தத்தில் அமர்ந்திருந்தால் அந்த வழிபாடு தாய், தந்தையை மக்களை விட்டுப் பிரிக்க சந்தர்ப்பம் வரும். ஆகவே ஆன்மீக அன்பர்கள் இந்த அமர்வு ஆசனத்தை நன்றாக கவனித்து வழிபட வேண்டும். ஆகவே பக்தி நிறைந்த அன்பர்கள் பின்னாசன மூர்த்தத்தில் அமரும் சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுக்குத் தெரிந்த உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களைத் தங்களுடைய மகனுடன் அழைத்து தாய், தந்தை நடுவில் மகனை அமர்த்தி அவர்கள் பாதங்களில் குங்குமம், அட்சதை இட்டு வணங்கி அவர்களுக்கு உணவு, ஆடை தானம் செய்து ஆசியைப் பெற வேண்டும். 60, 80 வயதான தாய், தந்தை நடுவே மகன் அமர்ந்து சேவித்தல் நலம் தரும்.
பலருடைய மன நிலைகளில் பல மாற்றம் காணலாம். சிலர் தங்களுக்குத் திருமணம் ஆனவுடன் நன்றாக வருமானம் பெருகி, வியாபாரம் விருத்தி அடைந்து உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் குழந்தை பிறந்தவுடன், வருமானம் குறைந்து வியாபாரம் நஷ்ட கதியில் ஓடுவதாக நினைத்து வருந்துகின்றனர். இதனால் தேவையில்லாமல் குழந்தைகளைச் சபித்து பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இவை அனைத்திற்கும் ஆன்மீகத்தில் பல காரணங்களைப் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இத்துன்பத்திலிருந்து மீள சித்தர்கள் ஒரு அற்புதமான வழியைக் கூறுகின்றனர். திருமணமாகி குழந்தை பிறந்ததும் ஏற்படும் கஷ்ட நஷ்டம் தீர திருக்கழுக்குன்றத்து ஸ்ரீபக்தவசலேஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்துள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசித்து, திங்களும் சஷ்டியும் சேரும் நாளில் விரதம் இருந்து தான தருமம் செய்து இம்மூர்த்தியைத் தொடர்ந்து வழிபட்டு வந்திடில் குழந்தைகள் பிறப்பால் தொழிலிலோ, வியாபாரத்திலோ எந்தக் குறையும் வராது.
வினாயகருக்கு மாங்கனி கிடைத்ததால் முருகன் கோபித்து ஆறு படை வீடுகளில் சுவாமி அமர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. வினாயகருக்குக் கிடைத்த மாங்கனியால் விண்ணில் நஞ்சை நிலங்கள் மட்டும் நிறைந்தன. மண்ணில் நஞ்சை, புஞ்சை, தரிசு, பாலைவனம், தோப்பு, துறவுகள் நிறைந்தன. அந்தந்த இடத்து விளைச்சலால் மக்கள் வாழ்ந்தனர். ஆனால் முருகனாகிய சோமாஸ்கந்தர் தன் கையில் மாங்கனி பெற்றதால் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்கள் எல்லாம் இப்புவியில் நிகழ்ந்தன. அவை யாவையும் சித்தர்கள் ரகசியமாய் வைத்தனர். அவற்றைக் குரு மூலமாய்த் தெரிந்து கொள்வதே நல்லது. ஆனால் மக்களுக்குப் பயன்படும் ஒரு முக்கிய செய்தியை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்கள். அது என்ன? கும்பாபிஷேகம் நடக்காமல் பல ஆண்டுகளாய்த் திருப்பணி நின்றிருக்கும் கோயில்களில் திருப்பணி நடைபெற வேண்டும் என்றால் மாங்கனி ஏந்திய சோமாஸ்கந்தரை நோக்கி விரதம் இருந்து வழிபட்டால் நல்ல மாற்றத்தை அனைவரும் காண்பர். கோயில் கும்பாபிஷேகம் நடந்தால் மக்களும் நாடும் நலம் பெறும் என்பது சித்தர்கள் வாக்காகும். மாங்கனி ஏந்தியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியுள்ள இடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனையூர் சிவன் கோயிலாகும். பேரளம்-திருவாரூர் சாலையில் சன்னாநல்லூர் அருகே அமைந்துள்ளது திருப்பனையூர்.
கலியுகத்தில் நிறைய வியாபாரப் பரிமாற்றங்கள், தொழில் சம்பளங்கள், அன்றாட செலவுகள் இவை எல்லாம் நம் நாட்டில் பணம் கொடுத்து வாங்கலில்தான் அதிகமாக நடைபெறுகிறது. செக், டிராப்ட், டி.டி. இவையாவும் அதிகமாகப் பழக்கத்தில் இல்லை. இதனால் மக்களும் பல கஷ்டங்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே பணப் புழக்கங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஆபத்தும், இழப்பும் துன்பமும் நிறையவே மக்களைத் தாக்குகின்றன. ஆகவே கையில் பணம் எடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யப் போகிறவர்கள் தங்கள் பணத்தை பத்திரமாகக் காத்து, நல்ல நிலையில் வைத்து உதவிட எந்த ஆட்களையும் நம்ப வேண்டாம். “உருத்திர கங்கை ஆபத்சகாயா!” என்று 108 முறைக்குக் குறையாமல் ஓதியே சென்று தொழிலைச் செய்திடில் உருத்திர கங்கை சோமாஸ்கந்தர் உடனிருந்து என்றும் காப்பார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இந்த இடம் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பூந்தோட்டத்திற்குக் கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
துன்பங்களில் பல வகையுண்டு. சிலர் நேர்மையாகவும், உண்மையாகவும், உழைப்பவர்களைத் தொழிலில் அமர்த்தி அவர்களுக்கு எவ்வித ஊதிய உயர்வோ, பதவி வசதிகள் உயர்வோ தராமல் வைத்திருப்பர். இத்தகையோர் வேறு வேலைகளைத் தேடிப் போவதற்கும், இடம் மாறுவதற்கும் மிகவும் தயங்குவர். முதலாளிகளும் இவர்களை அடிமைகள்போல் வைத்திருப்பர். இத்தகைய சூழ்நிலையில் தவிப்பவர்கள் தங்கள் குடும்பம் தழைக்கவும், வசதிகள் நிறைவாகப் பெறவும் பல வழிகள் உண்டு. அதில் மிக முக்கியமானது யாதெனில் நவசர்ப்பங்களைத் தன்னுடைய உடலில் ஏற்று மகா சக்தி வாய்ந்தவராக இருக்கும் நாச்சியார் கோயிலில் குடியிருக்கும் கருடாழ்வாரை நோக்கி நேர்த்தி வைத்து எங்கிருந்தாலும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி விரதத்தைக் கடைபிடித்து அமாவாசையன்று துளசி தீர்த்தம் பருகி விரதம் இருந்தும், பிரதமை அன்று பால் மட்டும் பருகி விரதம் இருந்தும், துவிதியை அன்று பழம் மட்டும் உண்டு விரதம் இருந்தும், திரிதியை அன்று ஒரு வேளை இடியாப்பம், தேங்காய்ப் பால் உண்டு விரதம் இருந்தும், சதுர்த்தி அன்று ஒரு வேளை ஒன்பது கொழுக்கட்டைகள் மட்டும் உண்டு விரதம் இருந்து, பஞ்சமி திதி அன்று வேப்பிலை தீர்த்தம் மட்டும் பருகி விரதம் இருந்து ஆடி வளர்பிறை பஞ்சமி அன்று கல் கருடாழ்வாரை நோக்கி வேண்டிடில் வாழ்க்கையில் நல்ல மாற்றமும் அடிமைத் தளையிலிருந்து விடுதலையும் பெறலாம். மேலும் ஆடி மாதம் துவங்கி பஞ்சமிஅன்று ஓர் ஆண்டு விரதம் இருந்து ஒவ்வொரு மாதம் வரும் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வாரை வேண்டி அன்னதானம் வஸ்திர தானம், ஸ்வர்ண தானம், பால் பாயசம் தானம் செய்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
உலகம் பூராவும் கார்கள், பஸ்கள், டிராக்டர்கள், ஜீப்புகள், பல சக்கர வாகனங்கள் பல பல விதமாகத் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் மனதைக் கவரும் வாகனங்கள் மிகச் சிலதான். மக்களைத் திருப்திபடுத்தும் வகையில் கார்களை உருவாக்கவும், குறைபாடுகளைக் களையவும், வாகனத் தொழிற் கூடங்கள் வைத்திருப்பவர்களும், உற்பத்தி யாளர்களும், உதிரி பாகங்கள் விற்பவர்களும், அத்தொழில் கல்வியில் ஈடுபட்டோரும் உலகெங்கும் சிறந்து விளங்க ஆன்மீகத்தில் சில வழிகளைச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். அதில் இதுவும் ஒன்று. நாச்சியார் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வார் இதற்குப் பெரிதும் உதவுகிறார். பெருமாளால் நேராக மேதாவி முனிவருக்கு அளிக்கப்பட்டு பூரண சக்தியோடு சுழலும் பொருள் அனைத்திற்கும் சக்தியூட்ட வல்லபெருமாள் இங்கு உறையும் ஸ்ரீசக்கரத் தாழ்வார் இவரை வழிபடும் முறையைத் தக்க குரு மூலமாய் அறிந்து நேர்த்தி வைத்து வழிபடுவோர் மிகுந்த நலனைப் பெறுவர்.
“வாழ்க்கையில் நாம் செய்யும் தருமங்களுக்கு ஏற்றபடிதான் செல்வம் சேரும்!” என்பது பெரியோர்களின் வாக்காகும். தான தருமங்கள் செய்வதற்கு இயற்கையாகவே சிலருக்கு மனம் வரும். பலருக்குக் கஷ்டங்கள் வரும்போது தருமம் செய்யலாமே என்று மனதில் உதயமாகும். இன்னும் சிலருக்கு தான தருமம் செய்தால் தன் வருமானம் குறைந்து விடுமே என்று நினைத்து தான தருமம் செய்யாமல் பிறரைப் பார்த்து, என் கைப்பணத்தை யாருக்கும் தருமம் செய்ய மாட்டேன். அதே போல் யாரிடமும் தருமம் செய்வது சரி என்றும் சொல்ல மாட்டேன், என்று சொல்லும் சுயநல முட்டாள்களும் உண்டு. தான தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாக வேண்டும் என்றால் சித்தர்கள் அதற்கு ஒரு அற்புத வழியை விதித்துள்ளனர். சிறு வயதிலிருந்தே குடும்பத்தில் உள்ளவர்கள் வெள்ளெருக்கம் பட்டையைத் திரியாக்கி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது பசு நெய் இவற்றால் தினமும் கோயிலில் தீபம் ஏற்றினால் தானம் தருமம் செய்யும் எண்ணமும், வசதியும் கடவுள் அருளால் பெறுவர் என்பது சித்தர் வாக்காகும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நிலைகளில் வாழ விரும்புவர். ஏழையாக இருப்பவர் பணக்காரக் குடும்பங்களில் தங்கள் பெண் குழந்தைகள் வாழ வேண்டும் என்று எந்தப் பொருத்தத்தையும் பாராமல் பெண்ணைக் கொடுத்து விட்டு பிறகு பல துன்பங்களுக்கு ஆளாவர். தற்காலத்துப் பெண்கள் வாகன வசதியும், வீட்டு வசதியும், பண வசதியும் பார்த்து மயங்குவதும் உண்டு, பிறகு கண் கலங்குவதும் உண்டு. இவ்வாறு அவதியுறும் பெண்கள் தங்கள் வாழ்க்கை சரிவர அமைவதற்கும், மேலும் திருமணங்களால் ஏமாறாமல் இருப்பதற்கும் திருமணம் ஆவதற்கு முன்பே இந்த பூஜையைத் தொடர்ந்து செய்து வந்திடில் நலம் பெறுவர். அதாவது கெட்டியான பசு வெண்ணெயில் சிவலிங்கம் செய்து பஞ்சாட்சரம் பத்தாயிரம் முறைக்குக் குறையாமல் ஐந்து மாதம் மூல நட்சத்திரத்தில் ஜபித்து, திருமணமாகி சுகமாகக் குழந்தைகளுடன் வாழும் சுமங்கலிகளுக்குத் தோசையில் இந்த வெண்ணெயைச் சேர்த்து தானமாய் அளித்திடில் நல்ல இடத்தில் பெண்களின் திருமணம் நிறைவேறும்.
புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், சப்த கன்னி பிரச்சனம், சோழி ஜோதிடம், பூமி நீரோட்டக் கலைஞர்கள், ஆழ்கிணறு (போர்வெல்) தொழிலாளர்கள், கிணறு தோண்டுபவர்கள் போன்றோர்கள் முக்கியமாக பிரம்மாவால் படைக்கப்பட்ட பிருகு முனிவரை வணங்குதல் வேண்டும். இந்த முனிவரின் சிலை உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் மட்டுமே உள்ளது. தாமரை புஷ்பத்தின் மேல் தவக் கோலத்தில் அற்புதமாக அமர்ந்துள்ளார். இவரை வணங்கி நெய் தோசையும், பெரிய வெங்காயச் சட்னியும் ஏழைகளுக்கு தானமாய் அளித்தலால் இம்முனிவரின் ஆசி பெற்று நலம் அடையலாம்.
இரண்டு த்வஜ ஸ்தம்பங்கள் (கொடி மரங்கள்) உள்ள கோயிலை நீத்தார் நெடுந்துயர் தீர்க்கும் ஆலயம் என்போர் பெரியோர். இக்கோயிலில் நம்முடைய முன்னோர்களுக்காக அவர்களுடைய திதியில், நட்சத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் தானம் செய்திடில் மிகவும் விசேஷமாகும். இந்தக் கோயில் பெருமாள் கோயிலாக இருந்தால் பெருமாள் கையில் சக்கரம் தாங்கி இருக்கக் கூடாது. சிவன் கோயிலாய் இருந்தால் சுவாமி சுயம்பு லிங்கமாய் இருத்தல் வேண்டும். இக்கோயிலில் செய்கின்ற பூஜைகளும், சேவைகளும் காலம் காலமாய் வரும் பிறவிகளில் நமக்கு நல்லருள் புரியும். குறிப்பாக நிலையான செல்வம் தரும் உத்தியோகமும், குணவதியான மனைவியும் அமைந்து வாழ்க்கை சிறப்படையும்.
பொதுவாக வாழ்க்கையில் தொடுதோஷம், காழ்ப்பு தோஷம், தீட்டு தோஷம் போன்ற தோஷங்கள் யாவும் பெண்கள் அணிகின்ற வளையல்களில் சேரும். ஆகவே வளையல்களை அடிக்கடி முறைப்படி சுத்தம் செய்தல் வேண்டும். மேலும் இந்த மூன்று தோஷங்களும் நம்மைத் தாக்காமல் இருக்க பல வழிகள் உண்டு. அவ்வாறு இருந்தாலும் ஆடிப் பூரத்தன்று கண்ணாடி வளையல்களை வாங்கி சுடுநீரில் சிறிதுநேரம் வைத்து ஆறிய பிறகு அந்த வளையல்களை எடுத்து சுடாத மஞ்சள் நீரில் ஊற வைத்துப் பிறகு 21, 51, 32 போன்ற கணக்குகளில் சேர்த்து அம்மன் கைகளில் கட்டியோ, தொங்க வைத்தோ ஆடிப் பூரம் அன்று தானமாய் அளித்திடில் மேற்கூறிய முத்தோஷம் விலகும். குடும்பம் நலம் அடையும். அன்று தேங்காய் சாதத்துடன் மிளகு கலந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் தானம் நலம் தரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலி, சோர்விலிருந்து நிவாரணம் கிட்டும்.
சத்திய நெறியுடன் அரசாளாமல் மக்களைக் கொடுமைப் படுத்தி மக்கள் பணத்தைத் தனதாக்கி சுகபோக வாழ்வு வாழ்ந்து மக்களால் தூக்கி எறியப்பட்ட அரசர்களுக்கு வரும் சாபம் மிகக் கொடுமையானது. இச்சாபத்திற்கு “சனத்குமரேஸ்வர பங்கபூதி” என்று சித்தர்கள் பெயரிட்டுள்ளனர். இச்சாபம் தீர தக்க வழி காட்டும் குரு தேவை. ஆனால் இத்தகையோருக்குக் குரு கிடைப்பதும் மிகவும் கடினம். தாம் துன்பம் விளைவித்த அனைத்து மக்களுக்கும் சரியான பரிகாரம் செய்து ஆவி தளைகட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் புண்ணியம் செய்து மனிதப் பிறவி எடுத்து நல்ல நிலை அடைய உதவும் தலம் ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீசனத்குமரேஸ்வரர் திருக் கோயிலாகும். உண்மையாக பிராயசித்தம் வேண்டும் என்றால் இக்கோயிலைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
பொதுவாக நாம் வெளியில் செல்லும்போது, வீட்டை விட்டு வெளியே போகும்போது வீட்டில் உள்ளவர்களிடம், “போய் வருகிறேன்!” என்று சொல்லி விட்டுக் கடவுளை வேண்டியே செல்லுதல் முறையாகும். சிலர் “போகிறேன்” என்றும் கோபத்தில, “வரமாட்டேன்” என்றும் சொல்லிச் செல்லுதல் மிகவும் தவறாகும். அவ்வாறு வீட்டில் உள்ளவர்கள் இந்த வார்த்தையைக் கேட்டால் “சிவசிவ ராம்ராம்” என்று சொல்லி தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் இடப வாகனத்தின் மீது கையூன்றியவாறு காட்சி தரும் உருவத்தை தியானித்து, “திருநாவலூர் பக்தஜனேஸ்வர இடப வாகன தட்சிணாமூர்த்தியே காப்பாய்!” என்று மனமுருகி வேண்டிடில் வெளியில் சென்றவர் பத்திரமாய்த் திரும்புவர். பண்ருட்டி, கடலூர் ஆகிய ஊர்களிலிருந்து திருநாவலூருக்கு பஸ் வசதி உண்டு.
பொதுவாக மூத்த மகனுக்கு கிழக்குப் பார்த்த வீடும் அல்லது கிழக்குப் பார்த்த வாசல் அமைவது நலம் தரும். பச்சை வண்ணம் நலம் தரும். மூத்த மகளுக்கு தென் கிழக்குப் பார்த்த வீடும், தென்கிழக்கு வாசல் நலம் செய்யும். வடக்குப் பார்த்த வீடு, வாசல் நடு மகனுக்கு நலம் செய்யும். வடகிழக்குப் பார்த்த வீடு வாசல் கடைசி மகனுக்கு நலம் செய்யும். மேற்கு வாசல் வீடு கடைசி மகளுக்கு நலம் செய்யும். தந்தைக்கு வடமேற்கு வாசல் உகந்தது. தென்மேற்கு வீடு, வாசல் தாய்க்கு உரித்தானது. இவ்வாறு வீடுகள் அமைவதும் நலம் தரும். அல்லது வீட்டில் உள்ள அறைகளாவது அமைதல் நலம் தரும்.
Textile Industries, துணி வியாபாரம், தையல் தொழில், புதுப்புது ஆடை அலங்காரம் செய்வோர், துணித் துறையில் பொறியியல் துறை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற பெரிய பெரிய தொழிற்சாலைகள் உலகெங்கும் வைத்திருப்போர், பஞ்சு நுட்ப ஆராய்ச்சி மையத்தி லுள்ளோர், மேலும் வாழ்க்கையில் மானம் இழக்காமல் வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற அனைவரும் அருள் பெற வேண்டிய சித்தர் “உகந்த லிங்க சுவாமி” என்ற உத்தமர். இவர் ஜீவ சமாதி என்றும் பேசும் தெய்வம். இந்த இடத்தை “சிக்கல் ஆண்டவர்” என்றும் அழைப்பர். நாகப்பட்டி னத்திலிருந்து திருவாரூர் போகும் நெடுஞ்சாலையில் சிக்கல் சிங்காரவேலன் கோயிலுக்கு முன்பு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. திருக்கோயிலூர் மடத்தைச் சார்ந்த வேதாந்த மடம் இந்த ஜீவ சமாதி கோயிலைப் பராமரிக்கின்றது.
நல்ல குணங்கள், நல்ல எண்ணங்களே ஒருவரை உயர்த்தும். குழந்தைப் பருவத்திலிருந்தே தாய், தந்தையர் தங்கள் குழந்தைகளுக்கு இந்த அறிவைப் புகட்ட வேண்டும். இது பெற்றோர்களின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். இவ்வாறு அறிவு புகட்டுவதோடு மட்டுமல்லாமல் தாங்களும் அவ்வாறு குழந்தைகள் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும். நல்ல குணங்கள், நல்ல எண்ணத்தோடு வாழுகின்றவர்கள் இப்பாடலை தினமும் 108 முறைக்குக் குறையாமல் ஜபித்திடில் கீர்த்தியும் புகழும் தானே தேடி வரும்.
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம் |
குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: சபலிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே ||
சைவத்தில் பல பிரிவுகள் உண்டு. சைவத்தின் தலைவராக அதிகார நந்தியே முடிசூட்டியுள்ளார். அதில் அனாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், மகாந்திர சைவம், வீர சைவம், பார சைவம் என்ற பிரிவுகள் உண்டு. சைவத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் அனைத்தையும், வேண்டுதல் அனைத்தையும், எதிர் கால செயல் திட்டங்கள் அனைத்தையும் அதிகார நந்திகள் இருக்கும் கோயிலில் செப்புதல் வேண்டும். அதிகார நந்தி முன் தன் நேர்த்தியைச் சொல்லிக் கீழ்வரும் பாடலை 51 முறைக்குக் குறையால் ஓதுதல் வேண்டும்.
கட்டுவடம் எட்டும் உறு வட்ட முழவத்தில்
கொட்டுகரம் இட்ட ஒலி தட்டும் வகைநந்திக்கு
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் - சீர்
வட்ட மதிலுள் திகழும் வண்திரு ஐயாறே
என்று 51 முறை ஜபித்து “ஐயாறப்பா ஐயாறு” என்று மூன்று முறை முழங்க வேண்டும். இவ்வாறு முழங்கிடில் அனைத்துக் காரியமும் சித்தியாகும்.
பக்தி என்பது உணரக் கூடிய விஷயம்தான் அறியக் கூடியதல்ல என்பதை அவரவர் வாழ்க்கை அனுபவங்களை வைத்துதான் சொல்ல முடியும். திருமால் சிவன், பிரமன் ஆகியோரைத் தன்னுடன் இணைத்துத் திருக்கோலம் கொண்ட இடம்தான் திருமுக்கூடல் ஆகும். காஞ்சீபுரம்-செங்கல்பட்டு வழியில் பழைய சீவரம் மலைக் கோயிலை அடுத்து ஆற்றைக் கடந்து சென்றால் தென் கரையில் இவ்வூரை அடையலாம். இக்கோயிலின் வடகிழக்கில் மேற்கு நோக்கிய வீர அனுமான் மிகவும் சக்தி வாய்ந்தவர். கனக பூஷணி என்ற அற்புதமான தோடு அணிந்துள்ள சிலையாகும். இவரை வேண்டி முறையாக வழிபட்டு தேன்குழல் முறுக்கு தானமாக அளித்திடில் எத்தகைய கடன்களையும் தீர்த்து வைக்கும் அற்புத சக்தியை அளிப்பவர் ஆவார். கடன்பட்டார் நெஞ்சம் கலங்காமல் காத்தருளும் வீரஅனுமான் இவரே.
30 வயதிற்கு மேற்பட்டு திருமணம் ஆகாமலும் தன்னுடைய தங்கை, தம்பிகள், தாய், தந்தையர் ஜீவனத்திற்காக வாழும் பெண்களின் தேவையை, நிலைமையை அறிந்து தனது சுய நலத்திற்காக அவர்களை வேலைக்கு அமர்த்தி வேலை வாங்கும் முதலாளிகளையும், காமாந்தர்களையும் தண்டித்து தனியாக வாழ முடியாத பெண்டிர்கள், தங்களுக்குத் தீங்கு இழைத்தவர்களை கடவுளருளால் தண்டிக்க ஒரு வழியுண்டு. அதுதான் சங்கர தீர்த்தத்தில் (குப்த கங்கை) நீராடி ராகுவும், கேதுவும் சேர்ந்துள்ள இடத்தில் வேண்டினால் தங்களைத் துன்புறுத்தியவர்கள் தண்டனை பெறுவது உண்மை. அதோடு மட்டுமல்லாமல் தாங்களும் துன்ப வாழ்வில் இருந்து விடுதலை பெற முடியும். இந்த குப்த கங்கை உள்ள இடம் ஸ்ரீவாஞ்சியமாகும். கும்பகோணம்-நன்னிலம் சாலையில்அமைந்துள்ளது. சுவாமி சுயம்புலிங்க மூர்த்தி, தேவி ஸ்ரீமங்களாம்பிகை.
பல இலவசத் திருமணங்களைத் தங்களுடைய சுய சம்பாத்தியத்தில் நடத்திடில் எதிர் காலத்தில் இவர்களுடைய திருமணம் மிகவும் சிறப்பாகவும் எளிதாகவும் நடக்கும் என்பது பெரியோர் வாக்காகும். அதைப் போலவே பிள்ளைப் பேறு வைத்தியத்தை இலவசமாகச் செய்திடில் குழந்தை பாக்கியமும் சீராக இருக்கும் என்பது பெரியோர் அருள் வாக்கு ஆகும். இந்த இரண்டும் ஒவ்வொருவர் வாழ்க்கையில் செய்ய வேண்டிய 32 அறங்களில் சேரும். இந்த இரண்டு நற்காரியங்களை முக்கியமாகக் கொண்டு பலருக்கும் உதவி செய்தனர் அத்திரி மகரிஷியும் அனுசூயா தேவியும். இவர்களுக்கு சத்புத்திர பாக்கியம் கிடைக்க ஸ்ரீநாரத மகரிஷியைக் கேட்க அவரும், “ஸ்ரீவாஞ்சியம் சென்று சுயம்பு மூர்த்தியாகிய ஸ்ரீவாஞ்சிநாதரை வேண்டி நந்தவனம் வைத்துஅதில் சந்தன மரக் கன்றுகளை நட்டு நன்றாக வளரச் செய்திடில் பூந்தோட்டம் வளர வளர குழந்தை பாக்கியம் கிட்டும்!” என்றார். அத்திரி மகரிஷியும், அனுசூயா தேவியும் அவ்வண்ணமே செய்ய சோமன், துர்வாசர், தத்தாத்ரேயர் போன்ற இறை அவதாரங்களே குழந்தையாகப் பிறந்தனர். குழந்தை பாக்கியம் பெற விரும்புவோர் இவ்வாறு செய்திடில் தெய்வீகக் குழந்தைகளைப் பெறலாம் என்பது உறுதி.
வடநாட்டு காசிக்குப் போய் நிம்மதி இழந்து திரும்புகின்றவர்கள் ஏராளம். ஏனென்றால் காசிக்கு அழைத்துப் போகிறவர்களும் அங்கு இருக்கும் பண்டாக்களும், சாஸ்திரிகளும் அவர்கள் நமக்கு மொழி தெரியாது என்று அறிந்து ஆடுகின்ற ஆட்டங்களும் நமக்குக் கொடுக்கின்ற துன்பங்களும் ஏராளம். எடுத்ததற்கெல்லாம் பணம் பறிப்பார்கள். இதை நிறைய பேர் வெளியில் சொல்வதில்லை. “கங்கா தேவி மட்டும் மிகப் புனிதமானவள்”, என்று சொல்லி வாயை மூடி விடுவர். ஏன் தமிழ் தெரிந்தவர்கள் கூட வடமொழி தெரிந்தவர்போல் நடித்து ஒதுங்கி விடுவர் ஏதாவது உதவி கேட்டிடில். இத்தகைய துன்பங்களை அனுபவித்து நீங்கள் காசிக்குப் போக வேண்டுமா? நினைத்துப் பாருங்கள். வட நாட்டுக் காசியை விட அதிகமாக அருளைப் பொழியும் இடம் தென் தமிழ் நாட்டில் உள்ளது. அதுதான் ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்-நன்னிலம் சாலையில் உள்ளது. இத்திருத்தலத்தில் இறப்பவருக்குச் சிவனே காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுகிறார். அதோடு மட்டுமல்லாமல் வடநாட்டு காசியில் தவறுகளையும், துன்பங்களையும், இன்னல்களையும் அளித்தவர்களுக்கு பிராயசித்தம் தரும் இடம் இது ஒன்றுதான். ஆகவே தென்தமிழ் நாட்டோரே! ஸ்ரீவாஞ்சியம் சென்று குப்த கங்கையில் நீராடி நீத்தார் கடன் தீர்ப்பீர். வடநாட்டுக் காசியை விட அதிக பலனைப் பெறுவீர்.
தற்காலத்தில் குழந்தைகளைப் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி விட்டு பயந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் ஒரு சின்ன ரிக்ஷா அல்லது வேன், ஆட்டோ - இந்த வாகனங்களில் குழந்தைகளையும், பைகளையும் திணித்துக் கொண்டு போவதோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான தெருக்களில் போகும்போது எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று தாய் தந்தையர் இறைவனை வேண்டாத நாளே கிடையாது. மேலும் பள்ளியில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைத் திடீரென்று தள்ளி விடுவதால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து துன்பம் வராமல் இருக்க பெரியோர்கள் பல வழிகள் வகுத்துள்ளார்கள். அதில் முக்கியமான ஒன்று நாம் நம் குழந்தைகளை ஓட்டல், பீச் என்று அழைத்துச் செல்லாவிட்டாலும் பெற்றோர்கள் இந்த ஆலயத்திற்குக் குழந்தைகளை அவசியம் அழைத்துச் சென்று சுவாமியின் திருஅருட் கண் பார்வை படும்படிச் செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களையும் குழந்தைகள் மனப்பாடம் செய்யும்படி செய்தல் வேண்டும். இத்தலத்திற்கு திருப்பாற்கடல் என்று பெயர். சென்னை-பெங்களூர் சாலையில் காவேரிப்பாக்கம் காவல் நிலையம் அருகில் இடப்பக்கம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆற்காடு, வாலாஜா, சித்தூர் செல்லும் பேருந்துகளில் சென்று காவேரிப்பாக்கத்தில் திருப்பாற் கடலில் குடிகொண்டுள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசரை தரிசிக்கலாம். குழந்தைகள் மனப்பாடம் செய்து தினமும் தாய், தந்தை முன் அடிக்கடி சொல்லச் சொல்ல வேண்டிய மந்திரம்.
நமோ பகவதே துப்யம் புஷாய மஹாத்மநே |
ஹரயே அத்புத ஸிம்ஹாய ப்ரஹ்மணே பரமாத்மநே ||
நமக்கு ஒருவர் உதவி செய்ய வருகிறார் என்றால் அது தெய்வத்தின் திருஅருளால்தான் நடக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் நமக்கு உதவ பிறர் முன் வந்தாலும் அதைத் தடுக்க பல இடைத் தரகர்கள் புகுந்து கெடுத்து விடுவார்கள். அது உதவ வருபவரின் மனைவியாக இருக்கலாம், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி, மாமனாகவும் இருக்கலாம். அல்லது அவர்களின் ஏஜெண்டுகளாகவும், பிரதிநிதிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு நமக்கு வரும் உதவியைத் தடை செய்பவரை செயல் இழக்கச் செய்து நமக்கு வரும் உதவியை முறையாகப் பெறுவதற்கு ஆன்மீகத்தில் பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் பாபநாச சிவன் காட்டும் வழி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வழியாக இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். அக்கோயிலின் தலவிருட்சம் களா மரம் ஆகும். அடியில் மூன்று சுவடுகளோடு முக்களா நிற்கிறது. அதனடியில் எம்பெருமான் “முக்களா லிங்கர்” எழுந்தருளியுள்ளார். இவரிடம் நேர்த்தி வைத்து நமக்கு உதவுகின்றவரின் செயலுக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று வேண்டி இடியாப்பம் தானம் செய்து, உள்ளாடைகள் தானமாக அளித்தால் தடங்கல்கள் செய்பவரைக் களைந்து விடுகிறார் சிவன். உதவி தானே தேடி வரும்.
வாழ்க்கையில் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் ஆகும். இதில் மெய், வாய், கண், மூக்கு, செவி மிக முக்கியமானது ஆகும். அதில் கண்களைக் கொண்டு அனைத்துக் காரியங்களையும் செய்வது மனித இனமாகும். ஆகவே கண்ணொளி மிக முக்கியமாகும். இந்தக் கண்களுக்கு எத்தகைய துன்பமும் தராமல் பாதுகாக்க ஆன்மீகத்தில் பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேவதானப்பட்டி மூங்கில் காமாட்சியின் அருளாகும். பெரியகுளத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் கோயில் கொண்டுள்ளாள் மூங்கில் காமாட்சி அம்மன். இந்தக் கோயிலில் மூன்று பெரிய நெய் விளக்குகள் இரவு பகலாய் எரிகிறது. இந்த நெய் விளக்குகளுக்கு நெய் தானம் காணிக்கையாய் அளித்திடில் கண் தொல்லை நீங்கும். கண்ணொளி பெருகும் என்பது நடைமுறை அனுபவம் ஆகும். கண்களைப் பாதுகாக்க உத்தம வழி இதுவே.
வாழக்கையில் நாம் எத்தனை பேரை ஏசியுள்ளோம்! வாயில் வந்தவாறு திட்டியுள்ளோம். இவற்றையெல்லாம் நாம் கணக்கு வைத்துள்ளோமா? யோசித்துப் பாருங்கள்! பலவிதமான பேச்சுகளைப் பேசி, கெட்ட விஷயங்களைப் பெரிது பண்ணியும் பலரைத் திட்டியும் வார்த்தைகளைக் கொட்டி யாருக்கு அபசாரம் செய்து விட்டோம் தெரியுமா? சரஸ்வதி தேவிக்குதான் அபசாரம் பண்ணி விட்டோம். இதற்கு நாம் பரிகாரம் தேடித்தான் தீர வேண்டும். அதற்கு ஒரு வழியுண்டு. அதுதான் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருகின்ற மூல நட்சத்திரத்தில் மௌன விரதம் இருந்து சரஸ்வதியின் சுலோகத்தை மனதிற்குள்ளேயே ஜபித்திடில் வாக்கு சுத்தி அடையும். சரஸ்வதிக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் மூலம் ஆகும். மேலும் உண்ணா விரதமும் மௌனமும் சேர்ந்தால் ஆன்மீகத்தில் மனம் அதிகம் ஈடுபடும். திருச்சி லால்குடி சப்த ரிஷீஸ்வரர் திருக் கோயிலில் ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தியும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியும், ஸ்ரீசரஸ்வதி தேவியும் குடிகொண்டுள்ளனர். இந்த அபூர்வ தெய்வங்களின் சங்கமமாகத் திகழும் இந்த ஆலயத்தில் மூல நட்சத்திரத்தன்று உண்ணா நோன்பும் மௌன விரதமும் கடைபிடித்து ஏழைக் குழந்தைகளுக்கு வெண்ணெய் தடவிய ரொட்டி (bread) தானமாக அளித்தலால் வக்கீல்கள், கமிஷன் ஏஜெண்டுகள், தரகர்கள், Medical representatives போன்றோர் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
வாழ்க்கையில் வைர மூக்குத்தி, கம்மல், வளையல், புல்லாக்கு, கடுக்கன் இவைகளை அனைவரும் அணிந்து விட முடியாது. அவரவர் நட்சத்திர, கிரக ராசி அமைப்புகளுக்கு ஏற்றவாறுதான் அணிதல் வேண்டும். சரியான வைரமாக அமையா விட்டால் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது செலவழிந்து விடும். பேரன், பேத்திகள், மருமகள், மருமகன்கள் மூலமாய் வீண் செலவுகளாய் உங்களுடைய வருமானம் தேய்ந்து விடும். ஆகவே வைரம் அணிய வேண்டும் என்றால் கொடுமுடி ஸ்ரீமகுடலிங்கர் சன்னதியில் விரதம் இருந்து வைர அணிகலன்களை சுவாமியின் திருவடிகளில் வைத்து பூஜித்து அணிந்திடில் வைரம் துன்பம் தராது. உலகம் பூராவும் இருக்கும் வைர வியாபாரிகள் இங்கு நேர்த்தி வைத்து விரதம் இருந்து வைர வியாபாரம் செய்திடில் துன்பம், நஷ்டம் அடைய மாட்டார்கள். கரூரிலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் தலம். இதைப்போலவே சிவப்புக் கற்கள் சிறப்பாக பலன் தர அருளும் இடம் திருஅண்ணாமலையாகும். மரகதப் பச்சை சிறப்பாகப் பலன் தர அருளும் இடம் திருஈங்கோய் மலையாகும். மாணிக்கம் சிறப்பாக பலன் தர அருளும் இடம் இரத்தினகிரி (சிவாயமலை) ஆகும். நீலமணிக் கற்கள் சிறப்பாக பலன்தர அருளும் இடம் திருக்குற்றாலம் (பொதியமலை).
அமைதியாய் இருக்கின்ற பக்கத்து வீட்டுக்காரர் களுடன் வலி சண்டை இழுப்பது நமக்கு நோயாய் சிறிது காலம் கழித்து வருகிறது. எப்பொழுது யார் வீட்டுக்குக் கல்யாணப் பத்திரிகை வருகிறது என்று எதிர்பார்த்து வந்தவுடன் மூன்று வேளையும் சென்று பொறுக்க உண்டு விட்டு, அவர்களுக்குச் சரியாக மொய் எழுதாமல் விட்டவர்க்கு சிறிது காலம் கடந்ததும் மருத்துவ செலவு வருவது பலருக்கும் சகஜமாகி விட்டது. வீணாக திருமண பாக்கிகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்! பொதுவாக திருமணங்களில் பலருடைய எண்ணங்களும் ஏக்கங்களும் அவர்கள் பரிமாறும் உணவுகளில்தான் தங்கி நம்மைத் தாக்குகின்றன. ஆகவே ஓசித் திருமணங்களை முடிந்த மட்டும் விலக்கி வைத்து திருமணப் பத்திரிக்கைகளை பூஜை அறையில் வைத்து திருமண நாள் அன்று பூஜிக்க வேண்டிய துதி இது. இத்துதியை ஜபித்து மண மக்கள் நலமுடன் வாழ வேண்டுங்கள். அது போதும், உங்களையும் நோய் நொடிகள் அண்டாது.
நமோ மத்ஸ்ய கூர்மாதி நாநா ஸ்வரூபைஹி
ஸதா பக்தகார்ய உத்யதாய ஆர்த்ரி ஹந்த்ரே
விதா த்ராதி ஸர்க்க ஸ்திதி த்வம்ஸ கர்த்ரே
கதா சங்க பத்மாரி ஹஸ்தாய தேஸ்து.
புதுக்கோட்டை பொன்னமராவதி சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வெள்ளாற்றங் கரையில் பேரையூர் நாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கு எதிரே இயற்கையாய் அமைந்த தடாகம் உள்ளது. இதனைப் புண்ணிய புஷ்கரணி என்பர். இந்த புஷ்கரணி மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த புஷ்கரணியைச் சுற்றி நிறைய நாக வடிவ சிற்பங்கள் உள்ளன. இத்தடாகத்தை வலம் வந்து வணங்கி தினமும் ராகுகாலத்தில் பூஜை செய்து கல்கண்டு பால் தானமாகத் தொடர்ந்து அளித்து வந்திடில் காது கோளாறுகள் உடையவர், ENT வைத்தியர்கள், மேலும் சுரங்கத் தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், இசைக்கருவிகள் செய்வோர், அத்துறையில் இருப்போர் பெருத்த நலம் அடைவர். தோல் சம்மந்தமான நோய்கள் தீரும்.
கோயில் நிர்வாகத் துறையில் இருப்பவர்களும், குருக்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள் தாம் செய்வது புனிதமான வேலை என்று எண்ணாமல்அதில் எவ்வளவு பண வரவு வரும் என்று எண்ணுவதே தலையான கடமையாக நினைக்கின்றார்கள். இந்த எண்ணம் என்று மாறுகிறதோ அன்றிலிருந்துதான் வாழ்க்கையில் சுகம் காண்பர்.
கங்கையில் தானம் தர்மம் செய்த புண்ணியத்தை தென்தமிழ் நாட்டிலேயே பெறுவதற்கு வழிவகுத்துத் தந்துள்ளனர் சித்தர்கள். ஆகவே கங்கைக்குப் போய் தானம் செய்யவில்லையே என்று யாரும் ஏங்க வேண்டாம். கங்கைக்குச் சென்று வருவது என்பது இப்பொழுது எளிதாகஇருந்தாலும் தென்தமிழ் நாட்டினர் கங்கை பலனை தமிழ் நாட்டிலேயே பெறுவதற்காக வரம் வேண்டினார் ஒரு உத்தம மகரிஷி. அவர் பெயர்தான் உரோமச முனிவர். அந்த உரோமச முனிவருக்கு வரம் அருளிய மூர்த்தி ஸ்ரீவரமூர்த்தி ஈஸ்வரர். இவர் அருளிய இடம் அரியதுறை. ஆகவே இந்த அரியதுறை போக வேண்டும் என்றால் சென்னை பொன்னேரி தாலுகாவில் கவரப்பேட்டை RMK பொறியியல் கல்லூரிக்கு எதிரில் செல்கின்ற கீழ்முதலம் பேட்டுச் செம்மண் சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது அரியதுறை. வடநாட்டு கங்கை காண டிராவல் ஏஜெண்டுகள் மூலம் படாதபாடுபட்டுக் காசி போவதைவிட அதிகமாக எளிதில் காசி சென்ற புண்ணியத்தைப் பெற்று விடலாம் இந்த ஸ்ரீவரமூர்த்தி கோயில் சென்று தான தர்மம் செய்திடில்.
